என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தகுதி சான்றிதழ்"
- மொத்தமுள்ள 1,667 பஸ்களில் 1,352 பஸ்கள் சான்றிதழ் பெற்றுள்ளது.
- மொத்தமுள்ள 1,667 பஸ்களில் 1,352 பஸ்கள் சான்றிதழ் பெற்றுள்ளது.
திருப்பூர்:
நடப்பு கல்வியாண்டு தொடங்கிய நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,667 பஸ்களில் 885 பஸ்கள் சான்றிதழ் பெற்றன. ஜூலை முதல் கடந்த 2 வாரத்தில் மீதமுள்ள பஸ்கள் சான்றிதழ் பெற வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்துக்கு வர ஆர்.டி.ஓ.,க்கள் உத்தரவிட்டனர்.
தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,667 பஸ்களில் 1,352 பஸ்கள் சான்றிதழ் பெற்றுள்ளது. இன்னமும் 315 பஸ்கள் தகுதிச்சான்றிதழ் பெறவில்லை. இந்நிலையில் ஜூலை 31க்குள் பள்ளி பஸ்கள் ஆய்வு செய்து முடித்து மாவட்டத்தில் தகுதிச்சான்றிதழ் பெற்ற பள்ளி பஸ்கள் குறித்த விபரத்தை அறிக்கையாக தெரிவிக்க வேண்டும் என போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.இதனால் இன்னும் சான்றிதழ் பெறாத திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உடுமலை, தாராபுரம் ஆர்.டி.ஓ.,க்களிடம் இருந்து பள்ளிகளுக்கு பஸ்கள் நிலை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
- ஈரோடு மாவட்டம் உள்பட தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- அரசின் விதிமுறைகளின் படி வேக கட்டுப்பாட்டு கருவி மற்றும் அவசரகால வழி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் இயக்கப்படுகிறதா? என நேரில் ஆய்வு செய்தார்.
- தகுதியான வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ்கள் வழங்கினார்.
கோபி:
தமிழகம் முழுவதும் இயங்கி வரும் பள்ளி வாகனங்களின் தரம் மற்றும் பராமரிப்பு குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆண்டு தோறும் ஆய்வு மேற்கொண்டு சான்றிதழ் வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் வரும் 13-ந் தேதி தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டம் உள்பட தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட சத்தியமங்கலம், பவானி மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான வாகன சோதனை ஒத்தக்குதிரை அருகே தனியார் கல்லூரி யில் நடைபெற்றது.
கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. பிரியதர்ஷினி கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பள்ளி வாகனங்கள் அரசின் விதிமுறைகளின் படி வேக கட்டுப்பாட்டு கருவி மற்றும் அவசரகால வழி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் இயக்கப்படுகிறதா? என நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து தகுதியான வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்த ஆய்வில் கோபிசெட்டிபாளையம், சத்தி மற்றும் பவானி பகுதிகளை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டன.
மாவட்டத்தில் அனைத்து பள்ளி வாகனங்களும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குழு ஆய்வு மேற்கொள்ள தனித்தனியே நாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் விருதுநகர் போக்குவரத்து வட்டாரத்தில் உள்ள 44 பள்ளிகளின் 172 வாகனங்கள் மற்றும் அருப்புக்கோட்டை போக்குவரத்து வட்டாரத்தில் உள்ள 32 பள்ளிகளின் 160 வாகனங்கள் ஆக மொத்தம் 76 பள்ளிகளைச் சேர்ந்த 332 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பணியினை கலெக்டர் சிவஞானம் தொடங்கி வைத்து வாகனங்களில் அவசர கால வழிகள், இருக்கைகள், வாகனங்களின் தரைத்தளம், ஓட்டுனர்களின் உரிமம், வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள், தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா போன்ற 21 அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
அனைத்து இனங்களும் சரியான முறையில் உள்ள வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படும் என்றார். பள்ளி வாகனங்கள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி 21 பாதுகாப்பு அம்சங்களும் சரியான முறையில் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தீயணைப்பு துறையின் மூலம் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு வாகனத்தில் உள்ள தீயணைப்புக்கருவிகளை அவசர காலங்களில் எவ்வாறு இயக்குவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், இந்த ஆய்வின் போது பள்ளி வாகனங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 21 அம்சங்களையும் முறையாக பராமரிக்காத 12 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்றிதழை நீக்கி கலெக்டர் நடவடிக்கை எடுத்தார்.
இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன், விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் சீனிவாசன் மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்