என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தனியார் காப்பகம்"
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சிபட்டு பகுதியில் தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் 47 சிறுமிகள் தங்கியிருந்தனர். கலெக்டர் கந்தசாமி கடந்த 17-ந் தேதி திடீர் ஆய்வு நடத்தினார். சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்பதால், அங்கிருந்த மாணவிளை பெரும்பாகத்தில் உள்ள காப்பகத்துக்கு மாற்ற உத்தரவிட்டார்.
பின்னர் இந்த சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை அதிகாரிகளிடையே தெரிவித்தனர்.
இதையடுத்து காப்பக உரிமையாளர் லூபன்குமார், அவரது மனைவி மெர்சிராணி, உறவினர் மணவாளன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். காப்பகத்துக்கும் சீல் வைக்கப்பட்டது.
இந்த காப்பகத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமிகள் அனைத்து மகளிர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர்.
நான் தாய், தந்தையை இழந்த நிலையில் இந்த காப்பகத்தில் சேர்க்கப்பட்டேன். எனக்கு தற்போது 16 வயதாகிறது.
காப்பபத்தில் கடந்த 9 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல நரக வேதனையை அனுபவித்து வந்தேன். வெளியில் சொல்ல எந்த உறவுகளும் இல்லை. காப்பகத்துக்கு வந்து பார்த்து செல்ல சொந்தங்களும் இல்லை என்று கதறி அழுதபடி தெரிவித்துள்ளார்.
அவர்கள் சொல்வதை கேட்கவில்லை என்பதற்காக 9ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டனர். காப்பகத்துக்கு சொந்தமான பசு மாடுகளை மேய்க்க வைத்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்த காப்பகத்தில் குறிப்பிட்ட 3 மாணவிகள் அதிக ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு தனி அறை ஒதுக்கி கொடுத்துள்ளனர்.
அந்த 3 சிறுமிகளுக்கும் பெற்றோர் இல்லை கேட்க ஆள் இல்லாததால் அவர்களிடம் காப்பக நிர்வாகிகள் பயங்கரமாக தொந்தரவு செய்து வந்துள்ளனர். #Orphanage #GirlsHarassment
சென்னை வில்லிவாக்கம் முருகேசன் நகரில் வசிப்பவர் ஜேக்கப் (64). இவரது மனைவி விமலா. இவர்கள் இருவரும் அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் சியான் தெருவில் கடந்த 20 வருடங்களாக நித்திய வார்த்தை என்ற பெயரில் காப்பகம் நடத்தி வருகிறார்கள்.
இங்கு காப்பாளர்களாக அயனாவரத்தைச் சேர்ந்த பாஸ்கர் (39), சாமுவேல் மற்றும் உதவியாளராக முத்து (27) வேலைசெய்து வந்தனர். இங்கு ஏழை மற்றும் ஆதரவற்ற மாணவ- மாணவிகள் தங்கி திருமுல்லைவாயில் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் காப்பக மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளியில் அம்பத்தூர் குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி அனிதா ஆனந்த் தலைமையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அப்போது காப்பகத்தில் விடுதி காப்பாளர்கள் பாலியல் தொந்தரவு செய்வதுடன், அடித்து துன்புறுத்துவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளித்தனர்.
அதன்பேரில் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை நேரில் சென்று விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அலுவலர் செந்தில் போலீசாருடன் காப்பகத்திற்கு சென்று அங்கு தங்கியுள்ள மாணவ- மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, காப்பகத்தின் உரிமையாளர் விமலா, கணவர் ஜேக்கப், காப்பாளர் பாஸ்கர், உதவியாளர் முத்து ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு விடுதி காப்பாளர் சாமுவேலை தேடி வருகின்றனர். இதனிடையே காப்பகத்தில் தங்கி இருந்த 24 மாணவிகளை பொத்தூரில் உள்ள மரியாலாய பாதுகாப்பு இல்லத்திலும், 2 மாணவிகளை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
20 மாணவர்களை சியான் பாதுகாப்பு இல்லத்திற்கும்,2 மாணவர்களை பெற்றோர்களிடமும் அனுப்பி வைத்தனர்.
பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவ-மாணவிகள் அனைவரும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களிடம் போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த தனியார் காப்பகம் மூடப்பட்டது.
12 வயதுக்குட்பட்ட சிறுவர்-சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தால் அவர்கள் மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இந்த சட்ட விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வர முடியாது.
இந்த காப்பகத்தில் ஒரு மாணவி மற்றும் 2 மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்