என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தற்கொலைப்படை தாக்குதல்"
- ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே தாக்குதல் நடந்தது.
- இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான்களின் போட்டி அமைப்பான கொராசன் மாகாண ஐ.எஸ். அமைப்பானது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் உள்ளது. மாலிக் அசார் சதுக்கம் அருகே அமைந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகம் நோக்கி உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு பயங்கரவாதி வந்துள்ளார்.
அந்த நபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வருவதை அறிந்த பாதுகாப்புப் படையினர் அவர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை பயங்கரவாதி வெடிக்கச் செய்தார்.
இந்த தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், பாதுகாப்புப் படையினர் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.
- இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது.
புதுடெல்லி:
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் வெளியுறவுத்துறை அலுவலகம் அருகே நேற்று முன்தினம் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததில் 5 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்று நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அமைச்சகரகத்தில் இருந்து முக்கிய அதிகாரிகள் வெளியேறும்போது அலுவலக வாசலில், இருந்த தற்கொலை படை பயங்கரவாதி கெய்பர் அல் காந்தகாரி இந்த தாக்குதலை நடத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர். இதற்கு ஆளும் தலிபான் அதிகாரிகள் உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், பல அப்பாவி பொதுமக்களின் உயிர்களை பலிவாங்கிய மற்றும் பலரை காயப்படுத்திய காபூலில் நேற்றைய பயங்கரவாத தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.
அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
- ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளது.
- இந்தத் தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தலிபான்களின் போட்டி அமைப்பான கொராசன் மாகாண ஐ.எஸ். அமைப்பானது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவு அமைச்சக அலுவலக வளாகத்தில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.
இந்த தாக்குதலில் 5 பேர் பலியாகியிருக்கலாம். பலர் காயமடைந்துள்ளனர் எனவும், இது தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் எனவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
- இந்தோனேசியா பல ஆண்டுகளாக பயங்கரவாத இயக்கங்களுடன் போராடி வருகிறது.
- இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜகார்த்தா :
இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தின் தலைநகர் பாண்டுங்கில் அஸ்தானா அன்யார் என்கிற இடத்தில் போலீஸ் நிலையம் ஒன்று உள்ளது.
இந்த போலீஸ் நிலையத்தில் நேற்று காலை போலீசார் வழக்கமான அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்தார்.
கையில் கத்தியுடன் வந்திருந்த அந்த நபரை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை சுற்றிவளைத்தனர். அப்போது அந்த நபர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.
வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு கரும்புகை மண்டலம் எழுந்தது. குண்டு வெடிப்பை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் இருந்தவர்கள் உயிர் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இந்த தாக்குதலில் தற்கொலைப்படை பயங்கரவாதியும், போலீஸ் அதிகாரிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 7 போலீசாரும், பொதுமக்களில் ஒருவரும் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் 8 பேரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2002-ம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலி தீவில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். இதில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் ஆவர்.
இந்த தாக்குதலுக்கு பின் இந்தோனேசியா தொடர்ந்து பல ஆண்டுகளாக பயங்கரவாத இயக்கங்களுடன் போராடி வருகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுலவேசி மாகாணத்தில் குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டத்தின்போது ஒரு தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 2 பேர் பலியானதும், 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததும் நினைவுகூரத்தக்கது.
- நுபுர் சர்மா இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
- நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டது.
புதுடெல்லி :
ஞானவாபி மதவழிபாட்டு தளம் தொடர்பாக ஆங்கில செய்தி சேனலில் கடந்த 27-ம் தேதி நடந்த விவாதத்தில் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து விவாதத்தில் பங்கேற்ற நபர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய நுபுர் சர்மா, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடந்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டது.
அதேவேளை, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக பாஜக அரசு மீது பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியா மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடபாக 6-ம் தேதி பதிவிடப்பட்ட கடிதத்தில், நபிகளின் (இஸ்லாமிய மத இறைதூதர்) கண்ணியத்தை காப்பதற்காக டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம். தங்கள் முடிவுக்காக டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத்தை சேர்ந்த காவி பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்' என அந்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தபடும் என அல்கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப்படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுல் புறநகர் பகுதி வழியாக சென்ற ராணுவ வாகனங்கள் மீது இன்று தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர் என அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி தெரிவித்துள்ளார்.
காயமடைந்த சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #suicideattack #Kabulsuicideattack
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் தடை செய்யப்பட்ட மாயப்பணமான பிட்காயின்களை வாங்கி சேமித்து வைக்க ஆசைப்பட்டார். இதற்காக இணையத்தளம் மூலம் அமெரிக்காவை சேர்ந்த ஒருவரிடம் ஆயிரம் டாலர்களை கொடுத்து ஏமாந்தார்.
பின்னர், கடந்த மாதம் 2-ம் தேதியில் இருந்து 31-ம் தேதிவரை அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள விமான நிலையத்தை வெடி வைத்து தகர்க்கப்போவதாகவும், உடலில் வெடிகுண்டுகளை கட்டிவந்து ஏ.கே.47 ரக துப்பாக்கியால் மியாமி விமான நிலையத்தில் அனைவரையும் சுட்டுக் கொல்லப் போவதாகவும் மாறிமாறி மிரட்டி வந்துள்ளார்.
அமெரிக்க அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த வாலிபரின் கைபேசியை மோப்பம் பிடித்த உத்தரப்பிரதேசம் மாநில போலீசார் மிரட்டல் விடுத்த வாலிபரை மடக்கிப் பிடித்து, கைது செய்து விசாரித்து வருகின்றனர். #UPmannabbed #threatcalls #blowupMiamiairport #Miamiairport
இதில், சிறைச்சாலை வாகனம் கடுமையாக சேதம் அடைந்தது. வாகனத்தினுள் இருந்த 7 ஊழியர்கள் உடல்சிதறி உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சிறைச்சாலை வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக அப்பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. #AfghanistanBlast #PulECharkhiPrison
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த வாரம் முடிந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி 33 மாகாணங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தலைநகர் காபூலில் உள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நேற்று காலை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. தலைமை அலுவலகத்துக்கு வெளியே உள்ள போலீஸ் சோதனை சாவடியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டி கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பயங்கரவாதி உடல் சிதறி பலியானார். மேலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் 4 பேர், 2 போலீசார் பலத்த காயம் அடைந்தனர்.
இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பாதுகாப்புபடையினர் விரைந்து வந்த தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. #SuicideAttack #Afghanistan #ElectionWorker
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்