search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி
    X

    அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

    • கடந்த 2017-ல் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் உயிரிழந்தனர்.
    • துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தின் அருகில்தான் பிரபல சூதாட்ட மையம் உள்ளது.

    அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நெவாடா பல்கலைக்கழகம் உள்ளது. உள்ளூர் நேரப்படி புதன்கிழமை காலை இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    துப்பாக்கிச்சூடு நடைபெற்றதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகப்பட்ட நபரை சுட்டு வீழ்த்தினர். பொதுமக்கள் வீட்டிற்குள்ளே இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்தில் அருகில் உள்ள விமான நிலையத்தில் சேவை பாதிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் அருகில்தான் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடும் சுதாட்ட மையம் உள்ளது.

    சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர், "நான் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மூன்று முறை துப்பாக்கியால் சுடும் பெரிய சத்தத்தை கேட்டேன். அதன்பின் இரண்டு முறை சத்தம் கேட்டது. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. ஆனால் போலீசார் வந்த பிறகும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் நான் அடித்தளத்திற்கு ஓடினேன். நாங்கள் அங்கு 20 நிமிடங்களில் பதுங்கி இருந்தோம்" என்றார்.

    லாஸ் வேகாஸில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது மிகப்பெரிய அளவில் துப்பாக்கிச்சூட நடைபெற்றது. இதில் 60 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×