என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்15 Nov 2020 7:54 AM IST (Updated: 15 Nov 2020 7:54 AM IST)
தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா நாளை தொடங்குகிறது.
உடன்குடி:
திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு குதிரைமொழி தேரியில் கற்குவேல் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் கள்ளர் வெட்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு திருவிழா நாளை (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் சிறப்பு அலங்கார பூஜைகள், மாலை 6 மணிக்கு வில்லிசை நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நாட்களான அடுத்த மாதம் (டிசம்பர்) 13, 14, 15 ஆகிய தினங்களில் காலை, பகல், இரவு நேரங்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கின்றது. அடுத்த மாதம் 15-ந் தேதி மாலை 4 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவிழா தொடக்க விழாவான நாளை மற்றும் டிசம்பர் 13, 14, 15, 16 ஆகிய 5 நாட்களுக்கும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை. ஆனால் சுவாமிக்கு செய்ய வேண்டிய அனைத்து பூஜைகளும் வழக்கம் போல் நடைபெறும். கள்ளர் வெட்டு நிகழ்ச்சியும் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story
×