என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழக அணி"
டெல்லியில் நடந்த சையது முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி கடைசி பந்தில் சிக்சர் அடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.
3-வது முறையாக கோப்பையை கைப்பற்றி தமிழக அணி சாதனை படைத்தது. தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.
இந்தநிலையில் தமிழக கிரிக்கெட் அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
சையது முஸ்தாக் அலி கோப்பையை தொடர்ந்து 2-வது முறையாக வாகை சூடி இருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
ஷாருக்கான், சாய் கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான, துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எல்லோரும், மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான அகில இந்திய 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு நடப்பு சாம்பியன் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் தகுதி பெற்று இருந்தன.
இறுதிப்போட்டி டெல்லியில் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது. தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். 5.1 ஓவர்களில் 32 ரன் எடுப்பதற்குள் கர்நாடகா அணியின் 3 விக்கெட்டை தமிழக வீரர்கள் கைப்பற்றினர்.
இதனையடுத்து 20 ஓவர் முடிவில் கர்நாடகா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக மனோகர் 46 ரன்கள் எடுத்தார். தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி விளையாடி வருகிறது. தற்போது வரை தமிழக அணி 1 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய ஹரி நிசாந்த் 12 பந்துகளில் 23 ரன்களை எடுத்துள்ளனர்.
9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று காலை நடந்த முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, இந்திய விளையாட்டு ஆணையத்தை (சாய்) எதிர்கொண்டது. இளம் வீரர்களை கொண்ட சாய் அணியும், அனுபவம் மற்றும் இளம் வீரர்களை உள்ளடக்கிய தமிழக அணியும் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தன.
9-வது நிமிடத்தில் சாய் அணி வீரர் பாபி சிங் தாமி கோல் அடித்தார். 16-வது நிமிடத்தில் தமிழக அணி பதில் கோல் திருப்பி சமநிலையை எட்டியது. ஜோஸ்வா கடத்தி கொடுத்த பந்தை சண்முகம் கோலுக்குள் திணித்தார். 20-வது நிமிடத்தில் தமிழக அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி வினோதன் கோல் அடித்து தமிழக அணிக்கு முன்னிலை தேடிக் கொடுத்தார். இந்த முன்னிலை சற்று நேரத்தில் முடிவுக்கு வந்தது. 25-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி சாய் அணி வீரர் மொகித் குமார் கோல் அடித்தார். முதல் பாதியில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.
40-வது நிமிடத்தில் தமிழக அணி வீரர் ராயர் அபாரமாக கோல் அடித்தார். ஆனால் அடுத்த நிமிடத்திலேயே சாய் அணி பதில் கோல் திருப்பியது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி வீரர் ராகுல் குமார் கோல் அடித்து சமநிலையை எட்ட வைத்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.
இதனை அடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க ‘பெனால்டி ஷூட்-அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 5 வாய்ப்புகளில் தமிழக அணியினர் 3 கோல் அடித்தனர். 2 வாய்ப்பை தவறவிட்டனர். தமிழக அணியில் ஷூட்-அவுட்டில் செந்தில் நாயகம், ஆர்.மணிகண்டன், எஸ்.மணிகண்டன் ஆகியோர் கோல் அடித்தனர். சாய் அணியில் விஷால், லோகேஷ் போரா ஆகியோர் மட்டுமே கோல் அடித்தனர். ‘ஷூட்-அவுட்’ முடிவில் தமிழக அணி 6-5 என்ற கோல் கணக்கில் சாய் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பிற்பகலில் நடந்த 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் மத்திய தலைமை செயலகம்-பெங்களூரு அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டமும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதனை அடுத்து பெனால்டி ‘ஷூட்-அவுட்’ முறை பின்பற்றப்பட்டது. ஷூட்-அவுட்டில் மத்திய தலைமை செயலக அணி 4-3 என்ற கோல் கணக்கில் (மொத்தத்தில் 7-6) பெங்களூரு அணியை பதம் பார்த்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-மத்திய தலைமை செயலக அணிகள் மோதுகின்றன. முன்னதாக காலை 7.30 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் சாய்-பெங்களூரு அணிகள் சந்திக்கின்றன.
இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் தமிழ்நாடு, மத்திய தலைமை செயலக அணிகள் மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் இந்த மாதம் இறுதியில் நடைபெறும் ‘ஏ’ டிவிசன் தேசிய சீனியர் ஆக்கி போட்டிக்கு தகுதி பெற்றன.
67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் கேரள அணி 20-25, 25-17, 17-25, 25-19, 15-8 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனான ரெயில்வே அணியை வீழ்த்தி 11-வது முறையாக பட்டத்தை கைப்பற்றியது. அத்துடன் தொடர்ச்சியாக 9 முறை ரெயில்வேயிடம் இறுதிப்போட்டியில் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மராட்டிய அணி 25-20, 25-14, 25-18 என்ற நேர்செட்டில் மேற்கு வங்காளத்தை தோற்கடித்தது.
ஆண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கர்நாடக அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த மோதலில் முதல் செட்டை தமிழக அணி தனதாக்கியது. 2-வது செட்டை தமிழக அணி மயிரிழையில் இழந்தது. அதன் பிறகு தமிழக அணியால் சரிவில் இருந்து மீள முடியவில்லை. முடிவில் கர்நாடக அணி 21-25, 36-34, 25-18, 25-14 என்ற செட் கணக்கில் தமிழகத்தை சாய்த்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்தது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கேரள அணி 25-23, 25-16, 25-19 என்ற நேர்செட்டில் பஞ்சாப் அணியை பதம் பார்த்தது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு இந்திய கைப்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் ராம்அவ்தார்சிங் ஜாக்கர் தலைமை தாங்கினார். சென்னை ஸ்பார்டன்ஸ் நிறுவன சேர்மன் ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார். விழாவில் ஜோன்ஸ் பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் ஜோன்ஸ், வேலம்மாள் கல்வி குழும தலைமை செயல் அதிகாரி வேல்முருகன், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக இயக்குனர் (விளையாட்டு) வைத்யநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #SeniorNationalVolleyball #Championship #Karnataka
67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டங்களில் கேரள அணி 25-18, 25-9, 25-9 என்ற நேர்செட்டில் மேற்கு வங்காளத்தையும், ரெயில்வே அணி 25-19, 25-18, 25-19 என்ற செட் கணக்கில் மராட்டியத்தையும் சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆண்கள் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கர்நாடக அணி 25-13, 25-22, 25-20 என்ற நேர்செட்டில் பஞ்சாப் அணியை விரட்டியது. மற்றொரு அரையிறுதியில் தமிழக அணி 25-27, 25-14, 25-18, 25-16 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனான கேரளாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தமிழக அணியில் நவீன்ராஜா ஜேக்கப், உக்கரபாண்டி, வைஷ்ணவ், ஷெல்டன் மோசஸ் ஆகியோரின் ஆட்டம் அருமையாக இருந்தது.
இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் பெண்கள் இறுதிசுற்றில் ரெயில்வே-கேரளா அணிகள் மோதுகின்றன. இதைத்தொடர்ந்து நடைபெறும் ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-கர்நாடக அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #NationalVolleyball
9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ.சி.எப். மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 41 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘ஜி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி தனது முதலாவது லீக்கில் நேற்று மத்திய தொழிலக பாதுகாப்பு படை அணியுடன் (சி.ஐ.எஸ்.எப்.) மோதியது. தமிழக அணியில் எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வீரர் ஸ்ரீஜேஷ் ஆடவில்லை.
செந்தில் தலைமையில் களம் கண்ட தமிழக அணி துடிப்புடன் விளையாடியது. ஒரு கட்டத்தில் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டாலும், பிற்பகுதியில் தமிழக அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை திணித்தது. முடிவில் தமிழக அணி 4-2 என்ற கோல் கணக்கில் சி.ஐ.எஸ்.எப்.-ஐ தோற்கடித்து இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியது. தமிழக அணியில் ஜோஷ்வா (7-வது நிமிடம்), ராயர் வினோத் (34-வது நிமிடம்), செல்வராஜ் (45-வது நிமிடம்), மணிகண்டன் (58-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர்.
தமிழக அணி அடுத்த ஆட்டத்தில் அசாம் அணியை ஐ.சி.எப். மைதானத்தில் நாளை காலை 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.
67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் கேரளா அணி 25-14, 25-17, 25-23 என்ற நேர்செட்டில் ஆந்திரா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இன்னொரு காலிறுதியில் தமிழக அணி 25-20, 23-25, 25-20, 25-20 என்ற செட் கணக்கில் சர்வீசஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
பெண்கள் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் ரெயில்வே அணி 25-13, 25-15, 25-11 என்ற நேர்செட்டில் டெல்லி அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. மற்றொரு காலிறுதியில் நடப்பு சாம்பியன் கேரளா அணி 25-12, 25-16, 25-12 என்ற நேர்செட்டில் அரியானாவை சாய்த்து அரையிறுதிக்குள் நுழைந்தது. #NationalSeniorvolleyball
67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. போட்டியை சர்வதேச கைப்பந்து சம்மேளன செயல் துணைத்தலைவர் ஈசா ஹம்சா தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா, இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர் எஸ்.வாசுதேவன், பொதுச் செயலாளர் ராம் அவதார்சிங் ஜாக்கர், வேலம்மாள் கல்வி குழும தலைமை செயல் அதிகாரி வேல்முருகன், எஸ்.ஆர்.எம். கல்வி குழும இயக்குனர் (விளையாட்டு) வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வருகிற 10-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 29 அணிகளும், பெண்கள் பிரிவில் 25 அணிகளும் பங்கேற்றுள்ளன. இதன் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ‘ஏ’, ‘பி’ பிரிவு ஆட்டம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிலும், பெண்களுக்கான ‘சி’, ‘டி’, ‘இ’, ‘எப்’ பிரிவு ஆட்டங்கள் மேடவாக்கத்தில் உள்ள வேலம்மாள் பள்ளி மைதானத்திலும், ஆண்களுக்கான ‘சி’, ‘டி’, ‘இ’, ‘எப்’ பிரிவு ஆட்டங்கள் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக் வளாகத்திலும் நடைபெறுகிறது.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி, பஞ்சாப்பை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த மோதலில் தமிழக அணி 27-25, 25-21, 26-24 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
பெண்கள் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ரெயில்வே அணி 25-13, 25-13, 25-7 என்ற நேர் செட் கணக்கில் அரியானாவை சாய்த்தது. #TamilNadu #Punjab #SeniorNationalVolleyball
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்