search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுனாமி ஒத்திகை"

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சென்னை மாநகராட்சி பெருநகர வளர்ச்சி குழுமம், பேரிடர் மேலாண்மை மீட்பு குழு பங்கேற்ற சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடந்தது.
    ராயபுரம்:

    கடலோர பகுதிகளில் சுனாமி முன்னெச்சரிக்கை மாதிரி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை குழு அறிவுறுத்தியுள்ளது.

    அதன்படி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சென்னை மாநகராட்சி பெருநகர வளர்ச்சி குழுமம், பேரிடர் மேலாண்மை மீட்பு குழு பங்கேற்ற சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடந்தது. இன்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் சுனாமி தாக்கப்போவதாக ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

    இது சுனாமி ஒத்திகை என்பதை அறியாத அந்த பகுதி மக்களில் பலர் பதட்டம் அடைந்தனர். பின்னர் ஒத்திகை என்பதை தெரிந்து கொண்டதும் ஆர்வமுடன் அதை கவனித்தனர்.

    இந்த ஒத்திகையின்போது சுனாமி தாக்கினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது எப்படி? உயிரை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என்பதை தீயணைப்பு படையினர், மருத்துவ குழு, போலீஸ், மின்வாரிய ஊழியர்கள், வருவாய் துறை உள்ளிட்ட 15 துறைகளை சார்ந்த 500-க்கும் மேற்பட்டோர் செய்து காட்டினார்கள்.

    பிளாஸ்டிக் படகு மூலம் மக்களை மீட்பது, காயம்பட்டவர்களை ஸ்ட்ரெக்சர் மூலம் தூக்கிச் செல்வது போன்றவற்றை நடித்து காட்டினார்கள். பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது. காலை 9.30 மணிமுதல் மதியம் ஒரு மணி வரை இந்த ஒத்திகை நடந்தது. இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சுனாமி ஒத்திகை பயிற்சி சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் ரோஜ்மாநகர் கடற்கரையில் நடைபெற்றது.
    சாயல்குடி:

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சுனாமி குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் மாதிரி சுனாமி ஒத்திகை பயிற்சியை நடத்தியது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஒத்திகை பயிற்சி சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் ரோஜ்மாநகர் கடற்கரையில் நடைபெற்றது.

    காலை 8.45 மணிக்கு பயிற்சி தொடங்கியது. இதில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், அரசு அலுவலர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஒத்திகை பயிற்சியின் தொடக்கத்தில் ஒலிபெருக்கி மூலம் கடலோர கிராமங்களில் சுனாமி குறித்து எச்சரிக்கப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சுனாமியில் சிக்கியவர்களை எப்படி மீட்க வேண்டும் என தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர். பின்னர் சுனாமியில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து அரசு டாக்டர்கள் விளக்கமளித்தனர்.

    சுனாமி அறிவிப்பு வந்த உடனே பொதுமக்கள் பீதியடையாமல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஒத்திகை பயிற்சிக்கு சப்-கலெக்டர் விஷ்ணு சந்திரன், கீழக்கரை போலீஸ் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினர். இதில் கடலாடி வட்டாட்சியர் முத்து லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, கடலாடி ஆணையர் இளங்கோ, மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார், டாக்டர் சரவணன், துணை வட்டாட்சியர் செந்தில் வேல்முருகன், சாயல்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கம், கால் நடை மருத்துவர் லிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
    நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்களில் சுனாமி மாதிரி ஒத்திகை பயிற்சி இன்று நடைபெற்றது.
    தூத்துக்குடி:

    தமிழ்நாடு மற்றும் பிற கடலோர மாநிலங்களின் சுனாமி முன்னெச்சரிக்கை பற்றிய விவரங்கள் குறித்து, ஹைதராபாத்தில் உள்ள இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு தெரிவிக்கின்றது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமானது இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்புடன் இணைந்து கடலோர மாவட்டங்களில் சில கிராமங்களை தேர்ந்தெடுத்து, மாதிரி சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி நடத்துகின்றது.

    இந்நிலையில் சுனாமி வரும்பட்சத்தில், இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பின் மூலமாக சுனாமி எச்சரிக்கை முன்அறிவிப்புகள் பெறப்படும். இதையடுத்து அத்தகவல் பரிமாற்றமானது அரசுத்துறைகள் மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு எவ்வாறு சென்றடைகின்றது என்பது ஒத்திகையின் மூலம் சோதிக்கப்படும். இது குறித்து சுனாமி முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகை பயிற்சி நெல்லை மாவட்டம் ராதாபுரம் லெவிஞ்சிபுரம் கிராமம் கூட்டப்புளி, திசையன்விளை குட்டம் கிராமம் கூட்டபனை பகுதிகளில் இன்று நடைபெற்றது.

    சேரன்மகாதேவி சப்-கலெக்டர் விஷ்ணு தலைமையில் சுனாமி ஏற்படுவது போன்ற மாதிரி ஒத்திகை பயிற்சியினை பொதுமக்கள் முன்னிலையில் காலை நடைபெற்றது. இதில் சுனாமி ஏற்பட்டால் எப்படி தப்பிப்பது, பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது உள்ளிட்டவைகள் குறித்து விளக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மீளவிட்டான் பகுதி இனிகோ நகர், சாத்தான்குளம் படுக்கப்பத்து, விளாத்திக்குளம் வேம்பார் ஆகிய 3 கிராமங்களில் சுனாமி ஒத்திகை மாதிரி பயிற்சி நடைபெற்றது. இனிகோ நகரில் சப்-கலெக்டர் பிரசாந்த் தலைமையில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    இதில் சுனாமி ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டியவை குறித்து விளக்கப்பட்டது.
    ×