search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் பறக்கும்படை"

    புதுச்சேரி முன்னாள் முதல் மந்திரியும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர். #LokSabhaElections2019 #NRCongress #Rangasamy #ECFlyingSquad
    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது.
    தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், புதுச்சேரி முன்னாள் முதல் மந்திரியும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

    பணம் பட்டுவாடா தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று சோதனை நடத்தினர்.

    நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் இன்று நடைபெறும் சோதனையால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #NRCongress #Rangasamy #ECFlyingSquad
    ஒடிசா முதல் மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #NaveenPatnaik
    புவனேஷ்வர்:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசா முதல் மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.



    முதல் மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் நேற்று ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து தேர்தல் பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர். நவீன் பட்நாயக்கிடம் இருந்த கைப்பைகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். #LokSabhaElections2019 #NaveenPatnaik
    கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு லட்சுமி நகரில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் தனியார் செக்யூரிட்டி வேனில் ரூ.5 லட்சம் ரொக்க பணம், 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
    வடவள்ளி:

    கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு லட்சுமி நகரில் இன்று காலை வடக்கு சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜேஸ்வரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப், ஏட்டுகள் ராஜேந்திர பிரசாத், ரங்கசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு தனியார் செக்யூரிட்டி வேனில் 5 பேர் வந்தனர். வேனை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியபோது கணபதியில் இருந்து இருட்டுப்பள்ளத்துக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்ப செல்வதாக வேனில் இருந்தவர்கள் கூறினர். அவர்கள் கொண்டு வந்த ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. மேலும் அவர்களிடம் 2 ஏர் ரைபிள் துப்பாக்கிகள் இருந்தன. அதற்கும் உரிய ஆவணங்கள் இல்லை. இதனையடுத்து ரூ.5 லட்சம் பணம் மற்றும் 2 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் காரில் வந்தவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி (வயது 40), ஜம்முவை சேர்ந்த சவாதிகான் (22), பணப்பொறுப்பாளர் கங்காதரன், உதயகுமார் மற்றும் வேன் டிரைவர் நாகராஜ் ஆகியோர் என்பதும் இவர்கள் கோவை ராமநாதபுரத்தில் இயங்கி வரும் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் தனியார் செக்யூரிட்டி கம்பெனியில் வேலை செய்வதும் தெரியவந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மற்றும் 2 துப்பாக்கிகளும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections2019


    நாகையில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ.2½ லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    நாகப்பட்டினம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாகை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று தமிழக எல்லையான நாகையை அடுத்த வாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். காரில் ரூ. 2½ லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள் இருந்தது தெரியவந்தது.

    அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்த கவரிங் நகைகளை பறிமுதல் செய்து, நாகை சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் கவரிங் நகைகளை கொண்டு வந்த சிதம்பரத்தை சேர்ந்த கணேசன், சரவணன் ஆகிய 2 பேரிடம் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ராஜாமடம் சோதனை சாவடியில் மண்டல துணை தாசில்தார் கண்ணகி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வேதாரண்யத்தில் இருந்து வந்த ஒரு காரை வழிமறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது காரில் 2 துப்பாக்கிகள் இருந்தன. அதில் ஒன்று இத்தாலி நாட்டில் தயாரிக்கப்பட்ட இரட்டைக்குழல் துப்பாக்கி ஆகும். மற்றொன்று இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒற்றைக்குழல் துப்பாக்கி ஆகும்.

    இந்த 2 துப்பாக்கிகளுக்கு உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்பதும், இவை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் என்பவருக்கு சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 2 துப்பாக்கிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து பட்டுக்கோட்டை தாசில்தார் அருள்பிரகாசம் முன்னிலையில் பட்டுக்கோட்டை கருவூலத்தில் ஒப்படைத்தனர். #LSPolls

    ×