என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆஞ்சநேயர் கோவிலில் கொள்ளை"
தருமபுரி:
தருமபுரி எஸ்.வி. ரோட்டில் பிரசித்தி பெற்ற அபய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தருமபுரி நகர மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். கோவிலில் சுரபி என்பவர் செயல் அலுவலராக உள்ளார்.
இந்த கோவிலை சுற்றி நிலம் அபகரிப்பு தனிப்பிரிவு போலீஸ் நிலையம், ஊர்க்காவல் படை அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகம், கிளை சிறைச்சாலை ஆகியவை அமைந்து இருப்பதால் ஆள்நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே, எஸ்.வி. சாலை பகுதி எந்தநேரமும் பரபரப்பாக காணப்படும்.
அபய ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று இரவு பூசாரி பூஜையை செய்து விட்டு வழக்கம்போல் பூட்டி விட்டு சென்றார். இன்று சனிக்கிழமை என்பதால் அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகம் செய்வதற்காக கோவிலை திறக்க பூசாரி வந்தார்.
அப்போது கோவிலின் முன்பு இருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மர்ம நபர்கள் கோவிலின் வெளியே கிடந்த உண்டியலின் பூட்டை உடைத்து கொள்யைடிக்க வந்துள்ளனர். அவர்கள் முதலில் சி.சி.டி.வி. கேமிராவில் தங்கள் முகம் பதிவாகமல் இருக்க அதனை திருப்பி வைத்து உள்ளனர். பின்னர் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த செயல் அலுவலர் சுரபி கோவிலுக்கு வந்து பார்வையிட்டார். கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் பொதுமக்கள் கோவிலின் அருகே திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது கோவிலில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.
அதில் முகமூடி அணிந்து கொண்டு மர்ம நபர்கள் முதலில் சாலை விநாயகர்கோவிலில் உள்ள கேமிராவை குச்சி வைத்து திருப்பி உள்ளனர். அதன்பின்பு ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள கேமிராவை திருப்பி விட்டு உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை சென்றது தெரியவந்தது.
வருடத்திற்கு ஒருமுறை மட்டும் உண்டியலை திறந்து பணம் எண்ணப்படும். கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் உண்டியல் திறக்கப்பட்டது. தற்போது அந்த உண்டியலில் ரூ.45 ஆயிரத்திற்கு மேல் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
பரபரப்பாக இயங்கி வரும் எஸ்.வி. சாலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த பெரியகோமேஸ்வரத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு தினமும் பூஜை நடந்து வருகிறது. விஷேச நாட்களில் பக்தர்கள் துலாபாரம் அளித்தும். உண்டியில் காணிக்கை செலுத்தியும் நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.
நேற்று பூசாரி வழக்கம் போல் பூஜைகள் முடிந்து கோவிலை பூட்டி சென்றார். நள்ளிரவில் மர்மகும்பல் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு பீரோவில் இருந்த 6 பவுன் சாமி நகைகள், பக்தர்கள் துலாபாரம் வழங்கிய ரூ.70 ஆயிரம் பணம் மற்றும் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று காலை கோவிலில் கொள்ளை நடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.
இது குறித்து உமராபாத் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
கைரேகைகள் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரெயிலடியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பட்டாச்சாரியார் இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். நேற்று காலை கோவிலை திறக்க வந்தபோது, கோவில் கருவறை முன்பு உள்ள இரும்பு கம்பியிலான கதவு பூட்டுக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டிருந்த ½ கிலோ எடை உள்ள வெள்ளி பாதங்கள், ஜடாரி ஆகிய பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
கோவிலை சுற்றிப்பார்த்த போது மர்மநபர்கள் கோவிலின் முன்புறம் உள்ள மதில்கள் வழியாக இறங்கி இருப்பதும், தெரியவந்ததும், மேலும் அவர்கள் கோவிலுக்குள் வந்து கதவு பூட்டை உடைத்த போது அங்கிருந்த அலாரம் மணி அடித்ததால் உடனே அலாரம் மணி மின் இணைப்பை துண்டித்து விட்டு, அதை தண்ணீர் உள்ள தொட்டியில் போட்டு மூழ்கடித்ததும் தெரியவந்தது.
மேலும் முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பு கேமராக்கள் வயர் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தது. கோவிலின் பின்புறம் உள்ள சுவர் மேல் பொருத்தப்பட்டிருந்த கம்பிகளை ஆள் நுழையும் அளவுக்கு வளைத்து திருடிய பொருட்களை கயிறு கட்டி அதன் வழியாக எடுத்து கொடுத்துள்ளதும் தெரியவந்தது.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்