என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கண் தானம்"
- திருச்செங்கோடு அரசு மருத்து வமனையில் கண் தொடர்பான பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
- குறுகிய காலத்தில் 150 க்கும் மேற்பட்ட கண் புரை அறுவை சிகிச்சைகளை செய்து பொதுமக்களுக்கு சேவை ஆற்றி வருகின்றனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்து வமனையில் கண் தொடர்பான பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
குறுகிய காலத்தில் 150 க்கும் மேற்பட்ட கண் பு ரை அறுவை சிகிச்சைகளை செய்து பொதுமக்களுக்கு சேவை ஆற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனை சார்பாக அன்னை தெரசா நினைவு தினத்தை ஒட்டி கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனையில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திருச்செங்கோடு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார் மருத்துவர் மகேஸ்வ ரன், செவிலியர் வசந்தாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி இறுதியாக அரசு மருத்துவமனையை அடைந்தது. சுமார் 100 விவேகானந்தா செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் இந்த பேரணியில் பங்கேற்று கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்திய படி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அனைவரும் கண்தானம் செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் கண் இல்லாதவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். முன்னதாக அன்னை தெரசாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உருவப்படத்திற்கு மருத்துவர்களும் செவிலியர்களும் மலர் தூவி மரியாதை செய்தனர்.
- நான் இறந்த பிறகு கண்களை தானம் செய்ய வேண்டும் என்று மகன்கள் மற்றும் பேரன்களிடம் அடிக்கடி கூறிவந்தார்.
- தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர், அப்பர்சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் அம்சவள்ளி (வயது 95). இவருக்கு ரவி (76) அன்பழகன்(72) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அம்சவள்ளி தனது மகன்கள், பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளுப்பேத்தி என 3 தலைமுறை குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்ந்து வந்தார்.
அவர், தனது இறப்புக்கு பின்னர் பிறர் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். எனவே நான் இறந்த பிறகு கண்களை தானம் செய்ய வேண்டும் என்று மகன்கள் மற்றும் பேரன்களிடம் அடிக்கடி கூறிவந்தார்.
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக அம்சவள்ளி திடீரென இறந்தார். இதைத்தொடர்ந்து அம்சவள்ளியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது கண்களை தானமாக வழங்குவதாக அவரது மகன்கள் தெரிவித்தனர். இது குறித்து தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
டாக்டர்கள் பரிசோதித்தபோது அம்சவள்ளியின் கண்கள் நல்ல நிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து அவரது கண்கள் தானமாக பெறப்பட்டது.
- பொன்னமராவதியில் பொதுமக்கள் கண் தானம் செய்ய வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
- பேரணியை பார்வைக்கு ஒரு பயணம் மாவட்டத் தலைவர் எம்.ஜி.ஆர்.விஜயலட்சுமி சண்முகவேல் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சத்தியநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
புதுக்கோட்டை :
பொன்னமராவதியில் உள்ள அனைத்து லயன்ஸ் சங்கங்கள் சார்பாக பொதுமக்கள் கண் தானம் செய்ய வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு பொன்னமராவதி லயன் சங்க தலைவர் பொறியாளர் வி.என்.ஆர்.நாகராஜன் தலைமை தாங்கினார். சிட்டி லைன் சங்க தலைவர் ஆர்.சுந்தர்ராஜன், ஆர். பொன்னமராவதி ராயல் லயன் சங்க தலைவர் எம்.முருகானந்தம், பாலக்குறிச்சி பிரைட் லைன் சங்கதலைவர் எஸ்.ராஜேந்திரன், கொப்பனாபட்டி சைன் லயன் சங்கத் தலைவர் வி.கிரிதரன், பொன்னமராவதி ஷைன் லைன் சங்கத் தலைவர் பி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.பேரணியை பார்வைக்கு ஒரு பயணம் மாவட்டத் தலைவர் எம்.ஜி.ஆர்.விஜயலட்சுமி சண்முகவேல் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சத்தியநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் மண்டல தலைவர் சிங்காரம், வட்டாரத் தலைவர்கள் ஆர்.எம்.வெள்ளைச்சாமி மற்றும் அன்பு செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பொன்புதுப்பட்டி செங்கை ஊரணியில் இருந்து புறப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணி வலையபட்டி, நகைக்கடை பஜார், அண்ணா சாலை வழியாக கொப்பனாபட்டியில் பேரணி நிறைவுற்றது. பேரணிகள் சென்ற லயன் சங்க நிர்வாகிகள் மோட்டார் சைக்கிளில் கண் தானம் விழிப்புணர்வு பதாகைகளை கட்டிக்கொண்டு சென்றனர். மேலும் பேரணியின் முன்பாக ஆட்டோவில் ஒலிபெருக்கியின் மூலமாக செய்வோம் செய்வோம் கண் தானம் செய்வோம், மனிதன் இருக்கும் பொழுது ரத்த தானம் இறந்த போது கண் தானம் மண்ணில் புதையும் கண்களை பிறருக்கு தானமாக தானம் செய்வோம் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் இது தொடர்பான விழிப்புணர்வு பற்றி லயன் சங்க ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி விரிவாக பேசினார். முடிவில் கொப்பனாபட்டி கலைமகள் கல்லூரியின் தலைமை ஆசிரியர் மா.முல்லை நன்றி கூறினார்.
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்தாலும் தனது 2 கண்களையும் தானம் செய்திருந்தார். புனித் ராஜ்குமாரின் 2 கண்கள் மூலமாக 4 பேருக்கு பார்வை கிடைத்துள்ளது.
தமிழகத்தில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஏற்படுத்தி வருகின்றன. இருந்தாலும் இறந்தவர்களின் கண்களை தானம் செய்ய பொதுமக்கள் பலர் முன்வருவது இல்லை.
தமிழகத்தில் தானமாக கிடைக்கும் அத்தனை கண்களையும் பயன்படுத்த முடிவது இல்லை. ஆண்டுக்கு கிட்டத்தட்ட 4 ஆயிரம் கண்களை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. ஒருவர் இறந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்களை அகற்றினால்தான் அவற்றை பயன்படுத்த முடியும்.
இறந்தவர்கள் பற்றிய தகவல் தாமதமாக கிடைத்தால், அவர்களிடம் இருந்து எடுக்கப்படும் கண்கள் பயன்படாது. அதேபோல, முதியவர்களிடம் இருந்து எடுக்கப்படும் கண்களில், ஒரு சிலரது கண்களில் செல்கள் குறைவாக இருக்கும் என்கிறார்கள். அந்த கண்களையும் பயன்படுத்த முடிவது இல்லை. இதுபோன்ற காரணங்களால், ஆண்டுக்கு கிட்டத்தட்ட 2 ஆயிரம் கண்களை பயன்படுத்த முடிவதில்லை.
ஒருவர் உயிரிழந்தவுடன் குடும்பத்தினரும், உறவினர்களும் சோகத்தில் இருப்பார்கள். அந்த நேரத்தில், ‘இறந்தவரின் கண்களை உடனடியாக தானம் செய்ய வேண்டும்‘ என்ற எண்ணம் தோன்றுவது இல்லை. ஒருசிலர்தான் அதுபற்றி யோசிக்கிறார்கள்.
இறந்தவரை ஊனத்தோடு புதைத்தால் அடுத்த பிறவியில் அவர் ஊனத்தோடு பிறப்பார் என்ற மூடநம்பிக்கை மக்களிடையே பரவலாக உள்ளது.
உலக அளவில் இலங்கையில் கண் தானம் அதிகம் உள்ளது. இந்தியாவில் கண் தானம் செய்வதில் குஜராத் மாநிலம் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு ஆண்டுக்கு சுமார் 1,000 கண்கள் தானமாக கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா மாநிலம் கன்ஞம் மாவட்டத்தில் உள்ள பெர்கம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காமேஷ்வர் ராவ்(47). இவர் அப்பகுதியில் உள்ள பிரண்ட்ஸ் கெல்பிங் கிளப் என்ற அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்தார். இந்த அமைப்பின் மூலம் கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.
காமேஷ்வர் ராவின் தாய் பார்வதி கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார். மறுநாள் காலை காமேஷ்வர் ராவ் மரணமடைந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் பார்வதியின் கண்களை தானம் செய்தனர். மறுநாள் காமேஷ்வரின் கண்களை தானம் செய்தனர்.
பின்னர் அந்த கண்கள் பரிசோதனை செய்யப்பட்டு 4 பேருக்கு பொருத்தப்பட்டது. அதன் மூலம் நான்கு பேர் கண் பார்வை பெற்ற சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் குடும்பத்தினர் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். #eyedonation
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்