search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அவமானம் என உலகத் தலைவர்கள் சொல்கிறார்கள்: டொனால்டு டிரம்பை நேரடியாக விமர்சித்த கமலா ஹாரிஸ்
    X

    "அவமானம்" என உலகத் தலைவர்கள் சொல்கிறார்கள்: டொனால்டு டிரம்பை நேரடியாக விமர்சித்த கமலா ஹாரிஸ்

    • உலக தலைவர்கள் டொனால்டு டிரம்பை பார்த்து சிரிக்கிறார்கள்- ஹாரிஸ்
    • இஸ்ரேலை கமலா ஹாரிஸ் வெறுக்கிறார். அதேபோல் அந்த பிராந்தியத்தில் உள்ள அரபு மக்களையும் வெறுக்கிறார்- டிரம்ப்

    அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்பாளர்களான டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் ஆகியோர் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான காசா போர் குறித்து பேசும்போது டொனால்டு டிரம்ப் "நான் அதிபராக இருந்திருந்தால் இந்த போர் இந்த நிலையை எட்டிருக்காது. கமலா ஹாரிஸ் இஸ்ரேலை வெறுக்கிறார். அவர் அதிபராக பதவியேற்றால் 2 ஆண்டுகளில் இஸ்ரேல் அழிந்துவிடும். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இங்கு வந்த போது கூட கமலா அவரை சந்திக்கவில்லை." என்றார்.

    அதற்கு கமலா ஹாரிஸ் "டிரம்ப் சொல்வது உண்மையல்லை. இஸ்ரேலுக்கு தனது ஆதரவு" என வலியுறுத்தினார்.

    மேலும் கமலா ஹாரிஸ் "அமெரிக்காவின் துணை அதிபராக நான் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளேன். உலக தலைவர்கள் டொனால்டு டிரம்பை பார்த்து சிரிக்கிறார்கள். நீங்கள் அவமானம் என அவர்கள் சொல்கிறார்கள்" என நேரடி தாக்குதலை முன்வைத்தார்.

    டொனால்டு டிரம்ப் ஜோ பைடனின் நிர்வாகத் தோல்வியை தொடர்ந்து முன்வைத்து கமலா ஹாரிஸை தாக்குதல் நடத்த தொடங்கினார். இதற்கு "நீங்கள் ஜோ பைடனை எதிர்த்து போட்டியிடவில்லை" என கமலா ஹாரிஸ் பதில் அளித்தார்.

    உக்ரைன்- ரஷியா போர் குறித்து டொனால்டு டிரம்ப் கூறுகையில் "ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நிறுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை நன்றாகத் தெரியும். அவர்களுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. எனவே நான் பிரச்சனையை தீர்த்து வைப்பேன். போர் தொடங்கிய 3 நாட்களுக்கு பிறகு ஜோ பைடன் அரசு சமாதானத்துக்கு அழைப்பு விடுத்தது. நம் நாட்டின் வரலாற்றில் மிக மோசமான அதிபர். கமலா ஹாரிஸ்தான் மோசமான துணை அதிபர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையை ஜோ பைடனைவிட வேகமாக வெளியேற்றி இருப்போம். இதனால் பல அமெரிக்கர்கள் நம்மை விட்டுச் சென்றிருக்கமாட்டார்கள். கமலா ஹாரிஸ் எந்த நாட்டின் பாரம்பரியத்தைச் சேர்ந்த வராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை" என்றார்.

    அதற்கு கமலா ஹாரிஸ் "இவர் எப்போதுமே நிறைய பொய்கள் சொல்வார். உலகில் சர்வாதிகாரிகளை போற்றுகிறவர். ரஷிய அதிபர் புதினை ஆதரிப்பவர். அதேபோல் வடகொரியா அதிபர் கிம் ஜாங்குடன் காதல் கடிதங்களை பரிமாறிக்கொள்வதும் நம் அனைவருக்குமே தெரியும்.

    டிரம்ப் தான் அதிபரானால் ரஷ்யா- உக்ரைன் போர் 24 மணி நேரத்தில் முடிந்துவிடும் என்று கூறுகிறார். டிரம்ப் அதிபராக இருந்தால், தற்போது புதின் உக்ரைன் தலைநகர் கீவிலேயே குடியேறி இருப்பார். டிரம்ப் இன்னும் பதவியில் இருந்திருந்தால், புதின் போலந்தில் தொடங்கி ஐரோப்பா முழுவத்தையும் தாக்க திட்டம் தீட்டி இருப்பார். புதினிடம் டிரம்ப் அடிபணிந்து விடுவார். உங்களை மதிய உணவிற்கு உண்ணும் ஒரு சர்வாதிகாரி என்று அறியப்பட்டவருடன் நட்பாக நீங்கள் நினைக்கிறீர்கள்.

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் ஜோபைடனின் முடிவை நான் ஏற்றுக் கொண்டேன். தலிபான் என்ற பயங்கரவாத அமைப்போடு டிரம்ப் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க மக்களைப் பிளவுபடுத்துவதற்கு தனது தொழில் வாழ்க்கையில் தொடர்ந்து முயற்சித்த ஒருவர். அதிபராக இருக்க விரும்பும் ஒருவர் நம்மிடம் இருப்பது ஒரு சோகம் என்று நான் நினைக்கிறேன். நாம் அனைவரையும் ஒன்றிணைத்து கொண்டு வரும் அதிபரையே மக்கள் விரும்புகிறார்கள்" என பதிலடி கொடுத்தார்.

    Next Story
    ×