என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பணி மாறுதல்"
நெல்லை:
பாளை பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர் சாத் ராக் சாமுவேல் (வயது 43). இவர் பாளையில் உள்ள ஒரு பள்ளியில் ஓவிய ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். சமீபத்தில் அவரை உக்கிரன்கோட்டை பள்ளிக்கு பணிமாறுதல் செய்தனர். அங்கு பணியில் சேர்ந்த சாத்ராக் சாமுவேல், பணி புரியாமல் மருத்துவ விடுப்பில் சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சாத்ராக் சாமுவேலை திடீர் என்று காணவில்லை. அவரது மனைவி அன்னாள், பலமுறை செல்போனில் தொடர்பு கொண்ட பிறகும் அவருடன் பேசமுடியவில்லை. இதனால் அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என்று உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பாளை டக்கரம்மாள்புரத்தை அடுத்த ஜோதிபுரம் காட்டுப் பகுதியில் நேற்று மாலை ஒருவர் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடப்பதாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் காணாமல் போன ஓவிய ஆசிரியர் சாத்ராக் சாமுவேல் என்று தெரியவந்தது.
அவர் பணிமாறுதல் செய்யப்பட்டதால் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டதாகவும், அதனால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தாகவும் அவரது மனைவி அன்னாள், முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி அருகே உள்ள புதுவள்ளியம் பாளையத்தில் ரூ.4½ லட்சம் செலவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை இன்று நடந்தது.
மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். சத்தியபாமா எம்.பி., சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 500 பட்டய கணக்காயர்கள் மூலம் பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சி.ஏ. படிக்க முதன்மை தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் 20 ஆயிரம் மாணவ- மாணவிகள் பயன் பெறுவர்.
10, 12-ம் வகுப்புகளில் அரசு பள்ளிகளில் சேர எந்த தடையும் இல்லை. தனியார் பள்ளிகளில் இருந்து வந்தாலும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் ஒளிவு மறைவின்றி நேர்மையாக நடைபெறும். குறிப்பாக தென் மாவட்டம், வட மாவட்டங்களில் ஆசிரியர் பணியிடங்கள் குறைவாக உள்ளது. ஆனால் அங்கு மாறுதல் கேட்கும் ஆசிரியர்கள் 7 ஆயிரம் பேர் உள்ளனர்.
பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திலேயே பணியாற்ற விரும்புகிறார்கள். ஆனால் அந்த பகுதிகளில் காலி பணியிடங்கள் இல்லாததால் ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு பணி மாறுதல் செய்ய முடியாத நிலை உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார். #TNMinister #Sengottaiyan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்