என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதிய தேர் வெள்ளோட்டம்"
- தேரோட்டம் டிசம்பர் மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
- தேர் வெள்ளோட்டம் நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
வேங்கிக்கால்:
நாளை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் டிசம்பர் மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் அருணாசலேஸ்வரர் தேர் சுமார் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அருணாச்சலேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் நாளை காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தொடங்குகிறது.
வெள்ளோட்டத்திற்கான பணிகளை அருணாச்சலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம், மேலாளர் செந்தில் ஆகியோர் செய்து வருகின்றனர்.
தேர் வெள்ளோட்டத்தின் போது அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அருணாசலேஸ்வரர் கோவில் பெரிய தேர் வெள்ளோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.
- 5 நிலைகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்ட இந்த தேர் தயார் நிலையில் உள்ளது.
- புதிய தேர் கும்ப ப்ரோக்க்ஷனம், ஸ்தாபனம், பலிதானம், மஹா தீபாரா தனை நடைபெறும்.
உடுமலை :
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா என்பது சுற்றுவட்டார கிராம மக்களின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சுமார் 100 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்த பழமையான தேருக்குப் பதிலாக ரூ. 53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. எண்கோண வடிவில் மர சிற்ப வேலைப்பாடுகளுடன் 5 நிலைகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்ட இந்த தேர் தயார் நிலையில் உள்ளது.
இந்த தேரின் மொத்த உயரம் 12 அடியாக உள்ள நிலையில், தேர்ப்பலகை 9 அடி உயரத்திலும், உற்சவருக்கான சிம்மாசனம் 2 அடி உயரத்திலும் அமைந்துள்ளது. இந்த தேரை உருவாக்குவதற்காக இலுப்பை மரம் மற்றும் தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேரில் அம்மன் தலங்கள் குறித்த வரலாற்று சிற்பங்கள், சிவன், விஷ்ணு, முருகன், விநாயகர் உள்ளிட்ட 220 மரச்சிற்பங்களும், 120 பொதியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.
கண்ணைக்கவரும் சிற்ப வேலைப்பாடுகளுடன் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய தேரைக் கண்டு ரசிப்பதற்கு பொதுமக்கள் ஆர்வமாக வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் புதிய தேர் நிலைக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு டிசம்பர் 14-ந்தேதி நடைபெற்றது. இதனையடுத்து இன்று (வியாழக்கிழமை) புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது.
இன்று காலை 9.45 மணிக்கு மங்கள இசை, அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. காலை 10.30 மணிக்கு தேவதா ஹோமத்தைத் தொடர்ந்து புதிய தேர் பிரதிஷ்டா ஹோமங்கள் நடைபெற்று மதியம் 1 மணிக்கு புதிய தேர் கும்ப ப்ரோக்க்ஷனம், ஸ்தாபனம், பலிதானம், மஹா தீபாராதனை நடைபெறும். மாலை 4 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்டம் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
- ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய தோ் உருவாக்கப்பட்டுள்ளது.
- செயல் அலுவலா் சி.தீபா ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.
உடுமலை :
உடுமலை மாரியம்மன் கோவிலில் நூறாண்டுகளுக்குமேல் பயன்பாட்டில் இருந்த தேருக்கு பதிலாக ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய தோ் உருவாக்கப்பட்டுள்ளது.புதிய தேரின் வெள்ளோட்டம் தேரோடும் வீதிகளில் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது.
அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புதிய தேரை வடம் பிடித்து வெள்ளோட்டத்தை துவக்கி வைக்க உள்ளனா்.பரம்பரை அறங்காவலா் யுஎஸ்எஸ்.ஸ்ரீதா், செயல் அலுவலா் சி.தீபா ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்