search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் குளம்"

    சோழிங்கநல்லூர் அருகே கை கழுவ சென்ற போது கோவில் குளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூரை அடுத்த பொன்னியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது 5 வயது மகன் குகன். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை ரமேஷ், மனைவி மற்றும் மகன் குகனுடன் பொன்னியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    கோவிலில் கொடுத்த பிரசாதத்தை அனைவரும் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் சிறுவன் குகன் மட்டும் கைகழுவுவதற்காக கோவில் குளத்துக்கு சென்றான். அப்போது அவன் நிலை தடுமாறி குளத்துக்குள் விழுந்தான்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குகனை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குகன் பரிதாபமாக இறந்தான்.
    வில்லியனூரில் கோவில் குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி நீரில் மூழ்கி பலியானார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது80). நேற்று மதியம் இவர் திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். சாமிதரிசனம் செய்வதற்கு முன்பு கோவில் குளத்தில் படிக்கட்டில் இறங்கி கால் கழுவ சென்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக கோவிந்தம்மாள் குளத்தில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கிய கோவிந்தம்மாள் சிறிது நேரத்தில் குளத்தில் பிணமாக மிதந்தார். அப்போது கோவிலுக்கு வந்த பக்தர்கள் குளத்தில் கோவிந்தம்மாள் பிணமாக மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலயய்ன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் செலவராஜ், ஆகியோர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவிடைமருதூரில் கோவில் குளத்தில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் மிதந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூரில் பிரசித்தி பெற்ற மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் குளத்தில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பிணம் மிதந்தது.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள், குளத்தில் பிணம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி திருவிடை மருதூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆண் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குளத்தில் பிணமாக மிதந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கொச்சி அருகே கோவில் குளத்தில் பள்ளி வேன் பாய்ந்து 2 குழந்தைகள், ஆயா பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட டிரைவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் மரடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் நாயர் (வயது 42). இவரது மனைவி பிரியா (38). இவர்களது மகன் ஆதித்தியன் (4½).

    இதே பகுதியை சேர்ந்த சனல்குமார் மற்றும் ஸ்மிதா மகள் வித்யலட்சுமி (5). இவர்கள் 2 பேரும் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தனர்.

    நேற்று பள்ளி வேனில் ஆதித்தியனும், வித்யலட்சுமியும் அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளி முடிந்ததும் மீண்டும் குழந்தைகளை அவரவர் வீட்டில் விட வேனில் ஏற்றப்பட்டனர்.

    வேனை அனில்குமார் (45) ஓட்டினார். ஆதித்தியன், வித்யலட்சுமி உள்பட மேலும் 6 குழந்தைகள் மற்றும் பள்ளி ஆயா லதா உன்னி ஆகியோர் இருந்தனர். வேன் சுமார் அரை கி.மீட்டர் தூரம் வந்ததும் வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    வேனில் இருந்த குழந்தைகள் அலறி சத்தம்போட்டனர். அங்குள்ள பகவதியம்மன் கோவில் குளத்தில் வேன் பாய்ந்தது. இந்த குளம் சேறு நிறைந்த குளமாகும். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வேனை பார்த்தபோது வேன் சேற்றில் மூழ்க தொடங்கியது.

    அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வேன் கண்ணாடியை உடைத்து 6 குழந்தைகளை மீட்டனர். இதனிடையே கொச்சி போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். படுகாயங்களுடன் மூழ்கி கொண்டிருந்த டிரைவர் அனில்குமாரை மீட்டனர்.



    இதில் குழந்தைகள் ஆதித்தியன், வித்யலட்சுமி மற்றும் பள்ளி ஆயா லதா உன்னி ஆகியோர் குளத்தில் மூழ்கி பலியானார்கள். பலியான 3 பேரின் உடல்கள் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டிரைவர் அனில்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



    ×