search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தீஸ்வர் புஜாரா"

    • புஜாரா அணிக்கு தேர்வு செய்யப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
    • அவர் கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆடினார்.

    புதுடெல்லி:

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த பார்டர்- கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி வருகிற 28-ந்தேதி அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தொடரில் 103 டெஸ்டில் விளையாடிய அனுபவம் வாய்ந்த புஜாரா அணிக்கு தேர்வு செய்யப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகமகா உள்ளது. அவர் கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆடினார்.

    • புஜாரா முதல் தர கிரிக்கெட்டில் 21 ஆயிரம் ரன்னையும் கடந்தார்.
    • முதல் தர கிரிக்கெட்டில் 18-வது இரட்டை சதம் அடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    இதில் 2-வது லீக் ஆட்டம் ஒன்றில் சவுராஷ்டிரா-சத்தீஷ்கார் (டி பிரிவு) அணிகள் மோதிய ஆட்டம் ராஜ்கோட்டில் நடந்தது. சத்தீஷ்கார் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 578 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 75 ரன்னுடனும், ஷெல்டன் ஜாக்சன் 57 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து பேட் செய்த புஜாரா நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷெல்டன் ஜாக்சன் 62 ரன்னிலும், அர்பித் வசவதா 73 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று கலக்கிய புஜாரா இரட்டை சதம் விளாசினார்.

    இது அவருக்கு ரஞ்சி போட்டியில் 9-வது இரட்டை சதமாகவும், முதல் தர கிரிக்கெட்டில் 18-வது இரட்டை சதமாகவும் பதிவானது. இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் (டெஸ்டையும் சேர்த்து) அதிக இரட்டை சதம் அடித்தவர்களின் பட்டியலில் புஜாரா 4-வது இடத்துக்கு முன்னேறினார். இதில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (37 இரட்டை சதம்), இங்கிலாந்தின் வாலி ஹேமண்ட் (36), ஹென்ட்ரென் (22) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

    அத்துடன் புஜாரா முதல் தர கிரிக்கெட்டில் 21 ஆயிரம் ரன்னையும் கடந்தார். கவாஸ்கர், டெண்டுல்கர், டிராவிட் ஆகியோருக்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டிய 4-வது இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெற்றார்.

    36 வயதான புஜாரா 234 ரன்களில் (383 பந்து, 25 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஷசாங்க் சிங் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அப்போது சவுராஷ்டிரா அணி 137.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 478 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் இந்த ஆட்டம் இரு அணி கேப்டன்கள் சம்மதத்துடன் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. முதல் இன்னிங்சே முடியாததால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்றன.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். #AUSvIND #RamnathKovind
    புதுடெல்லி:

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.

    72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தமைக்கு வாழ்த்துக்கள். பேட்டிங், பந்துவீச்சு என இந்திய அணியின் ஒட்டுமொத்த சிறப்பான பங்களிப்பை கண்டு பெருமை கொள்கிறோம் என தனது வாழ்த்து செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார். #AUSvIND #RamnathKovind
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. #AUSvIND
    சிட்னி:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.

    31 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா பாலோ-ஆன் ஆனாது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் 322 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா, பாலோ-ஆன் வழங்கியது. இதனால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. 

    நேற்று 4-வது நாள் ஆட்டத்தின் போது, 2-வது செசனில் தேனீர் இடைவேளைக்குப்பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருக்கும்போது போட்டி நிறுத்தப்பட்டது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது.



    கடைசி நாளான இன்றும் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு போட்டி மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மைதானத்தை சோதித்த நடுவர்கள் போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர். இதையடுத்து கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தது.

    இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. 72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    கடைசி டெஸ்டில் ஆட்ட நாயகனாகவும், இந்த டெஸ்ட் தொடரின், தொடர் நாயகனாகவும் சத்தீஸ்வர் புஜாரா தேர்வு செய்யப்பட்டார். #AUSvIND

    ×