search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு அமைச்சகம்"

    • தேடும் பணியில் 6 கப்பல்களையும், ஏர்கிராப்ட் ஒன்றையும் கடற்படை ஈடுபடுத்தியுள்ளது
    • கடலோர காவற்படை அதிகாரிகளும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்

    கோவா கடற்பகுதியில் இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் மீனவர்கள் படகின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கோவா கடற்கரையில் இருந்து 70 நாட்டிக்கல் மைல்கள் [nautical miles] தூரத்தில் வைத்து இந்த விபத்து நடந்துள்ளது.

    13 மீனவர்களுடன் வந்த மர்தோமா [Marthoma] படகின் மீது ஸ்கார்பீன்- கிளாஸ் [Scorpene-class] கடற்படை நீர்மூழ்கியானது மோதியுள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கோப்புப் படம்

     

     காணாமல் போனவர்களை தேடும் பணியில் 6 கப்பல்களையும், ஏர்கிராப்ட் ஒன்றையும் கடற்படை ஈடுபடுத்தியுள்ளது . தற்போது வரை 11 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இருவரை தேடும் பணி நடந்து வருகிறது. மும்பை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (எம்ஆர்சிசி) மூலம் தேடுதல் பணி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கடலோர காவற்படை அதிகாரிகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • பேரிடர் காலங்களிலும், மனிதாபிமான நெருக்கடி சமயங்களிலும் சிக்கலான நிலப்பரப்புகளில் உபயோகிக்க ஏதுவாக இந்த மருத்துவமனை உருவாகியுள்ளது.
    • ராணுவத்தினர் மருத்துவமனையை 15,000 அடி உயரத்தில் உள்ள பகுதியில் நிலை நிறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்தியாவில் மருத்துவ வசதிகள் சென்று சேராத பகுதிகளுக்கு மருத்துவமனை சேவைகளை வழங்குவதற்காக முயற்சியின் முக்கிய பகுதியாகஉலகின் முதல் போர்ட்டபிள் மருத்துவமனையை இந்திய ராணுவம் பரிசோதித்துள்ளது.

    மலையாக இருந்தாலும் காடாக இருந்தாலும் எங்கும் எடுத்துச்செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்கிய மைத்ரி ஹெல்த் கியூப் எனப்படும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த போர்ட்டபிள் மருத்துவமனை உலகின் முதல் போர்ட்டபிள் மருத்துவமனையாக உள்ளது.

    BHISHM (Bharat Health Initiative for Sahyog, Hita & Maitri) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களிலும், மனிதாபிமான நெருக்கடி சமயங்களிலும் சிக்கலான நிலப்பரப்புகளில் உபயோகிக்க ஏதுவாக இந்த மருத்துவமனை உருவாகியுள்ளது.

    தற்போது இந்திய ஆயுதப் படையும் வான் படையும் இணைந்து பாராசூட் மூலம் லடாக்கில் 15,000 அடி உயரத்தில் உள்ள பகுதியில் இந்த போர்ட்டபிள் மருத்துவமனையை எடுத்துச்சென்று நிலைநிறுத்திப் பரிசோதித்துள்ளது. இது ஒரு மைல்கல் சாதனை என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராணுவத்தினர் மருத்துவமனையை 15,000 அடி உயரத்தில் உள்ள பகுதியில் நிலை நிறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • இந்த ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட பாதியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
    • இந்திய கடற்படைக்கு இந்திய தயாரிப்பான 60 யுடிலிட்டி ஹெலிகாப்டர்கள் வாங்கப்படும்

    புதுடெல்லி:

    இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு ஆயுதங்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில், இந்த கொள்முதல் திட்டத்திற்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்தார்.

    இந்த ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட பாதியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதாவது, ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பில் 60 ஹெலிகாப்டர்கள் வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர, இந்திய கடற்படைக்கு இந்திய தயாரிப்பான 60 யுடிலிட்டி ஹெலிகாப்டர்கள் மற்றும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள், இந்திய ராணுவத்திற்கு 307 ஏடிஏஜிஎஸ் ஹோவிட்சர்கள் மற்றும் இந்திய கடலோர காவல்படைக்கு 9 ஏஎல்எச் துருவ் ஹெலிகாப்டர்கள் ஆகியவை அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஏற்ப வாங்கப்படும்.

    • இரட்டை செயல்பாட்டு திறனுடன் கூடிய பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கம்.
    • இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்தும் என தகவல்

    நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை கொள்முதலுக்காக பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனத்துடன் (பி.எ.பி.எல்.) மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

    ரூபாய் 1700 கோடி மதிப்பீட்டில் நிலத்தில் செயல்படக் கூடியதாகவும், கப்பல் மீதான தாக்குதலை முறியடிக்கும் வகையிலும், இந்த புதிய வகை ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

    இரட்டை செயல்பாட்டு திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்தும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    வடக்கு பர்கினா பாசோவில் 12 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. #BurkinaFasoAttack
    மாஸ்கோ:

    மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினா பாசோவின் வடக்கு பகுதியில் உள்ளது சோம் மாகாணம். இங்குள்ள அர்பிந்தா நகராட்சிக்குட்பட்ட காஸிலிக்கி கிராமத்திற்குள், நேற்று முன்தினம் 30 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து, பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்கியது.

    இந்த தாக்குதலில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், ஒரு தானிய களஞ்சியம், வண்டி மற்றும் 6 கடைகளுக்கு தீ வைத்தனர். மேலும் 5 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஏராளமான எருதுகளையும் அபகரித்துச் சென்றனர். இத்தகவலை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் பேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளது. #BurkinaFasoAttack

    பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் - டசால்ட் நிறுவனம் செய்துகொண்ட ஏற்பாடுகளுக்கும் இந்திய அரசுக்கும் எந்த தொடர்பு இல்லை என ராணுவ அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது. #Hollande #RafaleDeal #DefenceMinistry
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.

    ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்த்தை மாற்றி அமைத்து கடந்த 2015-ம் ஆண்டில் பாரதிய ஜனதா ஆட்சியில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்படும் போர் விமானங்களை பராமரிக்கும் பொறுப்பை இந்திய அரசுக்கு சொந்தமான எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு வழங்காமல் விமானத்துறையில் முன் அனுபவம் இல்லாத அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும், அதிக தொகை கொடுத்து விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

    இதற்கிடையே, ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் அம்பானி நிறுவனத்தை நுழைத்தது இந்திய அரசின் நிர்பந்தத்தால்தான் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே நேற்று குறிப்பிட்டிருந்தார்.



    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராணுவ அமைச்சகம் இன்று விளக்கம் அளித்துள்ளது.

    அதில், ரிலையன்ஸ் பாதுகாப்பு மற்றும் டசால்ட் விமான தயாரிப்பு நிறுவனங்கள் செய்துகொண்ட ஒப்பந்தம் முற்றிலுமாக அவ்விறு நிறுவனங்களுக்கும் இடையிலான விவகாரம் என்றும், இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தை எந்த வகையிலும் இந்திய அரசு தேர்ந்தெடுத்து டசால்ட் நிறுவனத்திடம் முன்மொழியவில்லை, இதில் அரசுக்கு எந்த பங்களிப்பும் கிடையாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், பிரான்ஸ் முன்னாள் அதிபரின் பத்திரிகை பேட்டியை வைத்து தேவையில்லாத சர்ச்சைகள் எழுப்பப்படுவதாகவும் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Hollande #RafaleDeal #DefenceMinistry
    இந்திய முப்படைகளுக்காக ரூ.9,100 கோடி மதிப்பில் ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான கவுன்சில் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. #DefenceMinistry #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், ரூ.9,100 கோடி மதிப்பு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    ராணுவத்தின் இரண்டு பிரிவுக்கு ஆகாஷ் ஏவுகணைகள் வாங்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 
    இந்திய கடற்படைக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 111 புதிய ஹெலிகாப்டர்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. #helicoptersprocurement #111Navyhelicopters
    புதுடெல்லி:

    நாட்டின் முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களை கொள்முதல் செய்யும் குழுவின் கூட்டம் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் இந்திய கடற்படைக்கு ரூ.21 ஆயிரம் கோடி செலவில் 111 புதிய ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    மேலும், 3,364 கோடி ரூபாய் செலவில் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும்  24,879 கோடி ரூபாய்க்கு பிற ஆயுதங்களை கொள்முதல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மொத்தத்தில் சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கொள்முதலுக்கு இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். #helicoptersprocurement   #111Navyhelicopters  
    ×