என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிராம பஞ்சாயத்து"
- தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க எண்ணெய் சட்டியில் கையை விட தயார் என கங்கம்மா ஒப்புக்கொண்டார்.
- தொடர்ந்து பெண் அதிகாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தேன் பள்ளி பஞ்சாயத்து எஸ்.டி.காலனியைச் சேர்ந்தவர் குண்டய்யா. இவருடைய மனைவி கங்கம்மா. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
கங்கம்மாவிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒருவருடன் தகாத உறவு இருப்பதாக குண்டய்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குண்டய்யா அந்த ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தார். இது சம்பந்தமாக அந்த கிராமத்தில் பஞ்சாயத்து கூடியது.
அப்போது கங்கம்மா கொதிக்கும் எண்ணெயில் கையை விட வேண்டும். அவரது கையில் காயம் ஏற்பட்டால் நடத்தையில் தவறு இருப்பது உறுதி செய்யப்படும்.
கையில் காயம் ஏற்படாமல் நன்றாக இருந்தால் அவர் பத்தினி குற்றமற்றவர் என்பதை ஒப்புக்கொள்வோம் என பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறினர்.
இதனைக் கேட்டதும் கங்கம்மா அதிர்ந்து போனார். இது போன்ற விபரீத சோதனை வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். ஆனாலும் கண்டிப்பாக எண்ணெய் சட்டியில் கைவிட வேண்டும் என அவரை சித்ரவதை செய்தனர்.
இதனை தொடர்ந்து தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க எண்ணெய் சட்டியில் கையை விட தயார் என கங்கம்மா ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து பஞ்சாயத்து நடந்த இடத்தில் எண்ணெய் நன்றாக காய்ச்சி கொதிக்க வைத்தனர். சட்டியில் வைத்து பஞ்சாயத்து முன்னிலையில் கொண்டு வந்து வைத்தனர். இதற்கிடையே அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் இதுகுறித்து சமூக நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிருந்து பதறிப் போன சமூகநல அதிகாரி கவுரி என்பவர் சம்பவ இடத்திற்கு வந்தார்.
கங்கம்மா எண்ணெய் சட்டியில் கைவிடுவதற்காக சென்றார். அந்த நேரத்தில் வந்த அதிகாரி கவுரி அதனை தடுத்து நிறுத்தினார்.
இது போன்ற செயலில் ஈடுபடுவது தவறு என எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அவரது பேச்சை மதிக்காத கிராம மக்கள் அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பெண் அதிகாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் குண்டய்யா மற்றும் அவரது மனைவி கங்கம்மாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் தேவையை மனுவாக அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- நுண்ணீர் பாசன திட்டத்தில் பதிவு செய்தல், சிறு தொழில் செய்ய விரும்பும் முனைவோர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 37 பஞ்சாயத்துக்களில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் பஞ்சாயத்துக்களில் சிறப்பு முகாம் இன்று (7-ந் தேதி) நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாம் சிறுகாவேரிப்பாக்கம், கோனேரிக்குப்பம், ஆசூர், தாமல், திம்மசமுத்திரம், அத்திவாக்கம், ஏனாத்தூர், வாரணவாசி, இலுப்பப்பட்டு, பழையசீவரம், ஐமச்சேரி, கட்டவாக்கம், கொட்டவாக்கம், முத்தியால்பேட்டை, அரும்புலியூர், திருவானைக்கோவில், பெருநகர், காரனை, ஒழையூர், சாலவாக்கம், சிறுதாமூர், கம்மாளம்பூண்டி, ராவத்தநல்லூர், மொளச்சூர், பிச்சிவாக்கம், சந்தவேலூர், கிளாய், மேல்மதுரமங்கலம், செங்காடு, துளசாபுரம், வெங்காடு, கொளத்தூர், வரதராஜபுரம், ஐயப்பந்தாங்கல், கோவூர், ஆதனூர், கெருகம்பாக்கம் ஆகிய பஞ்சாயத்துக்களில் நடைபெறுகிறது.
முகாமில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் தேவையை மனுவாக அளிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பட்டா மாறுதல், சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்குதல், பி.எம்.கிசான் கடன் அட்டை (கே.சி.சி.) விண்ணப்பம் பெறுதல், பயிர் காப்பீடு பதிவுகள் மேற்கொள்ளுதல், பயிர் கடன் விண்ணப்பம் பெறுதல், நுண்ணீர் பாசன திட்டத்தில் பதிவு செய்தல், சிறு தொழில் செய்ய விரும்பும் முனைவோர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்