search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோர்ட்டில் ஆஜர்"

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட மணிவண்ணன் போலீஸ் காவல் முடிந்து இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். #PollachiCase #CBCID
    கோவை:

    பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    பாலியல் புகார் அளித்த மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் பார் நாகராஜ், செந்தில், மற்றொரு வசந்த குமார், பாபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் (25) கடந்த 25-ந் தேதி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல்வேறு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.

    மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததில் மணிவண்ணனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக மணிவண்ணனை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவரை 3 நாட்கள் விசாரிக்க நீதிபதி நாகராஜன் அனுமதி அளித்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மணிவண்ணனை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரிடம் மாணவிகள், இளம்பெண்கள் புகார் தொடர்பாக துருவி, துருவி விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது மணிவண்ணன் பயன்படுத்திய செல்போன் கைப்பற்றப்படவில்லை. அந்த செல்போன் தொலைந்து விட்டதாக மணிவண்ணன் கூறி உள்ளார். அதில் மாணவிகள், இளம்பெண்கள் ஆபாச படம் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மணிவண்ணன் கொடுத்த தகவலின் பேரில் வாலிபர் ஒருவரிடமும் விசாரணை நடத்தி உள்ளனர். மாணவியின் அண்ணனை தாக்கிய வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். அவர்களுக்கும் பாலியல் விவகாரத்திற்கும் தொடர்பு உள்ளதா? எனவும் மணிவண்ணனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் போலீசாருக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

    3 நாட்கள் விசாரணை இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து இன்று மாலை மணிவண்ணனை கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். #PollachiCase #CBCID

    விருதுநகரில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 8-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
    விருதுநகர்:

    ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22-ந்தேதி முதல் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். 4-வது நாளாக நேற்று முன்தினம் வேலை நிறுத்தத்தை தொடர்ந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலிலும் ஈடுபட்டனர்.

    இதில் மறியலில் ஈடுபட்டதாக 1,959 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் மாலை ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை போலீசார் கைது செய்யப்போவதாக தெரிவித்தவுடன் மற்றவர்கள் திருமண மண்டபத்தை விட்டு வெளியேற மறுத்து நள்ளிரவு வரை அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன்பின்னர் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 35 பேர் தவிர மற்றவர்கள் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினர். வருவாய்துறை அலுவலர், மாநில செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் ராமநாதன் உள்பட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 35 பேரும் நேற்று விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி வருகிற (அடுத்த மாதம்) 8-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
    அல்-அஜிசியா இரும்பு ஆலை மற்றும் ஹில் உலோக ஆலை தொடர்பான 2 ஊழல் வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். #NawazSharif #CorruptionCase
    இஸ்லாமாபாத்:

    பனாமா கேட் ஊழல் வழக்கில் சிக்கி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க தேசிய பொறுப்புடைமை கோர்ட்டுக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் படி லண்டன் அவன்பீல்டு நகரில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியது, அல்-அஜிசியா இரும்பு ஆலை மற்றும் ஹில் உலோக ஆலை தொடர்பான 3 ஊழல் வழக்குகளை தேசிய பொறுப்புடைமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

    இதில் அவன்பீல்டு வழக்கில் நவாஸ் ஷெரீப், அவருடைய மகள் மரியம் நவாஸ், மருமகன் முகமது சப்தார் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள், மரியம் நவாசுக்கு 7 ஆண்டுகள் மற்றும் முகமது சப்தாருக்கு ஓர் ஆண்டு சிறைதண்டனை விதித்து கடந்த மாதம் 6-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் ராவல்பிண்டி நகரில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் அல்-அஜிசியா இரும்பு ஆலை மற்றும் ஹில் உலோக ஆலை தொடர்பான 2 ஊழல் வழக்குகள் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு நீதிபதி அர்ஷத் மாலிக் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. நவாஸ் ஷெரீப்பை விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்காக அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அடியாலா சிறையில் இருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடைமை கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர்.அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக கோர்ட்டிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வழக்கில் தொடர்புடையவர்கள், நீதிபதி மற்றும் வக்கீல்கள் தவிர மற்றவர்கள் யாரும் கோர்ட்டுக்குள் நுழைய அதிகாரிகள் தடைவிதித்தனர். பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

    கோர்ட்டில் நீதிபதி முன்பு நவாஸ் ஷெரீப் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதே சமயம் இந்த வழக்குகளில் தொடர்புடைய நவாஸ் ஷெரீப்பின் மகன்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. முந்தைய அவன்பீல்டு வழக்கிலும் அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை என்பதும், இதனால் அவர்கள் தலைமறைவாக இருப்பதாக கோர்ட்டு ஏற்கனவே அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.  #NawazSharif #CorruptionCase  #tamilnews
    ×