search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரிய வழிபாடு"

    • சுமார் 10 நிமிடங்கள் வரையில் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிவந்த பிரதமர் மோடி கடல் அழகையும் ரசித்து பார்த்தார்.
    • நாளை பிற்பகலில் தியானத்தை முடிக்கும் பிரதமர் மோடி திருவள்ளுவர் சிலையை சென்று பார்வையிடுகிறார்.

    கன்னியாகுமரி:

    பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்வதற்காக நேற்று மாலை குமரிமுனைக்கு வந்தார். அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு படகில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றார்.

    பின்னர் மண்டபத்தின் ஒரு பகுதியில் உள்ள பகவதி அம்மனின் பாதம் பதித்த மண்டபத்துக்கு சென்று தரிசனம் செய்த பிரதமர் மோடி விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கு மலர் தூவி வணங்கி மரியாதை செய்தார். ராமகிருஷ்ணா பரமஹம்சர், அன்னை சாரதா தேவி ஆகியோரின் படங்களையும் வணங்கினார்.

    பின்னர் பிரதமர் மோடி தியான மண்டபத்துக்கு சென்று விட்டு திரும்பினார். நேற்று இரவு தனக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த தனது தனி அறையில் ஓய்வு எடுத்தார்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் எழுந்த பிரதமர் மோடி குளித்து முடித்துவிட்டு காவி உடைகளை உடுத்தினார். தனது 3 விரல்களால் விபூதியை தொட்டு நெற்றியில் பெரிய பட்டையை போட்டுக் கொண்டு அதன் நடுவில் குங்குமத்தையும் வைத்துக் கொண்டார்.

    பின்னர் காலை 5 மணி அளவில் தனது அறையை விட்டு வெளியே வந்த அவர் காவி சட்டை, வேட்டி, காவி துண்டு ஆகியவற்றை அணிந்து கொண்டு முற்றும் துறந்த துறவி போலவே காட்சி அளித்தார்.


    கையில் ருத்ராட்ச மாலை ஒன்றையும் வைத்திருந்த அவர் அதனை விரல்களால் உருட்டிக் கொண்டே விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி வந்தார். மண்டபத்தின் கிழக்கு பகுதிக்கு சென்று காலை 5.55 மணி அளவில் சூரிய நமஸ்காரம் செய்து வழிபாடு நடத்தினார். அப்போது தனது 2 கைகளையும் மேலே தூக்கி சூரிய பகவானை மனமுருக வணங்கி வழிபட்டார். பின்னர் சிறிய சொம்பை எடுத்து அதில் இருந்த தீர்த்தத்தை கடலில் ஊற்றினார். இது கங்கை நதியில் இருந்து எடுத்து வந்த புனித தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது.


    சுமார் 10 நிமிடங்கள் வரையில் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிவந்த பிரதமர் மோடி கடல் அழகையும் ரசித்து பார்த்தார்.

    பின்னர் விவேகானந்தரின் முழு உருவ சிலையுடன் கூடிய மண்டபத்துக்கு சென்ற மோடி சிலை எதிரே சம்மணமிட்டு தரையில் அமர்ந்து தியானம் செய்தார். விவேகானந்தரின் சிலையை பார்த்து முதலில் வணங்கிய அவர் பின்னர் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். அப்போதும் ருத்ராட்ச மாலையை விரல்களால் வருடியபடியே மந்திரங்களையும் அவர் சொன்னார். இதன்பிறகு தியான மண்டபத்துக்கு சென்ற பிரதமர் மோடி அங்கேயும் துறவி கோலத்தில் அமர்ந்து நீண்ட நேரம் தியானம் செய்தார்.


    அப்போது தியான மண்டபத்தில் மனதுக்கு இதமான... மனதை சாந்தப்படுத்தும் ஓம்-பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருந்தது. இப்படி பிரதமர் மோடி சூரிய வழிபாடு நடத்தியது, கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டது ஆகியவை வீடி யோவாக இன்று வெளியிடப்பட்டது.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியினரும் சமூக வலைதளங்களில் வீடியோவை பரப்பி வருகிறார்கள்.

    நாளை கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் பிரதமர் மோடியின் தியானம் சத்தமில்லாத தேர்தல் பிரசாரமாகவே அமையும். அது கடைசி கட்ட தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதுபோன்ற சூழலில்தான் பிரதமரின் தியான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.

    பிரதமர் மோடியின் தியானம் நாளையும் தொடர்கிறது. நாளை பிற்பகல் 3.30 மணிக்கே பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இருந்து புறப்படுகிறார். இதன் மூலம் நாளையும் காலையிலேயே பிரதமர் மோடி தியானம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை பிற்பகலில் தியானத்தை முடிக்கும் பிரதமர் மோடி திருவள்ளுவர் சிலையை சென்று பார்வையிடுகிறார். இதன்பிறகு ஹெலிகாப்டரில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    காந்தி மண்டபம், விவேகானந்தர் மண்டபம் உட்பட அனைத்து பகுதிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடல் பகுதியில் கப்பற்படை கப்பலும் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல்களில் விவேகானந்தர் பாறையை சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி, குமரி கடல் பகுதி முழுவதும் நவீன படகுகளில் ரோந்து சுற்றி வந்து கண்காணித்து வருகின்றனர். கடலோர காவல் படை போலீசார் கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” என்கின்றது சிலப்பதிகாரம்.
    • இன்றும் சிவாலயங்கள் அனைத்திலும் நவ கிரக வழிபாடு உள்ளது.

    "ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்" என்கின்றது சிலப்பதிகாரம்.

    சூரிய வழிபாடு பண்டைக்காலத்திலிருந்தே நமது பாரத நாட்டில் இருந்துள்ளது.

    கிழக்கிலே கொனார்க்கிலும், மேற்கிலே மொட்டோராவிலும் தெற்கிலே சூரியனூர் கோவிலும் அமைந்துள்ள சூரியர் கோவில்களே இதற்கு சான்றுகள்.

    சனாதன தர்மமான இந்து மதத்தை அறு சமயங்களாக வகுத்துக் கொடுத்த ஆதிசங்கர பகவத் பாதாளும் சூரிய வழிபாட்டை சௌரமாக வகுத்துக் கொடுத்தார்.

    இன்றும் சிவாலயங்கள் அனைத்திலும் நவ கிரக வழிபாடு உள்ளது.

    • நல்ல யோகமான சூரிய திசை நடக்கும்போது பட்டம், பதவி தேடி வரும்.
    • லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் நல்ல யோகம் உடையவர்கள்.

    அதிகாரம், ஆட்சி, ஆளுமை போன்றவற்றுக்கு அதிகாரம் உள்ளவர் இவர்.

    சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது.

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், தலைமை செயலாளர்கள், மிகப்பெரிய அதிகார பதவிகள் ஆகியவற்றில் ஒருவர் அமர்வதற்கு சூரியனின் அனுக்கிரகம் அவசியம்.

    இவை மட்டுமல்லாமல், ஒரு நிகழ்ச்சிக்கோ, 10 பேர் கொண்ட குழுவிற்கோ தலைமை வகிக்க வேண்டும் என்றாலும் சூரியனின் அருள் தேவை.

    தலைமை பீடம் என்பது சூரிய பலத்தினால்தான் கிடைக்கும்.

    ஒருவர் ஏதாவதொரு வகையில் நம்பர் ஒன்னாக தலைமை பொறுப்பில், கையெழுத்திடும் இடத்தில் இருக்க வேண்டும் என்றால் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்து இருந்தால்தான் அவரவர் ஜாதக பலத்துக்கு ஏற்ப பதவி கிடைக்கும்.

    நல்ல யோகமான சூரிய திசை நடக்கும்போது பட்டம், பதவி தேடி வரும்.

    1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறப்பது யோகம்.

    சிம்ம லக்னம், சிம்மராசியில் பிறந்தால் கூடுதல் யோகம் கிடைக்கும்.

    லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் நல்ல யோகம் உடையவர்கள்.

    சூரியன் உச்சத்தில் இருக்கும் சித்திரை மாதம், ஆட்சியில் இருக்கும் ஆவணி மாதம் பிறந்தவர்கள் யோகம் உடையவர்கள்.

    கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பது சிறப்பானது.

    • பண்டைய நாகரிகங்கள் பலவற்றிலும் சூரிய வழிபாடு இருந்ததென்பதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன.
    • ஆனால் சூரிய வழிபாட்டில் மட்டும் வழிபடும் கடவுளான சூரியனை நேரில் காணமுடியும்.

    உலகில் பரவலாக காணப்படும் வழிபாடு சூரிய வழிபாடு.

    பண்டைய நாகரிகங்கள் பலவற்றிலும் சூரிய வழிபாடு இருந்ததென்பதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன.

    எந்த கடவுளையும் நாம் கண்ணால் காண முடியாது.

    ஆனால் சூரிய வழிபாட்டில் மட்டும் வழிபடும் கடவுளான சூரியனை நேரில் காணமுடியும்.

    அதிர்ஷ்டம், ராஜயோகம், பட்டம், பதவி, பணம், பங்களா, நிலபுலன்கள் போன்ற அமைப்புகளை ஒருவருக்கு வழங்குவதில் நவக்கிரகங்களுக்கு பெரும் பங்கு உண்டு.

    ஒரு இடத்தில் நின்றும் இடம் பெயர்ந்தும் கிரகங்கள் தரும் பலன்களே ஒருவருக்கு நன்மை, தீமைகளை ஏற்படுத்துகிறது.

    ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு வலிமை உண்டு.

    நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர் சூரியன்.

    தினமும் நமக்கு தரிசனம் கொடுக்கும் கிரகம்.

    ஒளியை தந்து உயிர்களை வாழவைத்து இந்த உலகையே வாழவைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம்.

    • பொழுது புலர்ந்த வேளையில் செங்கதிரோன் வானில் உதயமாகி ஜொலித்தது.
    • ஒளியைக் கண்ட மனிதன் மகிழ்ச்சிப்பெருக்கில் வணங்கி நின்றான்.

    காலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு கீழ்வானில் உதயமாகும் இளஞ் சூரியனை வழிபாடு செய்வது நம் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் ஒன்று.

    இதனை சூரிய நமஸ்காரம் என்று சிறப்பாக குறிப்பிடுவர்.

    இயற்கை வழிபாட்டில் சூரியவழிபாடே முதல் வழிபாடாகும். காட்டில் அலைந்து திரிந்த மனிதன் இருளைக் கண்டு பயந்தான்.

    இரவில் ஒவ்வொரு கணப்பொழுதும் யுகமாய் கழிந்தது.

    பொழுது புலர்ந்த வேளையில் செங்கதிரோன் வானில் உதயமாகி ஜொலித்தது.

    ஒளியைக் கண்ட மனிதன் மகிழ்ச்சிப்பெருக்கில் வணங்கி நின்றான்.

    இதுவே சூரியவழிபாட்டின் தொடக்கமாகும்.

    • சூரிய வழிபாடு பொங்கல் விழாவாக கொண்டாடப்படுகிறது.
    • சந்திர விழாவை உத்திர விழா என்றும் அழைப்பர்.

    நாடோடியாக திரிந்து வாழ்ந்த மனிதனுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதலே இயற்கை வழிபாடாகும். மனிதன் முதலில் கருவளத்தையும் பயிர் வளத்தையும் பெறுவதற்காக இயற்கையை வழிபடலாயினான் என்பதை,

    "திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

    ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

    மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

    என்னும் சிலப்பதிகாரப் பாடல் அடிகளால் அறியலாம். இயற்கை வழிபாடாகிய சந்திரன், சூரியன், மழை ஆகியவற்றை வாழ்த்திப்பாடும் நாட்டுபுறப் பாடலை காணலாம்.

    நிலவு வழிபாடு:-

    சங்க காலம் தொட்டே சந்திரனை வழிபடும் முறை இருந்துள்ளது. நிலவினை வாழ்த்திப் பாடுவதை நாட்டுப்புறப்பாடல்கள் வாயிலாகவும் அறியலாம்.

    "சந்திரரே சூரியரே சாமி பகவானே

    இந்திரனே வாசுதேவா இப்ப மழை பெய்ய வேணும்

    மந்தையிலே மாரியாயி மலைமேலே மாயவரே

    சந்திரரே சூரியரே இப்ப மழை பெய்ய வேணும்

    இப்பாட்டில் மழை வேண்டிச் சந்திரனையும் சூரியனையும் வாழ்த்தி பாடுவதைக் காணலாம். நடவு நடுகின்ற போது பெண்கள் சந்திரனை வணங்கி பின் குலவையிட்டு நடுகின்றனர். சந்திர விழாவை உத்திர விழா என்றும் அழைப்பதைக் காணலாம். கிராம மக்கள் சித்திரை மாதம் பௌர்ணமியன்று சந்திரனை வழிபாடு செய்கின்றனர்.

    சூரிய வழிபாடு:-

    "சிந்து வெளி நாகரிகத்தில் சூரிய வழிபாடு பற்றிய சான்றுகள் இருக்கிறது. நாட்டுப்புறங்களில் சூரிய வழிபாடு பொங்கல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தை முதல் நாளன்று சூரிய உதயத்திற்கு முன்பாகப் பொங்கலிட்டுச் சூரியனை வழிபடுகின்றனர். இதனைச் சூரியப் பொங்கல் என்றும் அழைக்கின்றனர். இவ்வழிபாடானது நாடு முழுவதும் உள்ளது.

    மழை வழிபாடு:-

    பயிர்கள் செழிக்கவும், மக்கள் நல்வாழ்வு வாழவும் இன்றியமையாதது மழை. வருணனைக் கடவுளாகக் கருதி மழையை நாட்டுப்புற மக்கள் வழிபடுகின்றனர். உலகிலுள்ள கால்நடைகளையும், பயிர் வளங்களையும் ஒருங்கே பாதுகாப்பது மாரியம்மனே என அனைவரும் நம்பி அத்தெய்வத்தை வழிபடுகிறார்கள். பயிர்த் தொழில் தொடங்குவதற்குமுன் இறைவனை வழிபடுகிறார்கள்.

    உதாரணமாக சித்திரை மாதம் நல்ல நாளில் மாடுகளை குளிப்பாட்டி குங்குமம் வைத்துப் பூச்சூட்டி ஏர்பூட்டி பூமாதேவியை வணங்குவதை காணலாம். கால்நடைகளும், பயிர்வளங்களும் செழித்து வளர்வதற்கு காரணம் மழையாகிய கடவுள். எனவே, அந்தக் கடவுளுக்கு நன்றி கூறும் வகையில் உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இவ்வாறாக கால்நடைகளையும் பயிர்வளங்களையும் பாதுகாப்பது மாரியம்மனின் சக்தி என மக்கள் அனைவரும் நம்புகின்றனர். இக்கருத்தினை,

    "நாடு செழிக்க நல்லவரந் தந்தருள்வீர்

    காடு விளையக் கனகவரம் நல்கிடுவீர்

    நாடு செழிக்கும் நல்ல மழை பொழியும்

    பட்டி பெருகும் பால் பானை வற்றாது"

    என்னும் பாடல் வரிகள் கொண்டு அறியலாம். நேர்த்திக் கடனாகக் காணிக்கை செலுத்தாவிட்டால் துன்பம் வரும் என்ற நம்பிக்கை எல்லா மக்களிடமும் பரவலாக இடம் பெற்றுள்ளது.

    "ஆருகடன் நின்றாலும் மாரிகடன் ஆவாது

    மாரிகடன் தீர்த்தவர்க்கு மனக்கவலை தீருமம்மா"

    என்ற பாடல் வரிகள் மாரியம்மனுக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக் கடனை செலுத்தாவிட்டால் துன்பம் வரும் என்னும் கருத்தைப் புலப்படுத்துகிறது.

    • வயலில் நல்ல நாள் பார்த்து படையலிட்டு பூஜைகள் செய்து ஏர் கலப்பை கொண்டு உழவு செய்தால் அந்த ஆண்டு வளமான முறையில் விவசாயம் நடைபெறும் என்பது பாரம்பரிய வழக்கம்.
    • பாரம்பரிய முறையில் பொன்னேர் பூட்டும் விழாவாக இதனை இந்திரன் கோட்டம் என்ற அமைப்பு ஒருங்கிணைத்து நடத்தியது.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள வீரமரசன்பேட்டடை கிராமத்தில் வைகாசி விசாகத்தை ஒட்டி உழவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.

    பாரம்பரிய முறையில் பொன்னேர் பூட்டும் விழாவாக இதனை இந்திரன் கோட்டம் என்ற அமைப்பு ஒருங்கிணைத்து நடத்தியது. வயலில் நல்ல நாள் பார்த்து படையலிட்டு பூஜைகள் செய்து ஏர் கலப்பை கொண்டு உழவு செய்தால் அந்த ஆண்டு வளமான முறையில் விவசாயம் நடைபெறும் என்பது பாரம்பரிய வழக்கம்.

    தற்போதைய சூழ்நிலையில் விவசாயம் எந்திரமயமாகி விட்டது. இயற்கை வேளாண்மை பாரம்பரிய வேளாண்மை என்பதை வரும் தலைமுறையினருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திரன் கோட்டம் என்ற அமைப்பு பொன்னேர் பூட்டும் திருவிழாவை நடத்தியது.வீரமரசம்பேட்டை கிராமத்தில் உள்ள ஒரு வயலில் வாழையிலையில் படையலிட்டு சூரியனுக்கு வழிபாடு நடத்திய பின்னர். கலப்பையில் மாடுகளை பூட்டி உழவு செய்து உழவு பணிகளை தொடங்கினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×