என் மலர்
நீங்கள் தேடியது "கிணறு"
- விவசாய நிலத்தில் தோண்டப்பட்டிருந்த கிணற்றில் 27 பன்றிகள் விழுந்துள்ளன.
- இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கியோஞ்சார் மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிக்கி தவித்த காட்டுப்பன்றிகளை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
கிணற்றில் சிக்கிய காட்டுப்பன்றிகள் பத்திரமாக மீட்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.
இரவு உணவு தேடி பாலபத்ரபூர் வனப்பகுதிக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் 27 காட்டுப்பன்றிகள் நுழைந்துள்ளது. விவசாய நிலத்தில் தோண்டப்பட்டிருந்த கிணற்றில் 27 காட்டுப்பன்றிகளும் ஒன்றன் பின் ஒன்றாக விழுந்துள்ளன.
இந்த தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் கிணற்றில் இருந்து காட்டுப்பன்றிகள் வெளியே வருவதற்கு இயந்திரங்கள் கொண்டு சரிவுப் பாதை அமைத்தனர். பின்னர் அந்த பாதை வழியாக காட்டுப்பன்றிகள் கிணற்றை விட்டு பத்திரமாக வெளியே வந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய வனத்துறை அதிகாரி, "ஒரு குட்டி காட்டுப்பன்றி முதலில் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம், பின்பு அதை மீட்பதற்காக ஒவ்வொரு பன்றியும் உள்ளே விழுந்திருக்கலாம் என்றும் இந்தச் சம்பவத்தில் ஒரு ஒரு குட்டி காட்டுப்பன்றி இறந்ததாகவும், மீதமுள்ள 26 காட்டுப்பன்றிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு காட்டில் விடப்பட்டது" என்று தெரிவித்தார்.
தனியார் விவசாய நிலத்தில் இந்த கிணறு தோண்டப்பட்டுள்ளதாகவும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க கிணற்றை மூடி வைக்குமாறு சம்பந்தப்பட்ட விவசாயியிடம் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
All life matters. Lovable ?A group of 27 wild boars fell in an open well in Keonjhar Forest Division.All were successfully rescued by opening a ramp by the field staff and went inside forest except one litter and are happily moving with the mother. pic.twitter.com/1FnnhxOmnU
— Susanta Nanda (@susantananda3) October 29, 2024
- கிணற்றுக்குள் விழுந்த பூனையை மீட்கும் முயற்சியில் 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் குதித்துள்ளனர்
- பூனையை மீட்க கிணற்றில் இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு இறங்கிய 6வது நபர் காவல்துறையினரால் மீட்கப்பட்டார்
மகாராஷ்டிராவின் அகமத்நகர் மாவட்டத்தில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற உள்ளே குதித்த 5 பேர் மரணமடைந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
கிணற்றுக்குள் விழுந்த பூனையை மீட்கும் முயற்சியில் 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் குதித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பூனையை மீட்க கிணற்றில் இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு இறங்கிய 6வது நபர் காவல்துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அது விலங்குகளின் கழிவுகளை சேமித்து பயோகேஸ் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கிணறு என போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் தெய்வ சகாயம். இவரது மகன் அந்தோணி ராஜ் (வயது 23). மாற்றுத்திறனாளி. சம்பவத்தன்று அந்தோணி ராஜ் வீட்டில் இருந்தவர் திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர்கள் அந்தோணி ராஜை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதே பகுதியில் தரை கிணறு உள்ளது.
அங்கு சென்று பார்த்த போது தண்ணீரில் மூழ்கி அந்தோணி ராஜ் பிணமாக கிடந்தார். இத்தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தோணி ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றை சுற்றி இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
- அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து முதல் உதவி செய்யப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (55). இவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றை சுற்றி இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். கடந்த 2 நாட்களாக பெய்து வந்த மழையினால் கிணற்றை சுற்றி சேறும், சகதியுமாக இருந்துள்ளது.
இதனால் எதிர்பாராத விதமாக கால் வழுக்கி 20 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் செல்வமணி தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் செல்வகுமாரை உயிருடன் மீட்டனர். அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து முதல் உதவி செய்யப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- தீயணைக்கும் படை வீரர்கள் போராடி மீட்டனர்
- பசு மாட்டை அதன் உரிமையாளரிடம் தீயணைக்கும் படை வீரர்கள் பத்திரமாக ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள அழகப்பபுரத்தை அடுத்துள்ள ஜேம்ஸ்டவுணை சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவருக்கு சொந்தமான பசு மாடு நேற்று காலையில் அந்த பகுதியில் மேய்ச்ச லுக்காக வீட்டில் இருந்து வெளியில் அவிழ்த்து விடப் பட்டு இருந்தது.
அதன்பிறகு அந்த பசு மாடு நேற்று மாலை வரை வீடு திரும்ப வில்லை. இ தனால் அந்தோணி ராஜ் பசுமாட்டை தேடி மேய்ச்சல் நிலத்துக்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள 50 அடி ஆழ தண்ணீர் இல்லாமல் சேறும் சகதியு மாக இருந்த பாழடைந்த கிணற்றில் பசுமாடு தவறி விழுந்து சகதியில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டி ருந்ததை பார்த் தார். உடனே அவர் இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அந்த பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை மழையிலும் விடாது போராடி ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் உயிருடன் மீட்டனர். அதன்பிறகு அந்த பசு மாட்டை அதன் உரிமையாளரிடம் தீயணைக்கும் படை வீரர்கள் பத்திரமாக ஒப்படைத்தனர்.
- தீயணைக்கும் படை வீரர்கள் அதிரடி நடவடிக்கை
- அந்த நாய் தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் மிதுன் தாஸ். கூலி தொழிலாளி. இவரது வீட்டு நாய் தெற்கு குண்டல் மெயின் ரோட்டின் அருகில் உள்ள 40 அடி ஆழ பஞ்சாயத்து கிணற்றில் தவறி விழுந்தது. அந்த நாய் தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.
இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த நாயை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த நாயை தீயணைக்கும் படை வீரர்கள் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
- வெள்ளையன் நிலத்திற்கு அருகே பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டது.
- ரவி மனைவி செல்வி ஆகியோர் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படு கிறது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மனைவி செந்தமிழ் செல்வி (வயது 40) ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் (43) நிலத்திற்கு அருகே பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டது. இதனால் வெள்ளையன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வப் ேபாது செந்தமிழ் செல்வியை திட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டு இருந்த செந்தமிழ்செல்வியை வெள்ளை யன், அவரது சகோதரர்கள் பழனி, மாது, நாகராஜ் மற்றும் அவரது உறவினர்கள் பெரியசாமி மகன் கட்டிமுத்து, ரவி மனைவி செல்வி ஆகியோர் திட்டி, தாக்கி கொலை மிரட் டல் விடுத்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்து செந்தமிழ் செல்வி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ் குமார் வழக்கு பதிவு செய்து வெள்ளை யன், நாகராஜ் ஆகியோரை கைது செய்தார். மற்றவர்களை தேடி வரு கிறார்.
- கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக வள்ளியம்மாள் தவறி விழுந்தார்.
- உடனடியாக இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு சூளை ஈ.பி.பி. நகரை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (80). இவர் அந்த பகுதியில் உள்ள காம்பவுண்ட் வீட்டில் வசித்து வருகிறார். அந்த காம்பவுண்ட் பகுதியில் 100 அடி பொது கிணறு உள்ளது. தற்போது அந்த கிணற்றில் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது.
இந்நிலையில் இன்று காலை வள்ளியம்மாள் ரேஷன் கடைக்கு செல்வதற்காக கிளம்பி சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்குள் எதிர்பாராத விதமாக வள்ளியம்மாள் தவறி விழுந்தார். கிணற்றில் இருந்த கயிறை பிடித்து கொண்டு கூச்சலிட்டார்.
இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் வள்ளியம்மாள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை தேடி அந்த பகுதி வழியாக வந்தனர். அப்போது கிணற்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து பதறி போய் கிணற்றை பார்த்தபோது வள்ளியம்மாள் கூச்சல் போட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு உதவி அலுவலர் கலைச்செல்வம் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கயிறு கட்டி இறங்கி மூதாட்டியை உயிருடன் மீட்டனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கயிறு கட்டி மாட்டை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
- கிணற்றில் பார்த்த போது பூனை தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண் டிருந்தது தெரியவந்தது
நாகர்கோவில் :
நாகர்கோவில் நேசமணி நகர் பெஞ்ச மின் தெரு ரேஷன் கடை பின்புறம் 70 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் இருந்து பூனையின் சத்தம் கேட்டது.
அந்த பகுதி மக்கள் கிணற்றில் பார்த்த போது பூனை தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண் டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கயிறு மூலமாக கிணற்றின் உள்ளே இறங்கி பூனையை மீட்க நட வடிக்கையை மேற்கொண்ட னர். சுமார் 1 மணி நேரத் திற்கு பிறகு பூனை பத்திரமாக மீட்கப்பட்டது.
இதேபோல் தேரேக் கால்புதூர், சண்முகா நகர் பகுதியில் உள்ள கால்வா யில் மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மாடு சேற்றில் சிக்கியது. சேற்றில் சிக்கிய மாடு வெளியே வர முடியாமல் தவித்தது.
மாட்டை மீட்க பொதுமக்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் முடியவில்லை. இதை யடுத்து தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கயிறு கட்டி மாட்டை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட மாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
- கடந்த ஒரு வார காலமாக ஒரு போர் தண்ணீர் மட்டும் பால் நிறத்தில் வந்துள்ளது.
- அதிகாரிகள் இதை உடனே ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் பால்பாண்டி, விவசாயி. இவருக்கு சொந்தமான கிணறு மற்றும் தோட்டம் சேரகுளம் அருகே உள்ள தீராத்திகுளத்தில் உள்ளது.
இந்த கிணற்று பாசனம் மூலம் வாழை மற்றும் தென்னை, பருத்தி விவசாயம் செய்து வருகிறார். இதற்காக 2 ஆழ்துளை போர்கள் அமைத்து அதில் வரும் தண்ணீரை கிணற்றில் விட்டு, அதன் பின் கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் இறைத்து தண்ணீர் பாய்த்து வருகிறார்.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பருவமழை முறையாக பெய்யாத காரணத்தினால் தற்போது தென்னை மற்றும் பருத்தி பயிரிட்டு உள்ளார். இவர் தினமும் சென்று தண்ணீர் இறைத்து தோட்டத்தில் பாய்ப்பது வழக்கம். தற்போது மழை இல்லாத காரணத்தினால் கிணற்றில் தண்ணீர் குறைந்த அளவே உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் வீட்டில் இருந்து கிணற்றிற்கு சென்று தண்ணீர் பாய்க்க சென்றுள்ளார். அதற்காக 2 ஆழ்துளை போரையும் போட்டுள்ளார். அப்போது அதில் ஒரு ஆழ்துளை போரில் இருந்து வரும் தண்ணீர் பால் போல் வெள்ளை நிறத்தில் வந்துள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த பால்பாண்டி அருகில் உள்ள மற்றொரு போர் தண்ணீரை பார்த்துள்ளார்.
ஆனால் அந்த போரில் வந்த தண்ணீர் சரியான தண்ணீர் போன்றே வந்துள்ளது. மேலும் சந்தேகமடைந்த பால்பாண்டி அருகில் இருந்த மற்றொரு விவசாயியின் போரை பார்த்துள்ளார். அங்கு தண்ணீர் சரியாக வந்துள்ளது.
இதற்கிடையில் கடந்த ஒரு வார காலமாக ஒரு போர் தண்ணீர் மட்டும் பால் நிறத்தில் வந்துள்ளது. இதனால் அந்த தண்ணீர் கிணற்றில் விழுந்து கிணற்று தண்ணீர் அனைத்தும் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது.
விவசாயப்பகுதி என்பதால் அந்த பகுதியில் ஏராளமான மயில்கள் உள்ளது. அந்த மயில்கள் இந்த கிணற்று அருகில் உள்ள தொட்டியில் கிடக்கும் தண்ணீரை குடிக்கும். தற்போது கிணற்று தண்ணீர் நிறம் மாறியுள்ளதால், அதிர்ச்சி அடைந்த விவசாயி பால்பாண்டி தொட்டியில் தண்ணீர் நிரப்ப அச்சப்படுகிறார்.
இதுகுறித்து விவசாயி பால்பாண்டி கூறுகையில், கடந்த வருடமும் இதே போல் 2 நாட்கள் இந்த போரில் இதே போல் பால் நிறத்தில் தண்ணீர் வந்தது. அதன் பின்னர் முறையாக மழை பெய்யவில்லை. இந்த வருடமும் அதே போல் தண்ணீர் நிறம் மாறியுள்ளது. எனவே இது வறட்சிக்கான அறிகுறியாக இருக்கும் என்று அச்சப்பட வைக்கிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை உடனே ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
- கிணற்றில் அதிகளவில் டீசல் கொட்டியிருந்ததால் வெகுநேரம் தீ பயங்கரமாக கொளுந்துவிட்டு எரிந்தது.
- கிணறு தீப்பிடித்து எரிந்ததை பார்க்க ஏதோ எண்ணெய் கிணறு தீப்பிடித்து எரிவதைப்போன்று காணப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் சீரட்டமலை பகுதி வழியாக டீசல் நிரப்பிய டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென ரோட்டோரத்தில் இருந்த 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அந்த லாரியில் 20ஆயிரம் லிட்டர் டீசல் இருந்துள்ளது. லாரி கவிழ்ந்ததில் டேங்கர் உடைந்து அதில்இருந்த டீசல் முழுவதும் வெளியே கொட்டியது. அது அந்த பகுதியில் இருந்த நிலப்பரப்பில் பாய்ந்தோடியது. மேலும் அங்குள்ள வீடுகளில் இருந்த கிணறுகளிலும் டீசல் கொட்டியது.
இந்நிலையில் பிஜூ என்பவர் தனது கிணற்று மோட்டாரை போட்டிருக்கிறார். அப்போது கிணற்றில் கொட்டிக்கிடந்த டீசல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தண்ணீருடன் கலந்திருந்த டீசல் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது.
கிணற்றில் அதிகளவில் டீசல் கொட்டியிருந்ததால் வெகுநேரம் தீ பயங்கரமாக கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. கிணறு தீப்பிடித்து எரிந்ததை பார்க்க ஏதோ எண்ணெய் கிணறு தீப்பிடித்து எரிவதைப்போன்று காணப்பட்டது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வெகுநேரமாக தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
- கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பிணம் மிதப்பதாக கடையநல்லூர் போலீசாருக்கு அப்பகுதினர் தகவல் தெரிவித்தனர்.
- கொன்று வீசியவர்கள் யார்? என்பது குறித்து கடையநல்லூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வலசை கிராமம் உள்ளது. அதன் அருகில் சேர்ந்தமரம் சாலையில் கண்டமான் குளம் என்னும் குளத்துகரை அருகில் பயன்பாடு இல்லாத கிணறு உள்ளது.
அந்த கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பிணம் மிதப்பதாக கடையநல்லூர் போலீசாருக்கு அப்பகுதினர் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், கருப்பசாமி ஆகியோர் விரைந்து வந்தனர்.
தொடர்ந்து கடையநல்லூர் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் வீசப்பட்ட மூட்டையை வெளியில் எடுத்து கொண்டு வந்தனர். அதனை பிரித்து பார்த்த போது அதில் இருப்பது இளம் பெண்ணின் சடலம் என தெரியவந்தது. அந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொன்று வீசியவர்கள் யார்? என்பது குறித்து கடையநல்லூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.