search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேய்பிறை அஷ்டமி"

    தகட்டூர் பைரவர் கோவிலில் பைரவருக்கு பால், இளநீர், சந்தனம், திருநீறு, திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காணப்பிக்கப்பட்டது.
    வாய்மேட்டை அடுத்த தகட்டூர் பைரவர் கோவிலில் காலபைரவாஷ்டமி திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. பைரவர் அவதரித்த நாளான நேற்று கோவிலின் மகா மண்டபத்திற்கு எதிரே ஞானசேகர சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

    அதன் பின்னர் பைரவருக்கு பால், இளநீர், சந்தனம், திருநீறு, திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காணப்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு, தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் பழனியப்பன், கோவில் எழுத்தர் கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    தான்தோன்றீஸ்வரர் கோவிலில் உள்ள வடுக பைரவருக்கு அஷ்டமி வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் அமைந்துள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தர்ம ஷம்வர்ஷினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் உள்ள வடுக பைரவருக்கு அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.

    முன்னதாக வடுக பைரவருக்கு 21 வகையான பெருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. யாக வேள்விகள் நடைபெற்று ரவி குருக்கள் தலைமையில் வடுக பைரவருக்கு விபூதி அலங்காரம் செய்யப் பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சமூக இடை வெளி யோடு பக்தர்கள் கலந்துகொண்டு வடுக பைரவரை தரிசனம் செய்தனர்.

    நாதே கவுண்டன் புதூரில் காலபைரவர் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கலசங்கள் மூலம் தங்கள் கரங்களால் காலபைரவருக்கு அபிஷேகம் செய்தனர்.
    கோவையை அடுத்த ஆலாந்துறை அருகே உள்ள நாதே கவுண்டன் புதூரில் காலபைரவர் ஜென்மாஷ்டமி விழா நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்ட விழா அரங்கில் காலை 9 மணிக்கு மஹா கணபதி வேள்வியும், 10 மணிக்கு 152 தம்பதிகள் பூஜை, 152 மகாயாகம், அபிஷேகமும் நடந்தது. இதை தொடர்ந்து பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கலசங்கள் மூலம் தங்கள் கரங்களால் காலபைரவருக்கு அபிஷேகம் செய்தனர்.

    தொடர்ந்து 12 மணிக்கு ருத்ர பாராயணம், 12.30 மணிக்கு ருத்ர ஹோமமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் கோவை யில் உள்ள அனைத்து மடங்களின் மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவை ஶ்ரீமத் தர்மராஜா அருள் பீடம், நிர்வாக குழு சிவ ஶ்ரீ கிருஷ்ண மூர்த்தி சுவாமிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

    நாகை நீலாயதாட்சியம்மன், காயாரோகணசாமி கோவிலில் பைரவருக்கு திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடந்தது.
    கார்த்திகை பைரவாஷ்டமியையொட்டி நாகை நீலாயதாட்சியம்மன், காயாரோகணசாமி கோவிலில் உள்ள சம்கார பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு யாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பைரவருக்கு திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடந்தது.

    இதை தொடர்ந்து, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசம் சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதேபோல கோவில் குளக்கரையில் தனி சன்னதியில் உள்ள சிம்மவாகன காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதேபோல் நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவிலில் உள்ள பைரவர், வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் கோவிலில் உள்ள பைரவர், திருவாய்மூர் தியாகராஜர் கோவிலில் உள்ள அஷ்ட பைரவர், தகட்டூர் பைரவர் கோவில் உள்ளிட்ட பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தேய்பிறை அஷ்டமியையொட்டி நாளை கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
    ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தேய்பிறை அஷ்டமி நிகழ்ச்சி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி மாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து 6.30. மணிக்கு அலங்கார தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை, மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாட்டை விழா குழுவினர் செய்துள்ளனர்.
    இடையார்பாளையம் நாணமேடு சொர்ணாகர்ஷன பைரவர் கோவிலில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) தேய்பிறை மகேஸ்வராஷ்டமியை முன்னிட்டு ஏகாதச ருத்ர யாகம் நடக்கிறது.
    அஷ்டமி என்பது எட்டாவது திதி நாள். அதிலும் தேய் பிறையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியை மகேஸ்வராஷ்டமி என்பர். இது பைரவரின் ஜென்மாஷ்டமி ஆகும். இதனை காலபைரவாஷ்டமி எனவும் அழைப்பர்.

    புதுவை கடலூர் சாலை இடையார்பாளையம் மேற்கே நாணமேடு சப்தகிரி நகரில் உள்ள சொர்ணாகர்ஷன பைரவர் கோவிலில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) தேய்பிறை மகேஸ்வராஷ்டமியை முன்னிட்டு ஏகாதச ருத்ர யாகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு பைரவர், பைரவிக்கு சிறப்பு யாக பூஜைகள் தொடங்குகின்றன. மதியம் 1 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும், யாக பூஜை நிறைவும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். அரசு அறிவுறுத்தலின்படி பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வழிபாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    தேய்பிறை அஷ்டமியையொட்டி தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்புவில் புகழ்பெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பரிவார மூர்த்தியாக எழுந்தருளியுள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களால் வழங்கப்பட்ட செவ்வரளி பூக்களால் மலர் அபிஷேகம் நடத்தப்பட்டது.

    இதையடுத்து சொர்ண ஆகர்ஷண பைரவர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேனியை சேர்ந்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா குழுவினரால் ராமநாம கீர்த்தனைகள் பாடப்பட்டன. பூஜையில் திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.
    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பரிவார மூர்த்தியாக உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது.
    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பரிவார மூர்த்தியாக உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நேற்று நடந்தது. 5 காலமாக இந்த பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்களால் வழங்கப்பட்ட பால், தேன், இளநீர், அரிசி மாவு, சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப்பொடி உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களை கொண்டு பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சொர்ண ஆகர்ஷண பைரவர், ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பிறகு பக்தர்களால் வழங்கப்பட்ட செவ்வரளி பூக்களால் பைரவருக்கு மலர் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் தேனியை சேர்ந்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா குழுவினரை சேர்ந்த குருக்களால் ராமநாம கீர்த்தனைகள் பாடப்பட்டன. இதைத்தொடர்ந்து தீபாராதனை நடந்தது. அப்போது, ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷங்கள் முழங்க பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த பூஜையில் திண்டுக்கல் மட்டுமின்றி கரூர், ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இதேபோல் பழனி முருகன் கோவிலில் மங்கம்மாள் மண்டபத்தில் உள்ள சேத்தர பால பைரவருக்கும், சண்டிகாதேவிக்கும் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு சிறந்தது என்றாலும், தேய்பிறை அஷ்டமி நாளே, பைரவரை வழிபட மிகவும் உகந்தது. இன்று சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை பார்க்கலாம்.
    கால பைரவாஷ்டகம் என்ற சுலோகம், ஸ்ரீஆதிசங்கரர் அருளியது. மிகவும் சக்தி வாந்த இந்த அஷ்டகத்தை சனிக்கிழமைகளில் அல்லது அஷ்டமி நாளில் பாராயணம் செய்ய, பிணிகள் அகலும். வாழ்க்கை வளம் பெருகும். குறிப்பாக, துரத்தும் கடன்கள் விரைவில் அடையும்.

    ஸ்ரீகாலபைரவாஷ்டகம் :

    தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம்
    வ்யால யஜ்ஞஸூத்ர மிந்துஸேகரம் க்ருபாகரம்
    நாரதாதி யோகி ப்ருந்த வந்திதம் திகம்பரம்
    காஸிகா புராதி நாத கால பைரவம் பஜே॥
    பானு கோடி பாஸ்வரம் பவாப்தி தார கம்பரம்
    நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோஸனம்
    கால காலமம் புஜாக்ஷ மஸ்த ஸூல மக்ஷரம்
    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
    ஸூல டங்க பாஸ தண்ட பாணி மாதி காரணம்
    ஸ்யாம காய மாதி தேவ மக்ஷரம் நிராமயம்
    பீம விக்ர மம் ப்ரபும் விஸித்ர தாண்டவ ப்ரியம்
    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
    புக்தி முக்தி தாயகம் ப்ரஸஸ்த சாரு விக்ரஹம்
    பக்த வத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்த லோக விக்ரஹம்
    நிக்வணத் மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்
    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
    தர்ம ஸேது பாலகம் த்வதர்ம மார்க்க நாஸகம்
    கர்மபாஸ மோசகம் ஸுசர்ம தாயகம் விபும்
    ஸ்வர்ண வர்ண கேஸ பாஸ ஸோபிதாங்க
    நிர்மலம்
    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
    ரத்ன பாதுகா ப்ரபாபி ராம பாத யுக்மகம்
    நித்ய மத்வி தீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்
    ம்ருத்யு தர்ப்ப நாஸனம் கரால தம்ஷ்ட்ர பூஷணம்
    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
    அட்டஹாஸ பின்ன பத்மஜாண்ட கோஸ ஸந்ததிம்
    த்ருஷ்டி பாத நஷ்ட பாப ஜாலமுக்ர ஸாஸனம்
    அஷ்ட ஸித்தி தாயகம் கபால மாலி காதரம்
    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
    பூத ஸங்க நாயகம் விஸால கீர்த்தி தாயகம்
    காஸி வாஸி லோக புண்ய பாப ஸோதகம் விபும்
    நீதி மார்க்க கோவிதம் புராதனம் ஜகத் பதிம்
    காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
    கால பைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
    ஜ்ஞான முக்தி ஸாதனம் விஸித்ர புண்ய வர்த்தனம்
    ஸோக மோஹ லோப தைன்ய கோப தாப
    நாஸனம்
    தே ப்ரயாந்தி கால பைரவாங்க்ரி ஸந்நிதிம்
    த்ருவம்॥
    பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம்.
    சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். இவர் சிவபெருமான் ஆட்சி செய்யும் இடமாக கருதப்படும் காசியில், சிவ கணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ஆணவம் கொண்ட பிரம்ம தேவனின் தலையைக் கொய்தவர். முனிவர்களின் சாபத்தில் இருந்து, தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்து அருளியவர்.

    மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக சூரியனின் மகனான சனியை, சனீஸ்வரனாக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர். இப்படி பல சிறப்புகளைக் கொண்ட பைரவமூர்த்தியை ‘கால பைரவர், மார்த்தாண்ட பைரவர், சேத்திர பாலகர், சத்ரு சம்கார பைரவர், வடுக பைரவர், சொர்ணாகாசன பைரவர் உள்ளிட்ட பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறார்கள்.

    பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் அஷ்டமியில், அதாவது தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம். பஞ்ச தீபம் என்பது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசுநெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்ற வேண்டும். ஒரு தீபத்தில் இருந்து மற்றொரு தீபத்தை ஏற்றக்கூடாது. ஒவ்வொரு தீபத்தையும் தனித்தனியாக ஏற்ற வேண்டும். இப்படி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    பைரவர் என்ற பெயருக்கு ‘பயத்தை அளிப்பவர்’ என்று பொருள். அதாவது தன்னை அண்டியவர்களின் குறைகளைக் களைய அவர்களின் எதிரிகளுக்கு பயத்தை அளிப்பவர். ‘பாவத்தை நீக்குபவர்’ மற்றும் ‘அடியார்களின் பயத்தை போக்குபவர்’ என்றும் பொருள் உண்டு.

    பைரவர், சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவர் ஆவார். அந்தகாசூரனை அழிப்பதற்காக சிவபெருமான் எடுத்த வடிவமே பைரவர் ஆவார். இவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கிறார். சிவபெருமானைப் போலவே, பைரவருக்கும் 64 வடிவங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் ‘கால பைரவர்’.

    காலத்தை வென்றவர், கால சக்கரத்தை இயக்குபவர் இந்த கால பைரவர். இவரது உடலில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும், 9 கோள்களும் அமைந்திருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இவரது மூச்சுக் காற்றில் இருந்து தான் திருவாக்கியம் மற்றும் திருக்கணிதம் ஆகிய பஞ்சாங்கங்கள் உண்டானதாக கூறப்படுகிறது. இவற்றில் இருந்து மற்ற காலக் கணித முறைகள் தோன்றியதாம்.

    கால பைரவர் மற்ற பைரவர்களைக் காட்டிலும் உக்கிரமானவர். ஆனால் தன்னை நம்பியவர்களை கண்ணின் இமைபோல் காப்பவர். இவரே சிவ ஆலயங்களின் காவல் தெய்வம். இவரின் அருள் இன்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. சிவவழிபாட்டில் முன்னேற்றம் காண கால பைரவரின் அருள் மிகவும் அவசியம் ஆகும்.

    உலகில் பிறந்தவர்கள் வேண்டுவது முக்தியைத் தான். அதாவது மறுபிறவி இல்லாத நிலை. ஆனால் ஒருவருக்கு பாவமோ அல்லது புண்ணியமோ இருந்தால் மறுபிறவி உண்டு. எப்போது பாவம் மற்றும் புண்ணியம் இரண்டும் அழிந்து வெறுமை நிலை உண்டாகின்றதோ அப்போது தான் பிறவி இல்லாத பெருநிலை ஏற்படும். அத்தகைய பிறவி இல்லாத பெருவாழ்வை தருபவர் கால பைரவர். இவர் காலத்தை மாற்றும் சக்தி கொண்டவர் என்பதால், ஒருவரது பாவ- புண்ணியங்களை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.

    வீட்டில் தினமும் விளக்கேற்றி வைத்து, ‘ஓம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து வந்தால், வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம்.

    ஸ்ரீ விளம்பி ஆண்டில் ( 2018 - 2019) வரும் கால பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமி விரத நாட்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அஷ்டமி நாள் - அஷ்டமியின் பெயர் - பூஜை பலன்கள் :

    வைகாசி 24 (7-6-2018) வியாழக்கிழமை பகல் : ஆனி 22 (6-7-2018) வெள்ளிக்கிழமை : பகவதாஷ்டமி  = கடன் சுமை தீரும். அடியார்களுக்குச் செய்த தீமைகள் நீங்கும்.

    ஆடி 19 (4-8-2018) சனிக்கிழமை இரவு : நீலகண்டாஷ்டமி = கல்வியில் மேன்மை ஏற்படும்.

    ஆடி 20 (5-8-2018) ஞாயிற்றுக்கிழமை பகல் : சகல துறைகளிலும் வெற்றி ஏற்படும்.

    ஆவணி18 (3-9-2018) திங்கட்கிழமை : ஸ்தானு அஷ்டமி = லட்சுமி கடாட்சம் ஏற்படும். விஷ பயம் விலகும்.

    புரட்டாசி 16 (2-10-2018) செவ்வாய்க்கிழமை : சம்புகாஷ்டமி = ஆயுள் விருத்தி ஏற்படும். தாய், தந்தையர்க்கு செய்த இன்னலால் ஏற்பட்ட தோஷம் விலகும்.

    ஐப்பசி 14 (31-10-2018) புதன்கிழமை : ஈஸ்வராஷ்டமி = சகோதர பகை நீங்கும். கைலாச பதவி கிடைக்கும்.

    கார்த்திகை 14 (30-11-2018) வெள்ளிக்கிழமை : ருத்ராஷ்டமி = தனவரவு உண்டாகும்.

    காலபைரவாஷ்டமி : கோபத்தால் செய்த பாபங்கள் விலகும்.

    மார்கழி 14 (29-12-2018) சனிக்கிழமை : சங்கராஷ்டமி = தொழில் விருத்தி ஏற்படும். தொழில் முறையில் செய்த பாபங்கள் விலகும்.

    தை 13 (27-1-2019) ஞாயிற்றுக்கிழமை இரவு : தேவதேவாஷ்டமி = மன பயம் விலகும்.

    தை 14 (28-1-2019) திங்கட்கிழமை பகல்  = உயர் பதவி கிடைக்கும்.

    மாசி 14 (26-2-2019) செவ்வாய்க்கிழமை : மகேஷ்வராஷ்டமி = போட்டிகளில் வெற்றி, தொழில் துறையில் புது யுக்தி, முன்னேற்றம் ஏற்படும்.

    பங்குனி 14 (28-3-2019) வியாழக்கிழமை : திரியம்பகாஷ்டமி = திருமணத்தடை விலகும். யமபயம் நீங்கி ஆயுள் விருத்தி ஏற்படும்.
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி காலையில் காளகத்தீசுவரர்-ஞானாம்பிகை, பத்மகிரீசுவரர்-அபிராமி அம்மனுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து மாலையில் பைரவருக்கு சந்தனம், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் சுவாமியின் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    இதேபோல் பழனி அடிவாரம் பாதவிநாயகர் கோவில் அருகே மீனாட்சி மண்டபத்தில் உள்ள ஷேஸ்திரபால பைரவர், சண்டிகாதேவி ஆகியோருக்கு பூஜை நடந்தது. அப்போது, சிறப்பு அலங்காரத்தில் பைரவர்-சண்டிகாதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் சந்தனம், மஞ்சள், இளநீர், தேன், பால் உள்ளிட்ட பொருட்களால் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திண்டுக்கல் மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பட்டிவீரன்பட்டியில் உள்ள சுயம்பு நாகேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதில் சாமிக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர், குங்குமம், விபூதி உள்பட 16 வகையான பொருட் களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சொர்ண ஆகர்ஷண பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் குடைமிளகாய் தீபம், எலுமிச்சை தீபம், தேங்காய் விளக்கு தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பொதுமக்களும் செய்திருந்தனர். இதே போல் சாவடி பஜாரில் பகவதியம்மன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
    ×