என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை"
ஆரணி:
வந்தவாசி தாலுகா சொரப்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 48), தொழிலாளி. இவருடைய மனைவி சாந்திக்கும் (42)வேறொரு நபருக்கும் தகாத உறவு உள்ளது என்று மதியழகன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி சாந்தியின் சகோதரர்கள் பழனி, கங்காதுரையிடம் (28) ‘உங்கள் சகோதரி வேறொரு நபருடன் தகாத உறவில் உள்ளதை குடும்பத்தினர் யாரும் தட்டிக்கேட்பதில்லை. அதேபோன்று என்னிடம் சண்டை போட்டு அவள் உங்கள் வீட்டுக்கு வந்தால் எப்படி சேர்த்து கொள்ளலாம்’ என்று மதியழகன் வாக்குவாதத்தில் ஈடு பட்டுள்ளார்.
இந்த வாக்குவாதம் முற்றியதில் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த மதியழகன் அப்பகுதியில் கிடந்த இரும்பு ராடால் கங்காதுரையை சரமாரியாக தாக்கினார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இது குறித்து பழனி, பொன்னூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஆரணி கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.தேவநாதன் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், குடும்ப தகராறில் கங்காதுரையை அடித்து கொலை செய்த மதியழகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து பலத்த காவலுடன் மதியழகன் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள பலவஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 48), கூலிதொழிலாளி. இவரது உறவினர் வீடு அதே பகுதியில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 26-11-2017 அன்று சுப்பிரமணியம் தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது உறவினர் வீட்டின் அருகே 7 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள்.
சுப்பிரமணியம் அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை அருகில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். இது குறித்து அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது நடந்த விவரத்தை பெற்றோரிடம் அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து திருப்பூர் தெற்கு மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சுப்பிரமணியத்தை கைது செய்தனர். இந்த வழக்கு திருப்பூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கு நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக சுப்பிரமணியத்திற்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
பங்காருபாளையம் அருகில் ஒரு கோழிப்பண்ணை உள்ளது.
அங்கு, கூலி வேலை செய்பவர்களுக்கு பண்ணை நிர்வாகம் ஒரு கொட்டகை அமைத்துக் கொடுத்துள்ளது. அந்தக் கொட்டகையில் அனைவரும் தங்கி வேலை பார்த்து வந்தனர். அதில் 5 வயது சிறுமியும் தனது பெற்றோருடன் தங்கியிருந்தாள். அதே கொட்டகையில், பங்காருபாளையம் மண்டலம் சும்மிந்தபாளையம் பகுதியைச் சேர்ந்த சுவாமிநாதன் (வயது 35) என்பவர் கூலி வேலை பார்த்து வந்தார்.
2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந்தேதி அந்தக் கொட்டகையில் தங்கியிருந்த அனைவரும் பங்காருபாளையத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சினிமா பார்த்து விட்டு, நள்ளிரவில் கொட்டகைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது 5 வயது சிறுமி தூங்கி விட்டாள். அந்தச் சிறுமியை சுவாமிநாதன் தோளில் தூக்கி வந்துள்ளார்.
கோழிப்பண்ணை வந்ததும் அனைவரும் கொட்டகைக்குச் சென்று விட்டனர். ஆனால் சுவாமிநாதன், தூக்கக்கலக்கத்தில் இருந்த சிறுமியை யாருக்கும் தெரியாமல் அருகில் உள்ள வனப்பகுதிக்குத் தூக்கிச்சென்று, அவளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, பிணத்தை அங்கேயே வீசி சென்றுள்ளார்.
பெற்றோர் காலை எழுந்து பார்த்தபோது சிறுமியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கோழிப்பண்ணைக்கு அருகில் வனப்பகுதியில் சிறுமி பிணமாக கிடந்ததைப் பார்த்து கதறினர். இதுபற்றி பங்காருபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சுவாமிநாதன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று பிணத்தை வனப்பகுதியில் வீசி சென்றிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சுவாமிநாதனை போலீசார் கைது செய்து, அவர் மீது சித்தூர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி, சுவாமிநாதனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பு கூறினார். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்