search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரூர் மாணவி"

    மாணவி இறப்புடன் தன்னை தொடர்புபடுத்தியதை தாங்க முடியாமல் துயர முடிவை எடுப்பதாக கணித ஆசிரியர் தற்கொலைக்கு முன் டைரியில் எழுதி வைத்துள்ளார்.
    துறையூர்:

    கரூர் அரசு காலனி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி சாவதற்கு முன்பு ஒரு உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார்.

    அதில், நான் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்கிறேன். பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பெண் நானாக இருக்கணும் என உருக்கமாக கூறியிருந்தார். இது கரூர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

    பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் குறித்து இதுவரை முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையே அந்த மாணவி படித்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    தற்கொலை


    இந்த நிலையில் மாணவி படித்த பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து வந்த சரவணன் (வயது 42) என்பவர் திடீரென நேற்று இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் வாங்கல் குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த அவர் நேற்றைய தினம் திருச்சி மாவட்டம் துறையூர் செங்காட்டுபட்டியில் உள்ள தனது மாமனார் நடராஜன் வீட்டில் தற்கொலை செய்தார்.

    இந்த சம்பவம் துறையூர் மற்றும் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரூரில் தற்கொலை செய்த பள்ளி மாணவியின் சாவுக்கு சரவணன் காரணமாக இருந்திருக்கலாம். கைதுக்கு பயந்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்பட்டது.

    இந்த நிலையில் சம்பவ இடத்தில் இருந்து ஒரு டைரியை துறையூர் போலீசார் கைப்பற்றினர். அதில், மாணவியின் தற்கொலைக்கு நான் தான் காரணம் என மாணவர்கள் சந்தேகிப்பதுடன், கிண்டல் செய்கின்றனர். இதனால் என் மனம் உடைந்து விட்டது என எழுதி வைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதுபற்றி மாணவி தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் வெங்கமேடு போலீசாரிடம் கேட்டபோது, மாணவியின் இறப்புக்கு அந்த ஆசிரியர் காரணம் இல்லை. அவர் கண்டிப்பான ஆசிரியர் என விசாரணையின்போது மாணவர்கள் தெரிவித்தனர். ஆகவே புலன் விசாரணை தொடர்கிறது என்றனர்.


    தனியார் பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கரூர் மற்றும் துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    துறையூர்:

    கரூர் மாவட்டம் காமராஜர் நகரில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 42). இவர் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஜெயந்தி (42) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் நடராஜன் (75) என்பவரது வீட்டுக்கு சரவணன் நேற்று மதியம் தனியாக வந்தார். நடராஜன் உடல் நலம் சரியில்லாமல் கரூரில் உள்ளார்.

    துறையூரில் உள்ள மாமனார் வீட்டில் யாரும் இல்லை. இந்த நிலையில் வீட்டுக்குள் சென்ற சரவணன் மாலை வரை வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, சரவணன் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து அப்பகுதியினர் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆசிரியரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சரவணன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூரில் பிளஸ்-2 மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்வதாக கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

    அந்த மாணவி படித்த அதே பள்ளியில் சரவணன் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சரவணன் இறப்பதற்கு முன்பு தனது மனைவி மற்றும் மாணவ-மாணவிகளுக்கு உருக்கமாக டைரியில் எழுதி வைத்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் கரூர் மற்றும் துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கனும் என கரூர் பள்ளி மாணவி கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
    கரூர்:

    கரூரை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி கடந்த 19-ம் தேதி அன்று தனது வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து புகார் அளிக்கச் சென்ற மாணவியின் உறவினர்களை வெங்கமேடு காவல் ஆய்வாளர் கண்ணதாசன் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. உரிய நேரத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாயை இரவு நேரத்தில் காவல் நிலையத்தில் அமர வைத்ததாகவும் தெரிகிறது.

    இதுதொடர்பாக, மாணவியின் உறவினர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேலிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஆய்வாளர் கண்ணதாசன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில், வெங்கமேடு காவல் ஆய்வாளர் கண்ணதாசனை நேற்று பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் உத்தரவிட்டார்.

    ×