search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலர் ஜெராக்ஸ்"

    ஆம்பூர், ஜோலார்பேட்டை பகுதியில் ரூ.2 ஆயிரம் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து சப்ளை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே ஆலாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வந்த வாலிபர் ரூ.2,000 நோட்டை கொடுத்து சிகரெட் பாக்கெட் வாங்கினார்.

    அந்த நோட்டை பார்த்ததும் சந்தேகம் அடைந்த கடைக்காரர் அது குறித்து கேட்டுள்ளார். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார்.

    கடைக்காரர் சத்தம் போடவே அங்கு இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவரது பாக்கெட்டை பார்த்த போது அதில் 2,000 ரூபாய் நோட்டுகள் 11 இருந்தது.

    இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (வயது28) என்பது தெரியவந்தது. ஜோலார்பேட்டை நகர அ.ம.மு.க. இளைஞர் பாசறை செயலாளராக உள்ளார். அவரிடம் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் எடுத்து இருப்பது தெரியவந்தது.

    ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டியை சேர்ந்த அ.ம.மு.க. நகர துணை செயலாளர் அலெக்சாண்டர் (35). ரூ.2 ஆயிரம் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

    அலெக்சாண்டர்-சதாம்உசேன்

    இதையடுத்து ஆம்பூர் போலீசார் அலெக்சாண்டர் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். அங்கு ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுக்கும் எந்திரம் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

    இருவரும் சேர்ந்து வாணியம்பாடி வார சந்தையில் ரூ.40 ஆயிரம் ஜெராக்ஸ் நோட்டுகளை மாற்றியுள்ளனர்.

    ரூ.40 ஆயிரம் ஜெராக்ஸ் நோட்டுகளை மாற்றிக் கொடுத்தால் அலெக்ஸ் சாண்டர் ரூ.4 ஆயிரம் கமி‌ஷன் கொடுத்துள்ளார். இவர் பல ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆம்பூர், ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மளிகை கடையில் பொருட்கள் வாங்குவது போல நடித்து 12 ஆயிரத்தை திருடிய வாலிபரை கண்காணிப்பு காமிரா காட்சியை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
    சூலூர்:

    கோவை சூலூர் பாப்பம்பட்டி அருகே உள்ள அயோத்தியாபுரத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி சிவகாமி (வயது 65). இவர்கள் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்கள்.

    நேற்று கடையை சிவகாமி கவனித்துக்கொண்ட இருந்தார். முத்து வெளியே சென்று இருந்தார். அப்போது இவரது கடைக்கு ஒரு வாலிபர் காரில் வந்தார். அவர் சிவகாமியிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து சிகரெட் வாங்கினார். பின்னர் தண்ணீர் பாட்டில் வேண்டும் என கேட்டார். சிவகாமி தண்ணீர் பாட்டில் எடுப்பதற்காக திரும்பினார். கண்இமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் கல்லாவில் இருந்த ரூ. 12 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தனது காரில் தப்பிச் சென்றார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவகாமி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அதற்குள் அந்த வாலிபர் தப்பிச் சென்றார்.

    பின்னர் இது குறித்து சிவகாமி சூலூர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் மளிகை கடைக்கு விரைந்து வந்து சிவகாமியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த வாலிபர் கொடுத்து சென்ற 2 ஆயிரம் ரூபாய் நோட்டை சோதனை செய்தனர். அப்போது அது கலர் ஜெராக்ஸ் எடுத்த கள்ள நோட்டு என்பது தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர். அதில் வாலிபர் காரில் தப்பிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காரின் பதிவு எண்ணைக்கொண்டு மளிகை கடையில் ரூ. 12 ஆயிரத்தை திருடி, ரூ. 2 ஆயிரம் கள்ளநோட்டை கொடுத்து மூதாட்டியை ஏமாற்றி சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    கலர் ஜெராக்ஸ் எந்திரம் மூலம் 100 ரூபாய் நோட்டுகள் அச்சடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதுபூங்குளத்தை சேர்ந்தவர் சின்னசேட்டு மகன் ரமேஷ் (வயது36). திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் கலர் ஜெராக்ஸ் மூலம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க திட்டமிட்டார்.

    இதற்காக கடந்த சில நாட் களுக்கு முன்பு விடுமுறை எடுத்து விட்டு ஊருக்கு வந்தார். திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோட்டில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் கடைக்கு சென்று கலர் ஜெராக்ஸ் எடுக்கும் எந்திரத்தை விலைக்கு வாங்கினார்.

    அவரது வீட்டுக்கு எந்திரத்தை கொண்டு சென்ற அவர் 100 ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து அதனை உண்மையான ரூபாய் நோட்டுகள் போல மாற்றினார்.

    அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு இது பற்றிய தகவல் தெரிந்தது. இதனையடுத்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ் பெக்டர் அருள் மற்றும் போலீசார் இன்று புது பூங்குளம் கிராமத்துக்கு சென்றனர். அப்போது ரமேஷ் கலர் ஜெராக்ஸ் மூலம் கள்ள ரூபாய் நோட்டுகள் தயாரித்தது தெரிய வந்தது. இதனையடுத்து ரமேசை கைது செய்தனர்.

    அவரது வீட்டில் இருந்து 80 கள்ள 100 ரூபாய் நோட்டுகள், கலர் ஜெராக்ஸ் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதா? என்பது குறித்து ரமேஷிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருப்பூர் பகுதியில் கலர் ஜெராக்ஸ் மூலம் ரூபாய் நோட்டுகள் தயாரிக்கபட்டதை பார்த்து தானும் அது போல ஈடுபட்ட தாக ரமேஷ் கூறியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    ×