என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தனியார் கம்பெனி ஊழியர்"
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பெரியார்மேல்வீதியை சேர்ந்தவர் அமிர்தராஜ் (வயது 42). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமிர்தராஜ் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு ஊருக்கு வந்திருந்தார். தனக்கு சொந்தமான காரை வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைத்திருந்தார்.
பொங்கல் பண்டிகை முடிந்ததும் அமிர்தராஜ் காரை ஊரில் நிறுத்தி விட்டு குடும்பத்துடன் சென்னை சென்று விட்டார். கடந்த 5 நாட்களாக அமிர்தராஜ் வீட்டின் அருகே கார் நின்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 3 மணியளவில் அந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. கார் தீ பிடித்து எரிந்ததும் அக்கம் பக்கத்தினர் கூச்சல் போட்டு அலறினர்.
வீட்டில் இருந்த அமிர்தராஜின் தந்தை பாடலீஸ்வரரும் அங்கு வந்தார். பின்பு அவர்கள் அந்த கார் மீது தண்ணீர் ஊற்றினர். ஆனால் கார் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருந்தது.
இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து காட்டுமன்னார்கோவில் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சியாம்சுந்தர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எரிந்த காரை பார்வையிட்டார்.
கார் எதனால் தீப்பிடித்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் கம்பெனி ஊழியரின் கார் திடீரென்று தீ பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை பிச்சைவீரன்பேட் புதுநகர் வடக்கு வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் தசரதன் (வயது 42). தனியார் கம்பெனி ஊழியர்.
இவர் கடந்த 28-ந் தேதி இரவு மேட்டுப்பாளையத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
அப்போது 2 பேர் தசரதனிடம் வந்து இந்த முகவரி எங்கு இருக்கிறது? என்று கேட்டனர். அதற்கு தசரதன் எனக்கு தெரியாது என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தசரதனை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து தசரதன் மேட்டுப்பாளைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் தசரதனை தாக்கியது சின்னயன் பேட் பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (வயது 21), சாரம் பகுதியை சேர்ந்த கிஷோர் (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவர் கடந்த 6 மாதத்துக்கு முன் பெருந்துறை அருகே உள்ள குன்னத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
அங்கு அவர் குடும்பத்துடன் தங்க வீடும் ஒதுக்கப்பட்டிருந்தது. மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்கு சுரேஷ் தங்கி வேலை பார்த்து வந்தார். சுரேசுக்கு குடிபழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி குடும்பத் தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் சுரேஷ் நேற்று தனது வீட்டு முன் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்து கொண்ட சுரேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்