search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆங்கில மருத்துவம்"

    • 10-ம் வகுப்பு படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த முதியவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மருத்துவ மனையில் இருந்த காலி மருந்து பாட்டில்களை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூரை சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் அதே பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளதாக கூறப்படுகிறது.

    இவர் ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதாக கூறி பொது மக்களுக்கு பல ஆண்டுகளாக ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் மருத்துவ படிப்பு படிக்காமல் அந்த முதியவர் ஆங்கில மருத்துவ முறைப்படி சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.

    இதைத்தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் அப்புராஜ், அயலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் சுகாதாரத்துறை மற்றும் போலீசார் அந்த மருத்துவ மனைக்கு திடீரென சென்று விசாரணை நடத்தி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் காலி மருந்து குப்பிகள், பயன்படுத்தப்பட்ட ஊசி, ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி ஆகியவை கிடைத்தது.

    இதை தொடர்ந்து அவரிடம் போலீசார் மற்றும் மருத்துவ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த முதியவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளார். ஆனால் ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதாக கூறிக்கொண்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து மருத்துவ மனையில் இருந்த காலி மருந்து பாட்டில்களை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து அவர் ஆயுர்வேத சிகிச்சை அளிக்க உரிய படிப்பு படித்துள்ளாரா? என்பது குறித்து விசாரணைக்கு பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகா தாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஊத்தங்கரையில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைதானார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி ரோட்டில் போலி டாக்டர் இருப்பதாக மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் அசோக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அவர் கல்லாவி ரோடு பகுதிக்கு சென்று நேற்று திடீரென்று ஆய்வு நடத்தினார்.

    அப்போது வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பாச்சல் கிராமத்தை சேர்ந்த மணி (58) என்பவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. 

    அவரை மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் அசோக்குமார் பிடித்து ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
    செஞ்சி அருகே ஓமியோபதி மருத்துவம் படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். #fakedoctorarrested
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அனந்தபுரத்தை சேர்ந்தவர் கல்யாண்குமார் (வயது 57) ஓமியோபதி மருத்துவம் படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்தார். ஆனால் அவர் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது.

    அதன்அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் சுந்தர்ராஜி தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் அனந்தபுரத்தில் உள்ள அந்த கிளினிக்கிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த கிளினிக்கை நடத்தி வந்த கல்யாணகுமார் (வயது 57) என்பவர் ஓமியோபதி படித்து முடித்து விட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இதுகுறித்து சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் அனந்தபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் கல்யாணகுமாரை கைது செய்தனர். மேலும் கிளினிக்கில் இருந்த ஆங்கில மருந்துகள், சிரஞ்சு உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட கல்யாணகுமார் தற்போது அனந்தபுரம் நகர தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #fakedoctorarrested
    ×