என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சொத்து வரி"
- 5 சதவீத ஊக்கத் தொகை சலுகை கிடைக்கும்.
- இதுவரை 2.28 லட்சம் பேர் வரி செலுத்தி இருக்கிறார்கள்.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
சொத்து வரி குறிப்பிட்ட காலகெடு வுக்குள் சொத்து வரி செலுத்துவதில் பாக்கி வைக்காமல் இருந்தால் அவர்களுக்கு 5 சதவீத ஊக்கத் தொகை சலுகை கிடைக்கும்.
5.13 லட்சம் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு இந்த மாதம் 30-ந்தேதிக்குள் வரியை செலுத்தி சலுகையை பெறும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த ஆண்டுகளில் நிலுவைத் தொகையை செலுத்தாததால் 5 சதவீத ஊக்கத்தொகை சலுகை பெறும் தகுதியை இழந்துள்ளார்கள்.
கடந்த ஆண்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக வரி பாக்கி வைத்திருந்த 25 பேரின் பெயர் பட்டியலை வெளியிட்டு வரி பாக்கியை வசூலிப்பதற்கான நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டது.
இதையடுத்து அவர்கள் வரியை கட்டினார்கள். சொத்து வரி கட்டாததற்காக இதுவரை சொத்துக்கள் எதையும் மாநகராட்சி பறிமுதல் செய்யவில்லை.
கடந்த 1-ந்தேதிக்கு முன்பே சுமார் 40 ஆயிரம் பேர் முன் கூட்டியே ஆன்லைனில் 6 சதவீத வரி உயர்வுக்கு பிறகு கடந்த 1-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 2.28 லட்சம் பேர் வரி செலுத்தி இருக்கிறார்கள். இதன் மூலம் ரூ.175 கோடிக்கு மேல் வரி வசூலாகி இருக்கிறது.
முன் கூட்டியே வரி செலுத்தியவர்களும் தங்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். அடுத்த மார்ச் 31-ந்தேதிக்குள் ரூ.1,800 கோடி சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
- குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புக் கட்டணங்கள் ஆண்டு தோறும் உயர்த்தப்படும் நிலை போன்றவற்றால் தமிழக மக்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக சீரழித்து வருகிறது.
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும்; நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும், மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை அவ்வப்போது நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி வருவதோடு, களத்தில் நின்று போராடி வருகிறது.
தமிழக அரசின் 40 மாத ஆட்சியில் மூன்று முறை மின்கட்டண உயர்வுடன், இனி ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு. பத்திரப்பதிவு கட்டணம் பல மடங்கு உயர்வு.
பால் பொருட்கள் விலை பலமுறை உயர்வு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு. கொலை, கொள்ளை என்று தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு சீர்கேடு. பெண்கள், சிறுமியருக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள்.
போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறிய தமிழகம் ஏற்கெனவே உயர்த்தப்பட்ட 100 சதவீதம் மற்றும் 150 சதவீதம் சொத்து வரி உயர்வுடன் இனி ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புக் கட்டணங்கள் ஆண்டு தோறும் உயர்த்தப்படும் நிலை போன்றவற்றால் தமிழக மக்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக சீரழித்து வருகிறது.
''40 மாத காலமாக, மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான ஸ்டாலினின் தி.மு.க. அரசைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும்'' அ.தி.மு.க. சார்பில், 8-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 10.30 மணியளவில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும்; நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும், மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும்.
ஸ்டாலினின் தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்கள் நலனை முன்வைத்தும் நடைபெற உள்ள இந்த மனித சங்கிலி போராட்டத்தில் விவசாயிகள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மீண்டும் மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு.
- சொத்து வரி உயர்வால் சென்னை மாநகரம் முழுவதும் வாடகை கட்டணம் உயரும்.
சென்னை மாநகராட்சியில் சொத்துவரியை மேலும் 6 சதவீதம் உயர்த்தி சென்னை மாநாகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சொத்து வரி உயர்வு அக்டோபர் 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சொத்து வரி உயர்வுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், "மீண்டும் மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு. வீட்டிற்கு வெள்ளையடிக்க கூட வழியின்றி வசிக்கும் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்க துடிக்கும் ஸ்டாலின் அரசின் கொடுமையால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இந்த சொத்து வரி உயர்வால் சென்னை மாநகரம் முழுவதும் வாடகை கட்டணம் உயரும்.
இதனால் மாணவர்கள், இளைஞர்கள்,வேலை தேடுபவர்கள் என பாமர மக்கள் அனைவரும் பாதிப்படையும் நிலை ஏற்படும். சொத்து வரியா? மக்களின் சொத்தை பறிப்பதற்காக வரியா?" என்று பதிவிட்டுள்ளார்.
அந்த எக்ஸ் பதிவில், லிப்ஸ்டிக் பூசியதற்காக சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் பணியிடமாற்றம் செய்யப்பட்டதையும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும் கிண்டலடிக்கும் விதமாக புகைப்படம் பகிர்ந்துள்ளார்.
மீண்டும் மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு!வீட்டிற்கு வெள்ளையடிக்க கூட வழியின்றி வசிக்கும் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்க துடிக்கும் ஸ்டாலின் அரசின் கொடுமையால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.இந்த சொத்து வரி உயர்வால் சென்னை மாநகரம் முழுவதும்… pic.twitter.com/47D0S5tKlY
— DJayakumar (@djayakumaroffcl) September 28, 2024
- மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டன.
- ராதாகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.
சென்னை:
சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு சொத்து வரி வசூலிப்பது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
13 லட்சம் சொத்து வரி செலுத்துபவர்கள் மாநகராட்சி எல்லைக்குள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் ஆண்டுக்கு 1800 கோடி ரூபாய் சொத்து வரியாக வசூலிக்கப்படுகிறது. சொத்து வரி செலுத்தாத நீண்ட காலமாக உள்ள வணிக பிரமுகர்கள் இடமிருந்து வசூலிக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக் கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சொத்து வரி மதிப்பீடு செய்து வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது. அவற்றிற்கு சொத்து வரி வசூலிப்பதன் மூலம் மாநகராட்சியின் வருவாயை பெருக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.
முதலில் 20,000 கட்டிடங்களுக்கு சொத்து வரி மதிப்பீட்டை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் தியாகராயநகர், ஆலந்தூர், மணலி, மாதவரம் ஆகிய பகுதிகளில் புறம்போக்கு நிலத்தில் கட்டிடங்கள் அதிக அளவில் உள்ளன.
இதுபோன்ற கட்டிடங்களை சுட்டிக் காட்டி அவற்றை மதிப்பீடு செய்து சொத்து வரி வசூலிக்க முடியும் என்று அரசிடம் விளக்கம் அளித்துள்ளது.
கிராம நத்தம் தவிர தி. நகர் போன்ற பகுதிகளில் சட்டபூர்வ வாரிசுகள் இல்லாமல் உரிமை கோரப்படாத நிலங்களில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் உள்ளன. நகரில் இது போன்ற நிலங்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொத்துக்கள் உள்ளன. அவர்களுக்கு பட்டா இல்லை. ஆனால் பல தலைமுறைகளாக குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதுபோன்ற சொத்துகள மீது அரசு முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கிராம நத்தம் உள்ள பல கட்டிடங்களுக்கு சொத்துவரி மதிப்பீடு செய்யவில்லை. இந்து சமய அறநிலையத் துறை நிலங்கள் மற்றும் வக்பு வாரிய நிலங்களில் உள்ள பல கட்டிடங்களுக்கு சொத்து வரி மதிப்பீடு செய்யவில்லை.
பட்டா இல்லாத கட்டிடங்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சொத்து வரியை சிலா் ரூ.1 கோடிக்கு மேல் நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ளனா்.
- கடந்த ஏப்.1 முதல் 30-ஆம் தேதி வரை ரூ.382 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சி வருவாயில் சொத்து வரி முதன்மையானது. சென்னையில் உள்ள 13 லட்சத்து 31 ஆயிரம் சொத்து உரிமையாளா்களிடமிருந்து, அரையாண்டுக்கு தலா ரூ.850 கோடி என ஆண்டுக்கு ரூ.1,700 கோடி வரி வருவாய் கிடைக்கும்.
2023-24 நிதியாண்டில் மாநகராட்சியில் ரூ.1800 கோடி சொத்துவரி வசூலிக்கப்பட்டது. இது, முந்தைய நிதியாண்டை விட ரூ.227 கோடி அதிகம். சொத்து வரியை சிலா் ரூ.1 கோடிக்கு மேல் நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ளனா்.
இதுபோன்று நீண்ட கால நிலுவை வைத்துள்ளோா் விவரங்களை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ளவா்களில் அதிகபட்ச நிலுவைத் தொகை அடிப்படையில் முதல் 100 போ் கொண்ட பட்டியலை முதலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி மாமன்ற அனுமதி கிடைத்தவுடன் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.
கடந்த ஏப்.1 முதல் 30-ஆம் தேதி வரை ரூ.382 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் சொத்து வரி செலுத்திய உரிமையாளா்களுக்கு 5 சதவீத தள்ளுபடியை மாநகராட்சி நிா்வாகம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
- சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சொத்துவரி வசூல் தீவிரமாக்கப்பட்டது.
- புதிய நிதியாண்டிற்கான முதல் அரையாண்டிற்கு சொத்துவரி வசூல் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
சென்னை:
சென்னை மாநகராட்சியின் வருவாயில் சொத்துவரி மிக முக்கியமானது. குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், வணிக வளாகங்கள் என 12 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தக் கூடியவர்களாக உள்ளனர். சொத்து வரி ஆண்டுக்கு 2 முறை வசூலிக்கப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் சொத்துவரி இலக்கு ரூ.1,600 கோடி நிர்ணயிக்கப்பட்டு இலக்கை விட கூடுதலாக ரூ.250 கோடி வசூலித்து மொத்தம் ரூ.1,800 கோடி மாநகராட்சிக்கு கிடைத்து உள்ளது. சொத்துவரி 2-வது அரையாண்டிற்கான காலம் மார்ச் 31-ந்தேதி நேற்றுடன் முடிந்தது.
நிதியாணடின் இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வந்ததால் அந்த நாளை வேலை நாளாக அறிவித்து மாநகராட்சி வருவாய் அதிகாரி ஊழியர்கள், அதிகாரிகள் செயல்பட்டனர்.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சொத்துவரி வசூல் தீவிரமாக்கப்பட்டது. அதன் விளைவாக ஆன்லைன் வழியாகவும், நேரடியாகவும் மக்கள் சொத்துவரி செலுத்தினர்.
நள்ளிரவு வரை சொத்து வரி வருவாயை கணக்கிட்டனர். அதன் அடிப்படையில் ரூ.1,800 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
புதிய நிதியாண்டிற்கான முதல் அரையாண்டிற்கு சொத்துவரி வசூல் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த மாதம் இறுதிக்குள் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். கடந்த நிதியாண்டிற்கான சொத்துவரி பாக்கி வைத்திருப்பவர்களுக்கு அபராதமும் வசூலிக்கப்படும் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- முன்னாள் படை வீரர்களின் சொந்த வீட்டிற்கு அவர்களின் சொந்த பயன்பாட்டில் குடியிருப்பாக பயன்படுத்தப்படும் கட்டிடத்திற்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும்.
- முன்னாள் படை வீரர் வருமானவரி செலுத்துபவராக இருக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்கள் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் படை வீரர்களின் சொந்த வீட்டிற்கு அவர்களின் சொந்த பயன்பாட்டில் குடியிருப்பாக பயன்படுத்தப்படும் கட்டிடத்திற்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும் என்றும் முன்னாள் படை வீரர் வருமானவரி செலுத்துபவராக இருக்கக் கூடாது என்றும் அதில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
- சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் செல்போன் வழியாக எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது.
- 100 வணிக நிறுவன உரிமையாளர்களிடம் இருந்து சுமார் ரூ.70 கோடி நீண்டகாலமாக வசூல் ஆகாமல் உள்ளது
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரியை வசூலிப்பதில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
பருவமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை சொத்துவரி, தொழில்வரி, தொழில் உரிமம் போன்ற வரி விதிப்புக்கு கடந்த 3 மாதமாக தீவிரப்படுத்தாமல் இருந்து வந்த நிலையில் மார்ச் 31-ந் தேதியுடன் இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்தும் அவகாசம் முடிகிறது.
அதனால் மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் 15 மண்டலங்களிலும் வரி வசூலை தீவிரப்படுத்தி வருகின்றனர். சென்னையில் 4 லட்சம் வணிக கட்டிடங்கள், 8 லட்சம் வீடுகள் என மொத்தம் 12 லட்சம் சொத்துகளுக்கு வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
இந்த நிதியாண்டிற்கு ரூ.1600 கோடி சொத்து வரி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு அதில் இதுவரையில் ரூ.1,296 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.2 கோடி கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.300 கோடி இன்னும் 40 நாட்களில் வசூலிக்கப்பட வேண்டும்.
சொத்து வரி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு நோட்டீஸ் செல்போன் வழியாக எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுகிறது. நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளவர்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் பல லட்சங்களை நிலுவையில் வைத்துள்ள வணிக நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
100 வணிக நிறவன உரிமையாளர்களிடம் இருந்து சுமார் ரூ.70 கோடி நீண்டகாலமாக வசூல் ஆகாமல் உள்ளது அவர்களின் வணிக கட்டிடங்களை ஜப்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான சட்டம் சார்ந்த பணிகள் நடந்து வருகின்றன.
எனவே பொதுமக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரியை செலுத்தினால்தான் அடிப்படையான வசதிகளை செய்ய முடியும். மார்ச் 31-ந் தேதி வரை காத்திருக்காமல் முன்கூட்டியே சொத்துவரி செலுத்தி மேல் நடவடிக்கை மற்றும் அபராதத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீா் கட்டணம், இதர வரியினங்களையும் செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
- 2023- 24 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
காங்கயம்:
காங்கயம் நகராட்சியில் 2023-24 ம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் கு.கனிராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- காங்கயம் நகராட்சியில் வசிப்பவா்கள் 2023- 24 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் சொத்து வரியை செலுத்திகொள்ளலாம்.
இதேபோல நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீா் கட்டணம், இதர வரியினங்களையும் செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
- 2023-2024-ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டிற்கு சொத்து வரியினை செலுத்துவதற்கான கால அவகாசம் கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.
- சொத்துவரியினை செலுத்த தவறியவர்களுக்கு மாதம் தோறும் ஒரு சதவீதம் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் நகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமாரபாளையம் நகராட்சி சொத்து வரி விதிப்பாளர்கள் 2023-2024-ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டிற்கு சொத்து வரியினை செலுத்துவதற்கான கால அவகாசம் கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.
சொத்துவரியினை செலுத்த தவறியவர்களுக்கு மாதம் தோறும் ஒரு சதவீதம் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. எனவே முதல் அரையாண்டு சொத்துவரியினை நகராட்சியில் உடன் செலுத்தி அபராதத்தை தவிர்க்குமாறு தெரிவிக்கபப்டுகிறது.
மேலும் 2-ம் அரையாண்டு சொத்துவரியினை வருகிற 31-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத சலுகை பெற்றுக்கொள்ளலாம். எனவே சொத்துவரி செலுத்துபவர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி 5 சதவீத சலுகையினை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியியை அக்.1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும்.
- சொத்து வரியை பொதுமக்கள் எளிதாகச் செலுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் அரையாண்டு தொடக்கம், இறுதியில் குறுந்தகவல் மூலம் வலைதள இணைப்பு அனுப்பப்படுகிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.1 முதல் செப்.30-ந் தேதி வரையிலும், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியியை அக்.1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும்.
இதில் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.30-ந் தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டு சொத்து வரியை அக்.30-ந் தேதிக்குள்ளும் செலுத்துவோருக்கு மாநகராட்சி சார்பில் 5 சதவீதம் ஊக்கத் தொகை அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு முதல் நிதியாண்டில் ரூ. 769.62 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் ரூ.321 கோடியை இணையதளம் மூலம் 4.77 லட்சம் சொத்து உரிமையாளர்கள் செலுத்தி உள்ளனர்.
சொத்து வரியை பொதுமக்கள் எளிதாகச் செலுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் அரையாண்டு தொடக்கம், இறுதியில் குறுந்தகவல் மூலம் வலைதள இணைப்பு அனுப்பப்படுகிறது.
இதுபோல் www.chennai corporation.gov.in என்ற மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை கைப்பேசி செயலி, சொத்துவரி ரசீதில் உள்ள கியூ ஆர் குறியீடு மூலம் சொத்து வரியை செலுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக சொத்துவரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்கள் செலுத்தாமல் இருந்தனர்.
- 2 வீடுகளில் குடிநீா் இணைப்பை நிா்வாகத்தினா் துண்டித்தனா்.
அவிநாசி
அவிநாசி பேரூராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக சொத்துவரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்ட வரி இனங்கள் செலுத்தாமல் உள்ளவா்களை உடனடியாக செலுத்தக் கோரி செயல் அலுவலா் ராமலிங்கம் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்தும் சொத்து வரி மற்றும் குடிநீா் கட்டணம் செலுத்தாத 2 வீடுகளில் குடிநீா் இணைப்பை பேரூராட்சி நிா்வாகத்தினா் சனிக்கிழமை துண்டித்தனா்.
மேலும் 2022, 2023-ம் ஆண்டு வரையிலான நிலுவையிலுள்ள சொத்துவரி, குடிநீா் உள்ளிட்ட வரியினங்களை பொதுமக்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என நிா்வாகத்தினா் அறிவுறுத்தியுள்ளனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்