search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய குடிமக்கள் பதிவேடு"

    • என் பெற்றோரின் பிறந்தநாள் கூட எனக்கு தெரியாது. அப்படியிருக்க என் பெற்றோரின் சான்றிதழ்களை அவர்கள் கேட்டால் என்னால் எப்படி அவற்றை கொடுக்க முடியும்.
    • குடியுரிமை திருத்த சட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வில்லை என்றால் நீங்கள் வெளிநாட்டினராக மாறி விடுகிறீர்கள்.

    மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அக்கூட்டத்தில் பேசிய அவர், "தேசிய குடிமக்கள் பதிவேட்டை நான் அனுமதிக்க மாட்டேன். அசாமில் 19 லட்சம் இந்து வங்காளிகளின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

    என் பெற்றோரின் பிறந்தநாள் கூட எனக்கு தெரியாது. அப்படியிருக்க என் பெற்றோரின் சான்றிதழ்களை அவர்கள் கேட்டால் என்னால் எப்படி அவற்றை கொடுக்க முடியும்.

    குடியுரிமை திருத்த சட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வில்லை என்றால் நீங்கள் வெளிநாட்டினராக மாறி விடுகிறீர்கள்.

    50 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றிதழை அவர்கள் கொண்டு வர சொன்னால், முதலில் பாஜக வேட்பாளர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தில் சான்றிதழ்கள் கொடுத்து குடியுரிமைக்கு விண்ணப்பிக்க சொல்லுங்கள்.

    பாஜகவினரே குடியுரிமை திருத்த சட்டத்தில் விண்ணப்பிக்கவில்லை என்றால் நாம் ஏன் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டையும் நான் அனுமதிக்க மாட்டேன்" என்று மம்தா தெரிவித்தார். 

    2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு பணி, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என பா.ஜனதா துணைத்தலைவர் ஓம் மாத்தூர் தெரிவித்தார். #OmMathur #BJP
    ஜெய்ப்பூர்:

    பா.ஜனதா துணைத்தலைவர் ஓம் மாத்தூர், ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படாத ஒரு நகரம் கூட கிடையாது. நாடு, தர்மசத்திரம் ஆக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. ஆகவே, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு பணி, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

    இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தொடங்கிய இந்த திட்டத்தை நிறைவேற்ற முந்தைய காங்கிரஸ் அரசுக்கு தைரியம் இல்லை. இந்த விஷயத்தில், ராகுல் காந்தி தனது முன்னோர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #OmMathur #BJP #tamilnews 
    அசாம் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் தாம் எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி தெளிவான பதிலளிக்கவில்லை என பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #NRC
    புதுடெல்லி :

    வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

    அதன் இறுதி வரைவு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    40 லட்சம் பேர் பதிவேட்டில்  சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். இதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து இந்திய அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இது குறித்து பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளதாவது :-

    சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படியே அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

    ஆனால், இதை செயல்படுத்தக்கூடாது என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடும் அவ்வாறாகவே உள்ளது. 

    வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவியவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமா? வேண்டாமா? எனும் கேள்வியை ராகுல் காந்தியிடம் கேட்டேன்.

    ஆனால், இதுவரை அவர் எனக்கு தெளிவான பதில் அளிக்கவில்லை. எனினும், இவ்விவகாரத்தில் ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

    காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சாமாஜ் கட்சிகளிடம், சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்காளதேசத்தினரை இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டுமா? அல்லது நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமா? எனும் கேள்வியை கேட்க விரும்புகிறேன். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    அசாம் மாநிலத்தில் நுழைய முயன்ற திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் அடங்கிய குழுவினர் சில்சார் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. #NRCIssue #SilcharAirport #TMCDelegation
    கவுகாத்தி:

    வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. 

    அதன் இறுதி வரைவு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டனர்.  சுமார் 40 லட்சம் பேர் இந்த பதிவேட்டில் விடுபட்டது தொடர்பாக கடும் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது.

    அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு, உள்நாட்டு போரை விளைவிக்கும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், அசாம் மாநிலத்தில் நுழைய முயன்ற திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் அடங்கிய குழுவினர் சில்சார் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து ராய் உள்பட 8 பேர் கச்சார் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர்.

    ஆனால், அங்கு தற்போது 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் குழுவினரை தடுத்து நிறுத்தியுள்ளோம் என போலீசார் தெரிவித்தனர். 

    இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான டெரிக் ஓ பிரையன் கூறுகையில்,  மக்களை சந்திக்க செல்வது எங்களின் ஜனநாயக கடமை. விமான நிலையத்தில் எங்கள் குழுவினர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதை பார்த்தால் இங்கு சூப்பர் எமர்ஜென்சி நிலை நிலவுகிறது போல் தெரிகிறது என ஆவேசமாக பேசினார். #NRCIssue #SilcharAirport #TMCDelegation
    சமீபத்தில் வெளியிடப்பட்ட அசாம் தேசிய குடிமக்கள் வரைவு பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவின் குடும்பத்தினர் பெயர்கள் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #AssamNRC
    புதுடெல்லி:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் வங்காளதேசத்தில் இருந்து பலர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்தது. இதற்காக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு நேற்று தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.

    இந்த வரைவு பட்டியலில் சுமார் 40 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை கிளப்பியது. மேலும், இன்று கூடிய மாநிலங்களவையிலும் இவ்விவகாரம் தொடர்பாக அமளி ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் பலரது பெயர்கள் பட்டியலில் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

    1974 முதல் 1977 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த பக்ருதீன் அலி அகமதுவின் சகோதர் எக்ராமுதீன் அலி அகமதுவின் மகன் ஸியாவுதீன் தனது பெயர் பட்டியலில் இல்லை என புகார் தெரிவித்துள்ளார். 

    1971-ம் ஆண்டுக்கு முன் அசாமுக்குள் வந்தவர்கள் தாங்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான் என்பதற்கான ஆவணத்தை சமர்பிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் வெளிநாட்டவராக கருதப்படுவார்கள் என்பதன் அடிப்படையிலே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

    ஆனால், முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினரின் பெயரே பட்டியலில் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியின் போதே, ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் சிலர் தாங்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதற்காக சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



    மேற்கண்ட விவகாரத்தை குறிப்பிட்டு டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜி, “முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் பெயரே பட்டியலில் இல்லாமல் போயுள்ளது. இதற்கு மேல் என்ன கூற இருக்கிறது?. 

    பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் அடையாளத்தை இழக்க நேரிடும் என்பதை நினைத்து பார்த்தீர்களா?. இந்தியா - பாகிஸ்தான் - வங்காளதேசம் எல்லாமே ஒன்றாக இருந்தது தான் என்பதை மறந்து விடாதீர்கள். 1971-க்கு முன்னர் வங்காளதேசத்தில் இருந்து வந்து குடியேறிய அனைவரும் இந்தியர்கள்தான்” என அவர் கூறினார்.
    ஓட்டுவங்கி அரசியலுக்காக சுமார் 40 லட்சம் மக்களை அசாம் மாநிலத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். #AssamNRC #NRCReleased #MamataonNRC
    கொல்கத்தா:

    வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

    அதன் இறுதி வரைவு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

    40 லட்சம் பேர் பதிவேட்டில்  சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். எனினும், விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆனால், குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், அசாம் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. 7 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. 

    இந்த விவகாரம் இன்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. மாநிலங்களவை துவங்கியதும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

    காங்கிரஸ் எம்.பிக்களும் அவர்களுக்கு ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர். இதனால் முதலில் 12 மணி வரையிலும், அதன்பின்னர் 2 மணி வரையிலும் பின்னர் நாள் முழுவதும் மாநிலங்களவையை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

    இதற்கிடையில்,  அசாம் குடிமக்கள் பதிவேட்டில் சுமார் 40 லட்சம் மக்களின் பெயர் விடுபட்டுப் போனதற்கு மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஓட்டுவங்கி அரசியலுக்காக சுமார் 40 லட்சம் மக்களை அசாம் மாநிலத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்திய பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் எண்களை பெற்றுள்ள பலரும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

    இந்தியர்களான இவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மம்தா பானர்ஜி, இன்று டெல்லி செல்லும்பொது இவ்விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் விவாதிக்கப் போவதாகவும் கூறினார்.

    அசாம் மாநில குடிமக்கள் பதிவேட்டில் பெயர் விடுபட்டு போனவர்கள் மேற்கு வங்காளம் மாநிலத்தில் குடியேற வந்தால் அனுமதிப்பீர்களா? என்னும் கேள்விக்கு பதிலளித்த மம்தா, அவர்கள் அசாம் மாநில பூர்வவாசிகள். 

    அவர்களுக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன. அங்கேயே வாழும் உரிமை அவர்களுக்கு உண்டு.  மேற்கு வங்காளத்தில் குடியேற அவர்கள் கோரிக்கை வைக்கும்போது இதுதொடர்பாக  மேற்கு வங்காளம் மாநில அரசு பரிசீலனை செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார். #AssamNRC #NRCReleased #MamataonNRC
    ×