என் மலர்
நீங்கள் தேடியது "சிறுவர்கள்"
- ஆற்றில் குளித்த ராஜா நகரை சேர்ந்த சிறுவர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
- பொதுமக்கள் உதவியுடன் 2 சிறுவர்களையும் சடலமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றில் குளித்த ராஜா நகரை சேர்ந்த ஹரி பிரசாத் (15), பிரேம் குமார் (14) ஆழமாஜ பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கினர்.
ஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள் அளித்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் உதவியுடன் 2 சிறுவர்களையும் சடலமாக தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
சிறுவர்களின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த டெக்னிக்கை பயன்படுத்தி மேலும் சில சிறுவர்கள் இந்த முறையில் திருடியுள்ளனர்.
- ஏ.டி.எம். இல் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் ATM இயந்திரத்தில் வித்தியாசமான முறையில் கொள்ளையடித்த சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்காமல் பிளாஸ்டிக் மற்றும் பெவிகால் பயன்படுத்தி கொள்ளையடித்த சம்பவம் காவல்துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுபம் என்ற சிறுவன் தனது காதலிக்கு செலவு செய்வதற்காக ஏ.டி.எம். இயந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் வெளியே வரும் இடத்தில் பிளாஸ்டிக் ஸ்ட்ரிப்களை பெவிகால் கொண்டு சுபமும் அவனது நண்பனும் ஒட்டியுள்ளனர்.
இதனால் ஏ.டி.எம். இல் பணம் வெளியே வராமல் இடையில் சிக்கி கொள்ளும். இதனால் வாடிக்கையாளர்கள் பணம் இல்லை என்று நினைத்து வெளியே சென்று விடுகின்றனர். பின்னர் உள்ளே வரும் சிறுவர்கள் பிளாஸ்டிக் ஸ்ட்ரிப்பை வெளியே எடுத்து ஏ.டி.எம். இல் சிக்கி கொண்ட பணத்தை வெளியே எடுக்கின்றனர்.
இந்த சிறுவர்களின் டெக்னிக்கை பயன்படுத்தி மேலும் சில சிறுவர்கள் இந்த முறையில் திருடியுள்ளனர்.
தொடர்ந்து வங்கிக்கணக்கில் இருந்து தங்களது பணம் திருடப்படுவதை அடுத்த வாடிக்கையாளர்கள் வங்கிகளில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது ஏ.டி.எம். இல் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சிறுவர்கள் ஏ.டி.எம். இல் திருடுவது பதிவாகியுள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த திருட்டு வழக்கின் முக்கிய குற்றவாளியான சுபம் மற்றும் அவரது காதலியை போலீசார் தேடி வருகின்றனர்.
- அதிகாலை 3 மணியளவில் இளைய மகன் விஜய்க்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
- சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சின்ன ஜமக்கா, மகன்கள் ராமகிருஷ்ணா (வயது 11), விஜய் (6).
நேற்று முன் தினம் இரவு தனது மகன்களுடன் ஊரில் உள்ள ஒரு பானி பூரி கடைக்கு சென்றனர். தந்தை வாங்கி கொடுத்த பானி பூரியை சாப்பிட்டுவிட்டு சிறுவர்கள் வீட்டுக்குச் சென்று தூங்கினர்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் இளைய மகன் விஜய்க்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், அங்கிருந்து ராஜமகேந்திராவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு விஜய் இறந்தார்.
இதனை தொடர்ந்து காலை 6.30 மணியளவில், மூத்த மகன், ராமகிருஷ்ணனுக்கு, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. ஏலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், வழியிலேயே அவர் இறந்தார். பானி பூரி சாப்பிட்டதால் மகன்கள் இறந்ததாக பெற்றோர்கள் கூறினர்.
தூங்கும் போது ஏதேனும் விஷ பூச்சி கடித்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் இரவில் வீட்டில் சாப்பிட்ட உணவு, பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஒரு வாரத்துக்கு மேலாகியும் தப்பி ஓடிய சிறுவர்கள் குறித்து துப்பு கிடைக்கவில்லை.
- குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் 20 குழந்தைகளை வேறு சில மாவட்டங்களில் செயல்படும் காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி:
திருச்சி சத்திரம் வி.என்.நகர் பகுதியில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு உரிமம் பெற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு குழந்தை திருமணங்களால் பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர் சிறுமிகள், பல்வேறு காரணங்களால் வீடுகளில் இருந்து வெளியேறி காவல் துறையினரால் மீட்கப்படும் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு காப்பக வார்டனின் கையில் இருந்த சாவியை பறித்துக் கொண்டு 16 வயதுள்ள ஒடிசா மற்றும் ராமநாதபுரம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 4 சிறுவர்கள் தப்பி ஓடினர்.
அதைத்தொடர்ந்து மறுநாள் அந்த காப்பகத்தின் பொறுப்பாளர் ராஜேஷ் கோட்டை போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 4 சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.
ஆனால் ஒரு வாரத்துக்கு மேலாகியும் தப்பி ஓடிய சிறுவர்கள் குறித்து துப்பு கிடைக்கவில்லை.
அதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்ட கலெக்டர் எம்.பிரதீப் குமார் அந்தக் காப்பக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி சிறுவர்கள் தப்பி ஓடியது குறித்து விளக்கம் கேட்டார். பின்னர் அந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 20 குழந்தைகளை வேறு காப்பகங்களுக்கு மாற்றுவதற்கு உத்தரவிட்டார். அதன்படி குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் 20 குழந்தைகளை வேறு சில மாவட்டங்களில் செயல்படும் காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
மறு உத்தரவு வரும் வரை அந்த சிறுவர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ள காப்பகங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என கலெக்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரூ.20 ஆயிரத்தையும் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் திருடி சென்றனர்.
- நீதிபதி விசாரணை செய்து அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தார்.
ராஜாக்கமங்கலம் :
ராஜாக்கமங்கலம் அருகே எறும்பு காட்டில் ரத்தின தங்கம் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு எறும்பு காட்டை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 55) உட்பட 7 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 4 பேர் பகலிலும் 3 பேர் இரவிலும் பணியாற்றி வருகின்ற னர். நேற்று முன்தினம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் விற்ற ரூ.20 ஆயிரத்தை விஸ்வ நாதன் தனது தலையணையின் அடிப்பகுதியில் வைத்து விட்டு இரவு சுமார் 11 மணிக்கு தூங்கி னார். அப்போது ராஜாக்கமங்க லம் துறையை சேர்ந்த 17 வயது சிறுவனும், புன்னைநகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனும் பெட்ரோல் போடு வது போல் வந்து விஸ்வநாதனின் தலையணை அடியில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தையும் மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் திருடி சென்றனர்.
விஸ்வநாதன் கண் விழித்து பார்த்தபோது பணம் மற்றும் செல்போன் கொள்ளை யடிக் கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடி யாக அவர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ரத்தின தங்கத்திற்கு தகவல் அளித்தார்.
இச்சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் உரிமையா ளரின் கணவர் ராம்கோபால் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனிப்படையினர் பணம் மற்றும் செல்போனை திருடி சென்ற 2 சிறுவர்களையும் கைது செய்த னர். பெட்ரோல் பங்கில் திருடு வதற்கு முன்னதாக இருவரும் தாராவிளை மகேஷ் (வயது 45) என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளையும், புஷ்ப ஆண்டனி என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளையும், செல்போனையும் திருடியதை ஒப்புக்கொண்டனர். வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகர்கோவில் சிறார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி விசாரணை செய்து அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தார்.
- மாயமான 4 சிறுவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
- கோகுலின் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் நாகமங்கலத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை அடுத்துள்ள நரிக்குடி போலீஸ் சரகத்துக் குட்பட்ட சமத்துவபுரம் குடியிருப்பை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 38). கட்டிட தொழிலாளி இவர் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்றும் கட்டிட வேலை பார்ப்பதுண்டு.
அதன்படி சில மாதங்க ளுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்துள்ள நாகமங்கலத்துக்கு கட்டிட வேலைக்கு பாலகிருஷ்ணன் சென்றார். அப்போது இவ ருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கத்தின் மகன் கோகுலுக்கும் (16) பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நாகமங்க லத்தில் வேலை முடிந்த பின்பு பாலகிருஷ்ணன் ஊர் திரும்பி உள்ளார். அவருடன் கோகுலும் நரிக்குடிக்கு வந்தார். சில மாதங்கள் அங்கு தங்கியபோது அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் ஹபீஸ் (16), பிலாவடி குமார் மகன் அபிலேஷ் கார்த்திக் (14), ராஜபாண்டி மகன் அருண்பாண்டி (13)ஆகியோருடன் கோகுலுக்கு நட்பு ஏற்பட்டது. 4 பேரும் ஒன்றாக சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த னர்.
இந்த நிலையில் சம்பவத் தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற 4 பேரும் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சிஅடைந்த பாலகிருஷ்ணன் மற்றும் 3 சிறுவர்களின் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.
இதுகுறித்து பாலகிருஷ் ணன் நரிக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரும் எங்கு சென்றார்கள்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோகுலின் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் நாக மங்கலத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- இரவு நேரத்தில் கடைக்குள் மேற்கூரை வழியாக புகுந்து உள்ளே சென்றுள்ளனர்.
- 4 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் அண்ணா காய்கறி மார்க்கெட்டில் மர்ம நபர்கள் தொடர்ந்து தக்காளி திருட்டில் ஈடுபட்டு வந்தனர். தற்பொழுது திட்டக்குடியில் ராமநத்தம் - விருத்தாச்சலம் மாநில சாலையோரம் உள்ள பன்னீர் முட்டை கடையில் இரவு நேரத்தில் கடைக்குள் மேற்கூரை வழியாக புகுந்து உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் உள்ள 4 ஆயிரம் பணத்தை எடுப்பதும் மற்றும் பொருள்கள் எடுக்கும் காட்சிகள் அங்குள்ளசி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளதை வைத்து திட்டக்குடி பெரியார் நகரைச் சேர்ந்த சிறுவன், கோழியூரை சேர்ந்த சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 4 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
- வாலிபரை கொலை செய்து கிணற்றில் வீசி சென்ற 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆத்தியப்பன் (வயது 33). இவருடைய மனைவி மலர்கொடி. இவர்களுக்கு 2 குழந்தைகள்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மனைவி குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். ஆத்தியப்பன் வேலை எதுவும் இல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்ப டுகிறது.
இந்த நிலையில் கட்ட னார் பட்டியில் ரங்கராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் சாக்கில் கைகள் கட்டப்பட்டு, வெட்டு காயங்களுடன் ஆத்தி யப்பன் பிணமாக கிடந்தார்.
தகவலறிந்த வச்சக்கா ரப்பட்டி போலீசார் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விருதுநகர் துணை போலீஸ் சூப்பி ரண்டு பவித்ரா மற்றும் வச்சகாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசா ரணை மேற்கொண்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின்படி, விருதுநகர் உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு பவித்ரா மேற்பார்வையில் வச்சகாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஆத்தியப்பனை முன் விரோதத்தில் ஓ.கோவில்பட்டி பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (19), மாரீஸ்வரன் (24), மைன் பீட்டர் (28) வசந்தகுமார் (19) மற்றும் 2 சிறுவர்கள் ஆகியோர் கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றது தெரிய வந்ததுது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.
- தென்பாதி மற்றும் பழைய பஸ் நிலையம் பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
- இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்களை பிடித்து போலீசார் எச்சரித்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உத்தரவின்படி 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்வதை தடுக்கும் வகையில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தீவிர வாகனத் தணிக்கை நடைபெற்றது.
சீர்காழி தென்பாதி மற்றும் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் போலீசார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து, அவர்களது பெற்றோருக்கு தகவல் அளித்தனர்.
மீண்டும் இவ்வாறு அவர்கள் வாகனங்கள் இயக்க அனுமதித்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- தட்டி கேட்ட பெண்ணை தாக்கிய சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்தில் சுகன்யா புகார் செய்தார்.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம் மகாலட்சுமி கோவில் 4-வது குறுக்கு தெருவில் வசிப்பவர் புவனேஷ் குமார். இவரது மனைவி சுகன்யா (வயது23). இவர்கள் முதல் மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.
பக்கத்து வீட்டில் வசிப்பவர் யோகேசுவரன் என்ற நாகரத்தினம். இவ ரும், நண்பர்களும் சேர்ந்து வீட்டின் மொட்டை மாடி யில் மது அருந்தினர். போதை அதிகமான நிலையில் சுகன்யா வீட்டின் மாடியில் வைக்கப் பட்டிருந்த டிஸ் ஆண்ட னாவை உடைத்து கூச்சலிட்டுள்ளனர்.
இதை சுகன்யா தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 7 அவர்கள் சுகன்யாவை ஆபாசமாக பேசி தாக்கினர்.
இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்தில் சுகன்யா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர்கள் டிஸ் ஆண்டனாவை உடைத்து சுகன்யாவை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து யோகேசுவரன் என்ற நாகரத்தினம், ஹரி கிருஷ்ணன்(19), தினேஷ் குமார்(22), ரியாஸ் அகமது (18), முகமது பரீத் (18) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 7 பேரையும் கைது செய்தனர்.
அதிராம்பட்டினம்:
பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சௌகான் உத்தரவின்படி அதிராம்பட்டினம் இராஜமடம் அண்ணா பல்கலைக்கழகம் அருகில் கடற்கரை சாலையில் ஜார்ஜ்ராஜ், குணசேகரன், ஐயப்பன், விமல், மதி ஆகிய போலீசார் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். சிறுவர்களிடம் வாகனங்களை ஓட்ட விடக்கூடாது என்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினர்.
- பழைய பாரம்பரிய நடைமுறைகளை கொண்டாடுவது என மக்கள் முடிவு செய்தனர்
- சிறப்பு விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. கிராமவாசிகளும் அதில் கலந்து கொண்டனர்.
பெங்களூரு:
கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அதிக அளவு மழை பெய்யவில்லை என கூறப்படுகிறது. மழை வேண்டி பல்வேறு முறைகளில் மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜ பேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர்கள் வினோத முடிவு ஒன்றை எடுத்து உள்ளனர்.
இதன்படி, சிறுவர்கள் 2 பேரை பாரம்பரிய ஆடை அணிவித்து அவர்கள் இருவரையும் மணமக்களாக மாற்றி திருமண நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளனர்.
அதனுடன், மழை வரவேண்டும் என கிராமவாசிகள் மழை கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டனர்.
இதன்பின்னர், சிறப்பு விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. கிராமவாசிகளும் அதில் கலந்து கொண்டனர்.
இதுபற்றி உள்ளூர்வாசிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த ஆண்டை ஒப்பிடும்பொழுது, கர்நாடகாவில் பருவமழை பலவீனமடைந்து உள்ளது. இந்த ஆண்டில் மழை பற்றாக்குறையாக உள்ளது. இதனால், பழைய பாரம்பரிய நடைமுறைகளை கொண்டாடுவது என மக்கள் முடிவு செய்தனர் என அவர்கள் கூறியுள்ளனர்.