என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தகுதிநீக்க வழக்கு"
இதனால் 18 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். மேல்முறையீடு குறித்து 18 பேரிடமும் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். ஓரிரு நாளில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக கொறடா ராஜேந்திரன் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தகுதிநீக்கம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 18 பேர் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என கேவியட் மனுவில் கூறியுள்ளார். #MLAsDisqualificationCase #SupremeCourt #CaveatPetition
தமிழகத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுடன் இன்று டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2 அல்லது மூன்று நாளில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம். மேல்முறையீட்டு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என கூறுவோம்.
22 தொகுகிளிலும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் 10ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்க உள்ளோம். இறுதியாக ஆர்.கே.நகர் தொகுதியில் உண்ணாவிரதம் இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். #18MLAsCaseVerdict #ThangaTamilSelvan #SupremeCourt #TTVDhinakaran
பனைக்குளம்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க. உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் பட்டணம்காத்தான் ஊராட்சி டி-பிளாக்கில் உள்ள ஏ.பி.சி. திருமண மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தங்க தமிழ்ச் செல்வன் தலைமை தாங்கி பேசினார்.
இதில் மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த், முன்னாள் அமைச்சர்கள் வது.நடராஜன், ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரிய முன்னாள் தலைவர் முனியசாமி, சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் ஆர்.கே. ரம்லி, நகர் செயலாளர் ரஞ்சித், திருவாடானை இரவுசேரி முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், முன்னாள் நகரசபை தலைவர் கவிதா சசிகுமார், தொகுதி பொறுப்பாளர்கள் பரமக்குடி சுப்பிரமணியன், முதுகுளத்தூர் முத்து, முன்னாள் மாவட்ட செயலாளர் சோமாத்தூர் சுப்பிரமணி யன், மாவட்ட இணை செயலாளர் இந்திரா மேரி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்து பேசினர்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் மண்டபம் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், ராமநாதபுரம் முத்தீசுவரன், போகலூர் ராஜாராம் பாண்டியன், திருப்புல்லாணி முத்துச்செல்வம், நகர் செயலாளர்கள் கீழக்கரை சுரேஷ், மண்டபம் களஞ்சியம் ராஜா உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக கூட்டத்துக்கு வந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு அ.ம.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டது குறித்து பத்திரிகையில் செய்தி படித்தேன். தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து என்னுடைய உணர்வை வெளிப்படுத்தினேன். ஸ்ரீமதி என்பவர் என் மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த பெண்ணை பாராட்டுகிறேன். நீதிமன்றத்தை அவமதித்ததற்காக குடிமகன் என்ற முறையில் அவர் வழக்கை தொடர்ந்து இருக்கிறார். அவரிடம் நான் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சகநீதிபதிகள் 4 பேர் நேரடியாக குற்றம் சாட்டி பேட்டி அளித்தனர். உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது.
இந்த பேட்டியை அடிப்படையாக வைத்து அந்த 4 பேர் மீதும் இந்த பெண்மணி ஏன் வழக்கு தொடுக்கவில்லை. அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் வக்கீல் பதவி போய்விடும் என்ற பயமா, நான் சாதாரணமானவன் என்பதால் என் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறாரா, இந்த கேள்விகளை அவரிடம் கேட்க விரும்புகிறேன்.
தகுதிநீக்க வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக சத்திய நாராயணாவை நியமித்துள்ளனர். அவரை சந்தித்து தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக மனு கொடுக்க இருக்கிறேன். அதை அவர் ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சி. இல்லாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan
தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று மதியம் தீர்ப்பு வழங்க உள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு வழங்க உள்ள இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் நீதிமன்றத்திற்கு வந்தனர். ஒரு சிலர் மட்டும் வரவில்லை.
இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதமைச்சருக்கு எதிராக செயல்பட்டதால் எங்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார். இன்றைய தீர்ப்பு 100 சதவீதம் எங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் சட்டமன்றம் சென்று ஜனநாயக கடமையாற்றுவோம். அதேசமயம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராவிட்டால் நான் மேல்முறையீடு செய்யமாட்டேன்.
எங்கள் மீதான தகுதி நீக்கம் உறுதி செய்யப்பட்டு இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். ஆனால் இடைத்தேர்தலில் ஒரு எம்எல்ஏ தோற்றாலும் நாங்கள் 18 பேரும் ராஜினாமா செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார். #18MLAsCase #MLAsDisqualification #MadrasHighCourt #ThangaTamilSelvan
அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்தனர். இத்துடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கவர்னரிடம் கடந்த ஆண்டு மனு கொடுத்தனர்.
இதைதொடர்ந்து 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் புகார் கொடுத்தார்.
இதனால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த 18.9.2017 அன்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக்கூடாது என்றும் 20.9.2017 அன்று உத்தரவிட்டார்.
பின்னர், அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் தலைமையிலான டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பல நாட்கள் நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர், கொறடா, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருக்காக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் பலர் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாக அவர்களை டிடிவி தினகரன் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். தகுதிநீக்கம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருடன் சேர்த்து தற்போது அ.தி.மு.க.வுக்கு 114 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் உள்ளனர். தி.மு.க.வுக்கு 98 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதுதவிர டி.டி.வி.தினகரன் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும்.
தகுதிநீக்கம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க தற்போதைய சூழ்நிலையில் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
இதுபோன்று ஒரு சூழ்நிலை வந்தால் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு அளிப்போம் என்று அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் அறிவிக்கவில்லை. அவர்கள், அவ்வப்போது எதிர்மறையான நிலைப்பாட்டையே மேற்கொண்டுள்ளனர். எனவே, தகுதிநீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் எடப்பாடி அரசு கவிழ்ந்து விடும் என்ற சூழ்நிலை தான் தற்போது இருந்து வருகிறது.
அதே வேளையில் 2 நீதிபதிகள் தனித்தனி தீர்ப்பை அளித்தால் 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும். 18 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் சபாநாயகர் தன்னிச்சையாக முடிவு எடுத்து இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இருப்பதால் அவர்களது விளக்கத்தை கேட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க சபாநாயகருக்கு ஐகோர்ட்டு உத்தரவிடலாம் என்றும் கூறப்படுகிறது.
எனவே, இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. #18MLAs #MadrasHighCourt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்