search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் டிரைவர் கைது"

    வில்லியனூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் சப்-இன்ஸ் பெக்டர்கள் குமார், நந்தகுமார் மற்றும் போலீஸ் காரர்கள் ஞானசேகர், அய்யனார் ஆகியோர் வில்லியனூர் கூடப்பாக்கம் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது பட்டாணிகளம் ரெயில்வே கேட் பகுதியில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசாரை பார்த்ததும் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் விரட்டி சென்று அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது.

    அவரது சொந்த ஊர் வில்லியனூரை அடுத்த கணுவாப்பேட்டையை சேர்ந்த ரவி (வயது 38) என்பதும், இவர் கார் டிரைவராக இருப்பதும் தெரியவந்தது. ரவியை போலீசார் கைது செய்தனர். 

    அவரிடம் இருந்து ரொக்க பணம் ரூ.24 ஆயிரத்து 140 மற்றும் செல்போன், லாட்டரி சீட்டுகளை பறி முதல் செய்தனர். இவரிடம்  போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் விழுப்புரத்தை அடுத்த பள்ளித்தென்னல் பகுதியை சேர்ந்த கார்த்தீபன் என்பவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்கி விற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கார்த்தீபனை தேடி வருகின்றனர்.
    நடந்து சென்ற பெண் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி நான்குவழிச் சாலையில் நேற்று இரவு சுமார் 36 வயது மதிக்கத்தக்க பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக அந்த பெண் மீது மோதியது. 

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் பலியான பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். பலியான பெண் யார்?. எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. 

    இது குறித்து போலீசார் காரை ஓட்டி வந்த பாளை மார்க்கெட் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் மாணிக்கம் என்பவரை கைது செய்தனர்.
    தனியார் பால் நிறுவன உரிமையாளரிடம் ரூ.1 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொரட்டூரை சேர்ந்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    திருவான்மியூர்:

    ஈரோட்டை சேர்ந்தவர் மோகனசுந்தரம். தனியார் பால் நிறுவன உரிமையாளர். வியாபாரத்தை விரிவுபடுத்த இவருக்கு ரூ.50 கோடி தேவைப்பட்டது.

    அதற்காக சிலரை அணுகிய போது பாங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி சென்னை வரவழைத்தனர். பட்டினபாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் 3 பேர் அவரை சந்தித்து பேசினர். அப்போது கடன்பெற்று தர ரூ.1 கோடி தேவைப்படும் என கூறி அதை பெற்றுக் கொண்டனர்.

    காரில் வந்த அவர்கள் சிறுநீர் கழிக்க செல்வதாக கூறி அங்கிருந்து பணத்துடன் தப்பி ஓடிவிட்டனர்.

    பணம் கொள்ளை போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மோகன சுந்தரம் போலீசில் புகார் செய்தார். அதைதொடர்ந்து போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் கொரட்டூரை சேர்ந்த கார் டிரைவர் ஜெயக்குமார் (40) கைது செய்யப்பட்டார். இவர் கொள்ளை கும்பலுக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    பெங்களூரில் விமான நிலையத்துக்கு சென்ற பெண்ணை மானபங்கப்படுத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பெங்களூர்:

    பெங்களூரை சேர்ந்த கட்டிட கலை வடிவமைப்பாளரான 26 வயது பெண் கடந்த 1-ந் தேதி மும்பை புறப்பட்டார்.

    அதிகாலை 2 மணி அளவில் அவர் வாடகை காரில் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    ஆனால் திடீரென கார் டிரைவர் மாற்றுப் பாதையில் அழைத்து சென்றார். அப்போது அந்த பெண் இது குறித்து கேட்ட போது மிரட்டினார். அந்த பெண்ணை காரில் கடத்தி சென்றார். பின்னர் தனது காரில் வைத்து மானபங்கப்படுத்தினார்.

    அதோடு அந்த பெண்ணின் ஆடையை கட்டாயமாக அவிழ்த்ததும் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டார். மேலும் படம் எடுக்க போஸ் கொடுக்குமாறும் கட்டாயப்படுத்தினார்.

    இதுகுறித்து புகார் கொடுத்தால் நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்து விடுவோம் என்றும் மிரட்டினார்.

    அந்த பெண் மும்பை சென்றடைந்த பிறகு நடந்த சம்பவம் குறித்து பெங்களூர் போலீஸ் கமி‌ஷனருக்கு இமெயில் மூலம் புகார் அனுப்பினார். இந்த புகார் மனு ஜே.பி. நகர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

    இந்த புகாரின் அடிப்படையில் பெண்ணை மானபங்கப்படுத்திய வாடகை கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    செல்போனில் படம் எடுப்பதற்காக குற்றவாளி அந்த பெண்ணின் ஆடையை அவிழ்க்குமாறு கட்டாயப்படுத்தினார். ஆனால் அந்த பெண் மறுத்தார். மிரட்டி படம் எடுத்து உள்ளார்.

    இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறியுள்ளார். #Tamilnews
    சிவகங்கையில் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை கமலா தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஏலம்மாள் (வயது 45). இவர், சிவகங்கையில் இருந்து வாடகை காரில் மதுரைக்கு சென்றார்.

    அதற்கான வாடகையை ஏலம்மாள் கொடுக்கவில்லை. இதனால் டிரைவர் கிருஷ்ணன் (33) வந்து கேட்டார். அப்போது ஏலம்மாளுக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் கிருஷ்ணன் தன்னை தாக்கியதாக சிவகங்கை டவுன் போலீசில் ஏலம்மாள் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    தொடர்ந்து கார் டிரைவர் கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    காரைக்குடி அருகே உள்ள காளவாய் பொட்டல் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி காளியம்மாள் (60), காரைக்குடியைச் சேர்ந்த முத்து (55) என்பவரிடம் ரூ. 10 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். இதனை திருப்பிக் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து முத்து தனது சகோதரி முருகேஸ்வரியுடன் வந்து காளியம்மாளிடம் பணம் கேட்டார்.

    அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான் தாக்கப்பட்டதாக காரைக்குடி தெற்கு போலீசில் காளியம்மாள் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப் பதிவு செய்து சகோதரிகள் முத்து, முருகேசுவரியை கைது செய்தார். #Tamilnews
    ×