search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனந்தபுரி எக்ஸ்பிரஸ்"

    • திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலம் சிராயின்கீழ் பகுதியில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.
    • சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலம் பல்ராமபுரம் பகுதியில் ஒரு நிமிடம் நின்று வரும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்டிரலில் இருந்து வரும் 24-ந் தேதி மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.12695) கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலம் சிராயின்கீழ் பகுதியில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

    திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 25-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12624) கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலமான கழக்கூட்டம், சிராயின்கீழ் மற்றும் கடகவூர் பகுதிகளில் ஒரு நிமிடம் நின்று வரும்.

    மேலும், கொல்லத்தில் இருந்து 25-ந் தேதி பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20636) கூடுதல் நிறுத்தமாக கேரள மாநிலம் பல்ராமபுரம் பகுதியில் ஒரு நிமிடம் நின்று வரும்.

    இதேபோல, கொச்சுவேலியில் இருந்து வரும் 25-ந் தேதி பிற்பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06429) ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 3.40 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லைக்கு காலை 6.30 மணிக்கு பதிலாக 6.05 மணிக்கு சென்றடையும்.
    • சென்னை எழும்பூருக்கு அடுத்தநாள் காலை 6.05 மணிக்கு வந்தடையும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னை எழும்பூரிலிருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு இரவு 8.10 மணிக்கும், கொல்லத்திலிருந்து தினமும் மாலை 3.40 மணிக்கு சென்னை எழும்பூருக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரும் அக்டோபர் 1-ந்தேதி முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவிரைவு ரெயிலாக மாற்றி இயக்கப்பட உள்ளது. இதேபோல, இந்த அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு பதிலாக 20 நிமிடத்துக்கு முன்னதாக இரவு 7.50 மணிக்கு புறப்படும்.

    இந்த ரெயில் திருச்சிக்கு நள்ளிரவு 1.30 மணிக்கு பதிலாக 1.05 மணிக்கும், மதுரைக்கு அதிகாலை 3.50 மணிக்கு பதிலாக 3.20 மணிக்கும், நெல்லைக்கு காலை 6.30 மணிக்கு பதிலாக 6.05 மணிக்கு சென்றடையும். கொல்லத்துக்கு மறுநாள் காலை 11.40 மணிக்கு பதிலாக 11.15 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து மதியம் 3.40 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 50 நிமிடம் முன்னதாக மதியம் 2.50 மணிக்கு கொல்லத்திலிருந்து புறப்பட்டு, சென்னை எழும்பூருக்கு அடுத்தநாள் காலை 6.05 மணிக்கு வந்தடையும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், தாம்பரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டன.
    • ரெயில் 1 மணி நேரம் தாமதமாக 8.15 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தடைந்தது.

    நாகர்கோவில் :

    சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு தினமும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர தாம்பரத்தில் இருந்து திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ரெயில்கள் அனைத் தும் இரவில் சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலையில் நாகர்கோவில் வந்து சேரும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், தாம்பரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டன. ஆனால் நாகர்கோவில் நிலையத்திற்கு தாமதமாக வந்தது. காலை 5 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு நிலையம் வரவேண்டிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அரை மணி நேரம் தாமதமாக வந்தது.

    தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரெயில் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் வர வேண்டும். ஆனால் இந்த ரெயில் 1 மணி நேரம் தாமதமாக 8.15 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தடைந்தது.

    நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக காலை 8 மணிக்கு நாகர்கோவில் டவுன் நிலையத்தை வந்தடையும். ஆனால் இன்று சுமார் 3 மணி நேரம் தாமதமாக பகல் 11 மணிக்கு நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

    இதனால் அந்த ரெயிலில் வந்த பயணிகள் தவிப்புக்குள்ளானார்கள். அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு ரெயில் வந்து சேராததால் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. திருச்சியில் தண்டவாளம் பராமரிப்பு பணி நடப்பதால், ரெயில்கள் அனைத்தும் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் சென்னை சென்ற தென்மாவட்ட ரெயில்களும் பல மணி நேரம் தாமதமாக சென்றன.

    • வருகிற 7-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது
    • நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்திற்கு வரும்

    நாகர்கோவில் :

    சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி விரைவு ரெயில் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சென்னை செல்வதற்கு ஒரு முக்கியமான ரெயில் ஆகும்.

    ஆனால் இந்த ரெயில் காலை மிக தாமதமாக நாகர்கோவில், இரணியல் மற்றும் குழித்துறை ரெயில் நிலையங்களை வந்தடைந்தது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். பயண நேரத்தை குறைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி பாராளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில் ரெயில்வே நிர்வாகம் பயண நேரத்தை தற்போது குறை த்துள்ளதாக அறிவித்து ள்ளது.

    அனந்தபுரி ரெயில் சென்னையில் இருந்து இரவு 8 மணி 10 நிமிடத்திற்கு புறப்பட்டு திருநெல்வேலி, ஆரல்வாய்மொழி போன்ற இடங்களில் அதிக நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு காலை 9 மணிக்கு மேல் நாகர்கோவில் டவுண் நிலையம் வந்து கொண்டிருந்தது. இது பயணிகளுக்கு மிகவும் சிரமத்தை கொடுத்து வந்தது. இதுகுறித்து கன்னியாகுமரி பாராளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அளித்த மனுவில், அனந்தபுரி ரெயில் வழியில் மற்ற ரெயில்கள் கடந்து செல்வதற்க நிறுத்தி வைப்பதை சுட்டிக்காட்டி அவற்றை தவிர்க்கும் வண்ணம் ெரயில்களின் அட்டவணையை சீர் செய்ய வேண்டுமென கேட்டு க்கொண்டார்.

    மேலும் அனந்தபுரி ரெயிலின் வேகத்தை அதிகப்படுத்தி இயக்க வலியுறுத்தியும் கடிதம் எழுதி இருந்தார். இதை கருத்தில் கொண்ட ரெயில்வே நிர்வாகம் வருகின்ற ஜூலை 7 முதல் அனந்தபுரி ரெயில் நாகர்கோவில் டவுண் நிலையத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக 8.07 மணிக்கு வந்தடைந்து. 8.12 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதுபோல இரணியல் மற்றும் குழித்துறை ரெயில் நிலையங்களுக்கு தற்போது உள்ளதை விட 30 நிமிடங்கள் முன்னதாக சென்றடையும். இந்த ரெயில் 10.10 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேரும் என அறிவித்துள்ளது.

    பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த நேர மாற்றத்தை கொண்டு வந்த ெரயில்வே நிர்வாகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்திற்கு ரெயில் பயணிகள் நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.

    • நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்
    • பயணிகள்-பொதுமக்கள் கோரிக்கை

    நாகர்கோவில்:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி மாவட்டம். இது உலக புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றா கும். இந்த மாவட்டத்தின் தலைமையிடம் நாகர் கோவில் ஆகும்.

    நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவி கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரி பவர்கள், வியாபா ரிகள் ஆகியோர் வெளியூர் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவிற்கு தினந்தோறும் சென்று வருகின்றனர். நாகர்கோவில் பகுதியில் 2 ரெயில் நிலையங்கள் உள்ளன.

    கோட்டார் பகுதி யில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையமும், பள்ளி விளை பகுதியில் நாகர் கோவில் டவுண் ரெயில் நிலையமும் உள்ளன. பள்ளி விளை பகுதியில் அமைந் துள்ள நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம் மிகவும் முக்கியமான ரெயில் நிலையம் ஆகும். இந்த ரெயில் நிலையம் இயற்கை எழில் சூழ்ந்து ரம்யமாக காட்சியளிக்கிறது.

    இந்த நிலையத்தில் ஒரு பிளாட்பாரம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. மற்றொரு பிளாட்பாரத் திற்கான பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்த ரெயில் நிலையம் வழியாக ஏராளமான எக்ஸ்பிரஸ், மற்றும் பயணிகள் ரெயில், சரக்கு ரெயில்கள் சென்று வரு கின்றன.

    நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் 18 ரெயில்கள் தற்போது நின்று செல்கின்றன. இந்த ரெயில் நிலையத்தை வடசேரி, வெட்டூர்ணிமடம், பள்ளிவிளை, ஒழுகினசேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள். வியாபாரிகள், பொதுமக்கள். நோயாளிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரெயில் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இந்நிலையில் கொல்லத்தி லிருந்து சென்னைக்கு தினமும் இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலை யத்திற்கு சென்று அங்கி ருந்து என்ஜின் மறுபக்கம் மாற்றப்பட்டு பின்னர் திருநெல்வேலி, மதுரை வழியாக சென்னை நோக்கி செல்லும். அதே போல் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர் கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்து என்ஜின் மறுபக்கம் மாற்றப்பட்டு பின் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையம் வழியாக கொல்லத்திற்கு சென்றடைகிறது.

    இதனால் காலவிரயம் ஏற்படுகிறது என்று பயணிகள் புகார் கூறினர். மேலும் அனந்தபுரி எக்ஸ் பிரஸ் ரெயில் நாகர் கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வராமல் நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க கோரிக்கை விடுத்தி ருந்தனர். இக்கோரிக்கையை ஏற்று தென்னக ரெயில்வே வருகிற 20-ந்தேதி முதல் அனந்தபுரி எக்ஸபிரஸ் ரெயில் டவுண் ரெயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நிறுத்தி கொல்லத்திற்கு இயக்க அனுமதி அளித்துள்ளது.

    இதனால் கூடுதல் பயணிகள் டவுண் ரெயில் நிலையத்திற்கு வர வாய்ப்பு உள்ளது. டவுண் ரெயில் நிலையத்தில் 4 ரெயில்வே ஊழியர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். எனினும் 2 ஊழியர்கள் மட்டுமே பணி யில் உள்ளனர். 2 இடங்கள் காலியாக உள்ளது. புதிதாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் டவுண் ரெயில் நிலையத்தில் நின்று செல் வதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே கூடுதல் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்.

    தற்போது பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதற்கு, முன்பதிவு செய்வதற்கு, தக்கல் பதிவு செய்வதற்கு என ஒரு கவுண்டர் மட்டுமே உள்ளது. மேலும் கூடுதல் டிக்கெட் கவுண்டர்களை திறக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். பயணிகள் மழை மற்றும் வெயில் காலங் களில் அதிலிருந்து தப்பிப்ப தற்கு வசதியாக பிளாட் பாரங்களில் ஆங்காங்கே மேற்கூரை போடப்பட் டுள்ளது. அதனை முழுமை யாக அமைக்க வேண்டும்.

    ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு ஏதுவாக பார்க்கிங் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் பயணிகள் ஆங் காங்கே வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் வாகனங்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை உருவாகிறது. ரெயில் நிலை யத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

    மேலும் ரெயில் நிலை யத்தில் அத்தியாவசிய பொருட் கள் வாங்க கடைகள் ஏதும் அமைக் கப்படவில்லை. இத னால் பயணிகள் அவதிக் குள்ளாகின்றனர்.

    கஞ்சா, குட்கா போன்ற புகையிலை பொருட்களை கடத்துவதை தவிர்ப்பதற்காக குமரி மாவட்டத்தில் போலீசார் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் டவுண் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணிக்கென ரெயில்வே போலீசார் நியமிக்கப்படவில்லை. இது பயணிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் திருட்டு சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. ஆதலால் பயணிகள் இரவு நேரங்களில் ஒருவித அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே இங்கு நிரந்தரமாக பணிபுரிய ரெயல்வே போலீ சார் நியமிக்க வேண்டும்.

    மேலும் அடிப்படை பொருட்கள் வாங்குவதற்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும், இதோடு பயணிகள் டவுண் ரெயில் நிலையம் வந்து செல்வதற்கு ஏதுவாக கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • டவுண் ரெயில் நிலைய வழியாக வருகிற 20-ந்தேதி முதல் ரெயில் இயக்கப்படுவதையடுத்து முன்கூட்டியே ரெயில் சென்றடையும்.
    • டவுண் ரெயில் நிலையம் வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதை அடுத்து டவுண் ரெயில் நிலையத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நாகர்கோவில் வழியாக இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்து மீண்டும் டவுண் ரெயில் நிலையம் வழியாக கொல்லத்திற்கு புறப்பட்டு செல்கிறது. இதனால் கூடுதல் நேரம் ஏற்படுவதாகவும் இந்த ரெயிலை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வராமல் டவுண் ரெயில் வழியாக இயக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதையடுத்து தென்னக ரெயில்வே அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வராமல் டவுண் ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் டவுண் ரெயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும் என்றும் தென்னக ரெயில்வே கூறி உள்ளது.

    சென்னையிலிருந்து மாலை புறப்படும் இந்த ரெயில் காலை 8.30 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்து சேரும். பின்னர் இங்கிருந்து 9.15 மணிக்கு தான் ரெயில் புறப்பட்டு சென்றது. டவுண் ரெயில் வழியாக இந்த ரெயில் இயக்கப்படும்போது 45 நிமிடம் முன்னதாக கொல்லம் ரெயில் நிலையத்திற்கு சென்று சேரும். இதே போல் கொல்லத்தில் இருந்து தினமும் மாலை புறப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 5.55 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடையும். பின்னர் 6.05 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு செல்லும்.

    டவுண் ரெயில் நிலைய வழியாக வருகிற 20-ந்தேதி முதல் ரெயில் இயக்கப்படுவதையடுத்து முன்கூட்டியே ரெயில் சென்றடையும். டவுண் ரெயில் நிலையம் வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதை அடுத்து டவுண் ரெயில் நிலையத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு டிக்கெட் கவுண்டர்கள் திறப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    மேலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்திற்கு செல்வதற்கு போதுமான பஸ் வசதிகள் கிடையாது. எனவே பொதுமக்கள் வசதிக்காக டவுண் ரெயில் நிலையத்திற்கு கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    முதல் கட்டமாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் டவுண் ரெயில் வழியாக இயக்கப்படுவதை தொடர்ந்து திருவனந்தபுரத்திலிருந்து சென்னை போன்ற வெளியூர்களுக்கு செல்லும் ரெயிலையும் டவுண் ரெயில் நிலையம் வழியாக இயக்க அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள். டவுண் ரெயில் நிலையம் வழியாக ரெயில்களை இயக்க ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் பலதரப்பு மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    • ராமேசுவரம்-கன்னியாகுமரி இடையேயான ரெயில் சேவையை விரைவில் தொடங்க வேண்டும்.
    • பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயனடைவார்கள் என பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

    நாகர்கோவில்:

    ரெயில்வே மத்திய மந்திரி அஸ்வினி வைஸ்னவ்வுக்கு, முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷண்ன் கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் இருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம் வழியாக கொல்லம் வரை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படாமல் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது பொதுமக்களுக்கு கடும் அவதியை ஏற்படுத்தும். எனவே ரெயில்வே நிர்வாகம் குமரி மாவட்ட மக்களின் நலன் கருதி நாகர்கோவில் சத்திப்பு வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்.

    அதேசமயம் ராமேசுவரம்-கன்னியாகுமரி இடையேயான ரெயில் சேவையை விரைவில் தொடங்க வேண்டும். இத்தகைய ரெயில் சேவை மூலம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பயணிகள் டவுண் நிலையத்துக்கு செல்ல இணைப்பு ரெயிலோ, பஸ் வசதியோ இல்லை.
    • நாகர்கோவில் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்கிய பின், அனந்தபுரி ரெயிலை டவுன் நிலையம் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஸ்னவ்வுக்கு மற்றும் அதிகாரிகளுக்கு குமரி மாவட்ட ரெயில்வே பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

    கன்னியாகுமரி, நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வழியாக பல்லாயிரக்கணக்கான பயணிகள் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய ஊர்களுக்கு சென்று வருகின்றனர். அவர்கள் வசதிக்காக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மற்றும் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி ரெயிலில் டிக்கெட் கிடைக்காத பயணிகள், அனந்தபுரி ரெயிலில் சென்று வந்தனர். இந்த நிலையில் அனந்தபுரி ரெயிலை நாகர்கோவில் டவுண் நிலையம் வழியாக இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    ஆனால் பயணிகள் டவுண் நிலையத்துக்கு செல்ல இணைப்பு ரெயிலோ, பஸ் வசதியோ இல்லை. இதனால் பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து கார், ஆட்டோக்களில் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வழியாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க வேண்டும். நாகர்கோவில் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்கிய பின், அனந்தபுரி ரெயிலை டவுன் நிலையம் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாகர்கோவில் டவுண் வழியாக இயக்க எதிர்ப்பு
    • ரெயில்வே மந்திரிக்கு கடிதம்

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில், நெல்லை வழியாக சென்னைக்கு குருவாயூர் ரெயில் இயக்கப்படுகிறது. இதேபோல் மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூரிலிருந்து குருவாயூருக்கு இயக்கப்பட்டு வருகிறது.


    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் என்ஜின் மாற்றுவதற்கு சுமார் 40 நிமிடங்களில் இருந்து 50 நிமிடங்கள் வரை ஆகும்.எனவே இந்த ரெயிலை நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வராமல் பைபாஸ் வழியாக அதாவது நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

    இதனால் 40 நிமிடங்கள் வரை பயண நேரம் மிச்ச மாகும் என்றும் தெரிவி க்கப்பட்டுள்ளது. அதன்படி அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம்போல்இரவு 8.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும். ஆனால் காலை 9 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வருவதற்குப் பதிலாக இனி 8.05 மணிக்கு நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்திற்கு வந்து சேரும்.

    தொடர்ந்து காலை 10.35 மணிக்கு திருவனந்தபுரம் செல்வதற்கு பதிலாக 9.30 மணிக்கே திருவனந்தபுரம் சென்று 9.35 மணிக்கு அங்கிருந்து புறப்படும். பகல் 12.10 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    இதே போல் மறுமார்க்க த்தில் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு மாலை 3 மணிக்கு பதிலாக 3.40 மணிக்கு புறப்படும். பின்னர் 6.10 மணிக்கு நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையத்திற்கு வந்து சேரும். இந்த ரெயில் தற்போது 5.45 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு நிலையத்திற்கு வந்து 5.55 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்கிறது.

    ரெயில்வே வாரியம் இதற்கான ஒப்புதலை அளித்துள்ள நிலையில் விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ கால அட்டவணை அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பி னரும் கடும் எதிர்ப்பு தெரி வித்து உள்ளனர்.ரெயில் பயணிகள் சங்கத்தினர் வழக்கம் வழக்கம்போல் இந்த ரயில் இயக்க வேண்டும் இந்த ரயிலை டவுண் ரெயில் நிலையம் வழியாக இயக்குவதால் சுற்றுலா பயணிகள், பாதிக்கப்படக் கூடிய சூழல் ஏற்படும் என்று கூறி உள்ளனர்.

    இதேபோல் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ரெயில்வே மந்திரிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் சந்திப்புக்கு வராமல் நாகர்கோவில் டவுணுக்கு செல்வதற்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை வழக்கம்போல் நாகர்கோவில் சந்திப்பு நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறுகையில், கேரள ரெயில்வே கோட்டத் துடன் குமரி மாவட்டம் உள்ளதால் நமது மாவட்டட மக்களை புறக்கணிக்கிறார் கள். குமரி மாவட்டத்தை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் புதிய கோட்டம் உருவாக்க வேண்டும். 40 நிமிடம் முன் கூட்டி செல்கிறது என்பதற் காக ஆயிரக்கணக்கான மக்களின் ரெயில் பயண பயன்பாட்டை தடுத்து நிறுத்தக்கூடாது. வழக்கம்போல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், மேயரு மான மகேஷ கூறுகையில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் டவுண் ரெயில் நிலையம் வழியாக இயக்க ப்படும் என்ற அறிவிப்பை உடனே திரும்ப பெற வேண்டும். இல்லா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    ×