search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடை"

    • மகா கும்பமேளா, ஜனவரி 13-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு கும்பமேளா என்று மோடி கூறியிருந்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருதடவை, மகா கும்பமேளா நடக்கிறது. இந்த மகா கும்பமேளா, ஜனவரி 13-ந் தேதி தொடங்குகிறது. 45 நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் மஹந்த் ரவீந்திர புரி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரயாக்ராஜ் நகரம் கும்பமேளாவின்போது அழகாகவும், சுத்தமாகவும், தெய்வீகமாகவும், அமைதியானதாகவும் இருக்க வேண்டும். அதன் பாதுகாப்பு மற்றும் புனிதத்தை பாதுகாக்க இந்துக்கள் அல்லாதவர்களை விலக்கி வைக்க வேண்டும்.

    இந்துக்கள் அல்லாதோருக்கு கடை அமைக்க அனுமதி கொடுக்கக்கூடாது. ஏனெனில் அவர்களுக்கு கடைகளை கொடுத்தால் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல் போன்ற சுகாதாரமற்ற செயல்களில் அவர்கள் ஈடுபட வாய்ப்பிருக்கிறது" என்று தெரிவித்தார்.

    முன்னதாக 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு கும்பமேளா. இந்த நிகழ்வில் எந்த பாகுபாடும் இல்லை. அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள்" என்று கூறியிருந்த நிலையில், மஹந்த் ரவீந்திர புரியின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரண்டு பெண்களும் வேலை முடிந்து கடையை விட்டு செல்லும்போது அவர்களை தடுத்துள்ளனர்
    • காரில் ஹிஜாபூர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்

    தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் டைல்ஸ் கடை உரிமையாளர்கள் இருவர் தங்களது கடையில் துப்புரவு  வேலை பார்த்து வந்த இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அச்சம்பேட்டில் உள்ள டைல்ஸ் கடையில் துப்புரவு வேலை பார்த்து வந்த இரண்டு பெண்களும் நேற்று முன் தினம் வேலை முடிந்து கடையை விட்டு வெளியேறும்போதுஅவர்களை அழைத்து வலுக்கட்டாயமாக மது ஊற்றி காரில் ஹிஜாபூர் பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு காருக்குள் வைத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் போலீசில் புகார் அளித்த நிலையில் வழக்குப்பதிந்த போலீசார் டைல்ஸ் கடை உரிமையாளர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். 

    • பராமரிப்பு இல்லாததால் கடைகளின் மேற்கூரை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமாக பஸ் ஸ்டாண்ட், கோவை சாலை, பவானிசாகர் சாலை உள்ளி ட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இவற்றில் கோவை சாலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பராமரிப்பு இல்லாததால் கடைகளின் மேற்கூரை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.

    நகராட்சிக்கு சொந்தமான ஒரு கடையில் திருநெல்வேலியைச் சேர்ந்த வல்லரசு என்பவர் செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வல்லரசுவின் செல்போன் கடையின் மேற்கூரை திடீரென இடி ந்து விழுந்தது. உடனே வல்லரசு மற்றும் வியாபாரம் செய்து கொண்டிருந்த பொதுமக்கள் கடையை விட்டு வெளியேறினர்.

    பின்னர் கடையின் மேற்கூரை கான்கிரீட் முற்றிலுமாக சரிந்து விழுந்தது. இதில் விற்பனைக்காக வைத்திருந்த புதிய செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் முழுமையாக சேதம் அடைந்தது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கடையின் உரிமையாளர் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடை திறப்பதற்காக வந்த ஊழியர் மின்சார பாதுகாப்பு ஷட்டர்களை திறந்துள்ளார்.
    • ஷட்டரில் சிக்கிய மூதாட்டியும், மேலே இழுத்து செல்லப்பட்டு தலைகீழாக தொங்கினார்.

    இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள ரோண்டா சைனான் டாப்ஸ் பகுதியில் உள்ள ஒரு கடை முன்பு 72 வயது மூதாட்டி ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அப்போது கடை திறப்பதற்காக வந்த ஊழியர் மின்சார பாதுகாப்பு ஷட்டர்களை திறந்துள்ளார். இதை கவனிக்காமல் அந்த மூதாட்டி ஷட்டரை ஒட்டி நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது ஆடை மின்சார ஷட்டரில் சிக்கிக்கொண்டது.

    இதனால் ஷட்டர் மேலே திறந்த போது, ஷட்டரில் சிக்கிய மூதாட்டியும், மேலே இழுத்து செல்லப்பட்டு தலைகீழாக தொங்கினார். இதை அங்கு நின்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே ஊழியர் ஒருவர் ஓடி வந்து ஷட்டரில் ஆடை சிக்கி தலைகீழாக தொங்கிய மூதாட்டியை மீட்டு பத்திரமாக தரையில் இறக்கி விட்டார். எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. 12 வினாடிகள் கொண்ட அந்த காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    துணை மேயர் தாமரைச்செல்வன், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் கடை உரிமையாளர்கள் கடைகளை அகற்றுவதற்கு கூடுதலாக கால அவகாசம் கேட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி க்குட்பட்ட கடற்கரை சாலை, பழைய கலெக்டர் அலுவலக சாலை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக சாலையோரமாக நூற்றுக்கணக்கான கடைகள் இருந்து வருகின்றன.இதில் மாநகராட்சியில் உரிய அனுமதி பெற்று பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் பல்வேறு கடைகள் அனுமதி இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்து இயங்கி வருகின்றன.கடலூர் மாநகராட்சி சார்பில் சாலையோரமாக 123 கடைகள் ஆக்கிரமித்து இயங்கி வருவதாக அந்த கடைகளின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று பணிகளை தொடங்கினார்கள்.

    அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் கடை உரிமையா ளர்கள் கடைகளை அகற்றுவதற்கு கூடுதலாக கால அவகாசம் கேட்டனர். அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் கூடுதலாக அவகாசம் வழங்கி, கடைகளை தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் மாநகராட்சி சார்பில் அகற்றப்படும் என எச்சரிக்கை விடுத்து சென்றனர். இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் வழங்கிய கூடுதல் அவகாசம் இன்றுடன் முடிகிறது. எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை இன்றுக்குள் அகற்ற வேண்டுமென மாநகராட்சி ஊழியர் வாகனங்கள் மூலம் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து செல்கின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் இன்று காலை முதல் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 14,589 ரூபாயை கைப்பற்றி கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

    குழித்துறை :

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மருதன்கோடு பகுதியில் பள்ளியின் அருகாமையில் உள்ள கடைகளை மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மருதம்கோடு குந்நுவிளையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(வயது44) என்பவது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் அவரது கடையில் ரூ6,845 மதிப்பிலான புகையிலை பொருட்களை செய்த போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஏற்கனவே புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வைக்கப்பட்டிருந்த 14,589 ரூபாயை கைப்பற்றி கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

    • ஜெயங்கொண்டம் கடை வீதியில்பட்டாசு கடை வைக்க தடை விதிக்க வேண்டும்
    • சமூக ஆர்வலர்கள் வியாபாரிகள் கோரிக்கை

    ஜெயங்கொ ண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டு இருக்கின்றனர்.

    இந்நிலையில் திருமானூர் அருகே சென்ற வாரம் நடைபெற்ற மிகப்பெரிய வெடி விபத்து 13 நபர்களை பலி வாங்கியது. அதிலிருந்து இன்னும் பட்டாசு மீது உள்ள அச்சம் போகாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பொதுமக்கள் கடைவீ திகளில் அதிக கூட்டம் வருவதால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பட்டாசு கடையை பொதுமக்கள் நடமாட்டமில்லாத இடமாக மாற்றி வைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லையென்றால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்க நேரிடும் என வியாபாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் அரியலூர் கடைவீதிகளில் பட்டாசு கடை வைப்பதற்கு தடை விதி த்துள்ளது குறிப்பிடத்தக்கது அதேபோல் ஜெயங்கொண்டதையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • புதுக்கோட்டையில் கூட்டுறவு மெகா பட்டாசு கடை
    • சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்

    புதுக்கோட்டை,  

    புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில், கூட்டுறவு மெகா பட்டாசுக் கடையினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்த விற்பனை பண்டகசாலை, திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி கூட்டுறவு பண்டகசாலை ஆகிய கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் இந்தாண்டு புதிய தயாரிப்பு பட்டாசு வகைகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட உள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.80 லட்சத்துக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு பட்டாசுகள் விற்பனை இலக்கு ரூ.1 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் கூட்டுறவு மெகா பட்டாசு கடையில் தரமான பட்டாசுகளை வாங்கிக் கொள்ளலாம் என்றார்.

    இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துராஜா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ கவிதை பித்தன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்ற துணை தலைவர் லியாகத்அலி, நகர்மன்ற உறுப்பினர்கள் சரவணன், சந்தோஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • துறையூர் தொகுதியில்பகுதிநேர ரேஷன் கடை
    • சேனப்பநல்லூர் புதூர் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    துறையூர் 

    திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சேனப்பநல்லூர் புதூர் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேனப்பநல்லூர் கிராமத்திற்கு சென்று அங்குள்ள ரேஷன் கடையில் பொருட்களை பெற்று வந்தனர்.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தங்களது பகுதியிலேயே, பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தருமாறு துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமாரிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ. பகுதி நேர ரேஷன் கடையை தலைமை தாங்கி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமதாஸ், காவிரி கணேசன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், ஆதிதிராவிடர் நலக்குழு கஸ்டம்ஸ் மகாலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் சரண்யா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ,அரசு அலுவலர்கள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கடைக்குள் சென்று பார்த்தபோது மேலும் அதிர்ச்சியடைந்தனர்.
    • ஒரு கடையில் இருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலமம் கொல்லம் சாமக்கடை வீதியில் ஏராளமான கடைகள் வரிசையாக இருக்கின்றன. அவற்றில் அடுத்தடுத்து இருந்த 4 கடைகளில் சம்பவத்தன்று இரவு யாரோ மர்மநபர் புகுந்து கைவரிசை காட்டியுள்ளார்.

    கடைகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர், கடைகளின் பூட்டை உடைத்து, கடைக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளார். திருட்டு நடந்த சம்பவம், மறுநாள் கடைக்காரர்கள் கடையை திறக்க வந்தபிறகே தெரியவந்தது.

    பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்ததை பார்த்து அதர்ச்சியடைந்த அவர்கள், கடைக்குள் சென்று பார்த்தபோது மேலும் அதிர்ச்சியடைந்தனர். காரணம், கடையில் கட்டுக் கட்டாக வைக்கப்பட்டிருந்த பணம் அப்படியே இருந்தது. அதே நேரத்தில் கடையில் இருந்த சில்லறை காசுகள் அனைத்தும் திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், திருட்டு நடந்த 4 கடைகளிலும் சோதனை செய்தனர். அப்போது ஒரு கடையில் இருந்த சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒரு நபர் பூட்டை உடைத்து கடைக்குள் செல்வதும், அந்த நபர் கடையின் உள்ளே டேபிளிள் வைக்கப்பட்டிருந்த பணக்கட்டை தனியாக எடுத்து டேபிளில் வைத்து விட்டு, சில்லறை காசுகளை மட்டும் திருடிச்சென்றது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.

    அந்த காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். பொதுவாக திருட்டில் ஈடுபடக்கூடிய நபர்கள், திருடச்செல்லும் இடத்தில் பணம் மற்றும் அதிக விலை உள்ள பொருட்கள் சிக்கினால் அவற்றை விட்டு வைப்பதில்லை.

    அனைத்தையும் வாரி சுருட்டி எடுத்துச் சென்று விடுவார்கள். ஆனால் கொல்லம் கடைகளில் கை வரிசை காட்டிய நபரோ, வித்தியாசமாக பணக்கட்டுகளை வைத்துவிட்டு சில்லறை காசுகளை மட்டும் திருடிச் சென்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • சி.சி.டி.வி. காமிரா பதிவு மூலம் சிக்கினார்
    • தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் டெரிக் ஜங்ஷனில் வர்த்தக நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் ஊழியர்கள் வழக்கம்போல் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

    மறுநாள் கடைக்கு வந்தபோது மேஜை டிராயரில் இருந்த ரூ.3 லட்சத்து 46 ஆயிரம் மாயமாகி இருந்தது. இதையடுத்து சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்த போது வாலிபர் ஒருவர் மேஜையை திறந்து பணத்தை எடுத்துச்செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் இம்மானுவேல், நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது கொள்ளையனின் உருவம் சிக்கியது. அதை கைப்பற்றி விசாரணையை தொடங்கினார்கள்.

    விசாரணையில் வர்த்தக நிறுவனத்துக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது வடசேரி பகுதியை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்தனர். பிடிபட்ட நபரை நேசமணிநகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். பின்னர் வர்த்தக நிறுவனத்தில் திருடியதை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரித்தபோது, வர்த்தக நிறுவனம் பூட்டுவதற்கு முன்பாகவே அந்த நிறுவனத்திற்குள் சென்று ஒருபுறத்தில் மறைந்து கொண்டதாகவும் கடை ஊழியர்கள் கடையை பூட்டி சென்ற பிறகு பணத்தை எடுத்து விட்டு மாடி வழியாக தப்பி சென்றதாகவும் கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டு கோழி கூட்டிற்குள் குருவி முட்டை அளவில் சிறியதாக ஒரு முட்டை கிடந்துள்ளது.
    • 4 முட்டைகளையும் அவர் தனது கடை முன்பு பார்வைக்கு வைத்துள்ளார்

    இரணியல் :

    இரணியல் அருகே வில்லுக்குறி மாடத்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் பேட்ரிக் (வயது 51). இவர் வீட்டருகில் பல சரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டு கோழி கூட்டிற்குள் குருவி முட்டை அளவில் சிறியதாக ஒரு முட்டை கிடந்துள்ளது. அடுத்த நாள் அதைவிட கொஞ்சம் பெரிதாகவும், அடுத்த நாள் அதைவிட பெரிதாகவும் இருந்துள்ளது.

    4-வது நாள் கிடந்த முட்டை, கோழி முட்டை அளவில் இருந்துள்ளது. 4 முட்டைகளையும் அவர் தனது கடை முன்பு பார்வைக்கு வைத்துள்ளார். இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    ×