search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புழுதி புயல்"

    • புழுதி புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது
    • மும்பை நகரில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மும்பையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் 40-50 கி.மீ வேகத்தில் புழுதிப் புயல் வீசியது. இதனால் மும்பை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    புழுதி புயலுடன் மழையும் பெய்ததால் மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதும் தரையிறக்கப்படுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. புழுதி புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    மும்பை நகரில் 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மும்பையின் வடாலா பகுதியில் புழுதிப் புயல் வீசியதில் ராட்சத இரும்பு பேனர் ஒன்று பெட்ரோல் பங்க் மீது விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு. 

    இதுவரை விபத்தில் சிக்கிய 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை தகவல் தெரிவித்துள்ளனர்.

    • விபத்து நடந்த பகுதிக்கு போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர்.
    • விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இல்லினாய்ஸ்:

    அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பார்மர்ஸ்வில்லி நகருக்கு இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள இன்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

    அப்போது அங்கு பயங்கரமான புழுதி புயல் வீசியது. எதிரே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு தூசிகள் பறந்து நெஞ்சாலையில் பரவியது. இதனால் வாகனங்கள் ஒன்றோடொன்று அடுத்தடுத்து பயங்கரமாக மோதிக் கொண்டன.

    சுமார் 3½ கிலோ மீட்டர் தூரத்துக்கு லாரி, கார், பஸ் என 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதின. இரண்டு லாரிகளில் தீப்பிடித்தது.

    இந்த விபத்துகளில் 6 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து நடந்த பகுதிக்கு போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர்.

    லாரிகளில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் மற்ற வாகனங்களுக்கு பரவாமல் அணைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக இல்லினாய்ஸ் போலீசார் கூறும் போது, '60 பயணிகள் மற்றும் 30 வணிக வாகனங்கள் விபத்துக்குள்ளாகியது' என்றனர். சிகாகோ மற்றும் செயின்ட் லூயிஸ் போன்ற நகரங்களை இணைக்கும் முக்கிய பாதையாக உள்ள இந்த நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்ப்ட்டுள்ளது.

    விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    செவ்வாய் கிரகத்தில் கடந்த ஒரு வாரமாக வீசி வரும் மாசு கலந்து புழுதி புயலினால் ஏற்பட்ட மாற்றங்களை கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது. #NASA #MarsDustStorm #CuriosityRover

    வாஷிங்டன்:

    செவ்வாய் கிரகத்தில் தூசு புயல் வீசவுள்ளதாக சமீபத்தில் நாசா தகவல் அறிவித்தது. இந்த புயலை செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வரும் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம் பிடிக்கும் எனவும், அந்த புயலினால் அதன் செயற்பாடுகளும் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவித்திருந்தது.

    இதனிடையே கடந்த ஒரு வாரமாக செவ்வாய் கிரகத்தில் புழுதி புயல் வீசி வருகிறது. இந்த புழுதி புயலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இதனால் கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தின் செயல்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் நாசா கூறியுள்ளது.



    இந்நிலையில், புழுதி புயலின் காரணமாக செவ்வாய் கிரகத்தின் சில பகுதிகளில் நிறம் மாறியுள்ளது. மஞ்சள் நிறமாக இருந்து பகுதிகள் சிவப்பு நிறமாக மாறியுள்ளன. இந்த புகைப்படத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. #NASA #MarsDustStorm #CuriosityRover
    டெல்லியில் காற்று மாசு நான்காவது நாளாக உச்சக்கட்டமாக உள்ள நிலையில் இன்று குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் அளித்துள்ளது. #Delhiairquality #duststorm
    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் கடந்த மாதம் புழுதி புயல் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதனால் டெல்லியின் காற்று மாசு மிக அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர்.

    டெல்லியின் ஏற்கனவே காற்று மாசு அதிகமாக இருந்தது. தூசி மண்டலத்தால் சில சமயம் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை இருந்தது. இந்நிலையில், காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    பொதுவாக காற்றின் தரம் 500 க்குள் இருந்தால் அதிகப்படியான மாசு உள்ளதாக கருதப்படும். ஆனால் டெல்லியில் காற்றின் தரம் அதையும் தாண்டி 778 ஆக உள்ளது. காற்றில் சொரசொரப்பான துகள்கள் அதிக அளவில் உள்ளது. இது சாலையில் பார்க்கும் திறனை குறைக்கும். தொடர்ந்து நான்கு நாளாக இருக்கும் இந்த மாசு இன்று சரியாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிக வேகத்துடன் காற்று வீச உள்ளது. அதனால் இன்று மாலைக்குள் காற்று மாசுவின் தரம் குறைய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. #Delhiairquality #duststorm

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் புழுதி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. #UPRain #UPDustStorm
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெருமளவில் பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்த தொடர் மழை ஓய்ந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. 

    இதற்கிடையே, உ.பி.யின் சில மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதன்படி கோண்டா, பைசாபாத், சீதாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்று வீசியதால் சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன.

    இந்த புயல் மழை தொடர்பான விபத்துக்களில் கோண்டாவில் 3 பேரும், பைசாபாத்தில் ஒருவரும், சீதாப்பூரில் 6 பேரும் என நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், கவுஷாம்பியில் 3 பேரும், ஹர்தோய் மற்றும் சித்ரகூட் பகுதிகளில் தலா ஒருவரும் புழுதி புயலுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து, மழை மற்றும் புழுதி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 28 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். #UPRain #UPDustStorm
    வடமாநிலங்களில் ஏற்பட்ட புழுதி புயலினால் டெல்லியின் பல பகுதிகளில் காற்று மாசு உச்சக்கட்ட நிலையை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #duststorm
    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் கடந்த மாதம் புழுதி புயல் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதனால் டெல்லியின் காற்று மாசு மிக அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்தனர்.

    டெல்லியின் ஏற்கனவே காற்று மாசு அதிகமாக இருந்தது. தூசி மண்டலத்தால் சில சமயம் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை இருந்தது. இந்நிலையில், காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    பொதுவாக காற்றின் தரம் 500 க்குள் இருந்தால் அதிகப்படியான மாசு உள்ளதாக கருதப்படும். ஆனால் இன்று டெல்லியில் காற்றின் தரம் அதையும் தாண்டி 778 ஆக உள்ளது. காற்றில் சொரசொரப்பான துகள்கள் அதிக அளவில் உள்ளது. இது சாலையில் பார்க்கும் திறனை குறைக்கும். இந்த மாசு இன்று மாலைக்குள் சிறிது குறைய வாய்ப்புள்ளதாக வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. #duststorm
    செவ்வாய் கிரகத்தில் விரைவில் வீச இருக்கும் மாசு கலந்து புழுதி புயலினால் கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தில் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #NASA #MarsDustStorm #CuriosityRover

    வாஷிங்டன்:

    செவ்வாய் கிரகத்தில் தூசு புயல் வீசவுள்ளதாக நாசா தகவல் வெளியிட்டு உள்ளது. வட அமெரிக்க கண்டத்தை விடவும் விசாலமான பரப்பில் இந்த புயல் வீசவுள்ளது. சுமார் 18 மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள் வரை பரவக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தற்போது புயல் வீசுவதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அங்கு புயல் வீசும் என நாசா கூறியுள்ளது.



    இந்த புயலை செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வரும் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம் பிடிக்கும் எனவும், அந்த புயலினால் அதன் செயற்பாடுகளும் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #NASA #MarsDustStorm #CuriosityRover
    உ.பி., டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Thunderstorm #Ramnathkovind #RahulGandhi
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நேற்று மாலை மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கியது. இதனால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பல விமானங்கள் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டன.

    இந்த புழுதி புயலுக்கு உ.பி.யில் 18 பேரும், டெல்லியில் 2 பேரும், மின்னல் தாக்கியதில் மேற்கு வங்கத்தில் 12 பேரும், ஆந்திராவில் 9 பேரும் என மொத்தம் 41 பேர் பலியாகினர்.

    இதற்கிடையே, உ.பி., மேற்குவங்கம், ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தாக்கிய புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

    இந்நிலையில், உ.பி., மேற்குவங்கம், ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



    இதுதொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் கூறுகையில், நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் மழை மற்றும் புழுதி புயலுக்கு பலர் பலியானது வருத்தம் அளிக்கிறது. இதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறுகையில், மின்னல் தாக்கியதில் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கத்தில் 18 பேர் பலியானது அறிந்து வருந்தினேன்.
    பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிப்பு அடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சியினர் செய்ய வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். #Thunderstorm #Ramnathkovind #RahulGandhi
    உ.பி., மேற்குவங்கம், ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #Duststorm #PMModi
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நேற்று மாலை மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கியது. இதனால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பல் விமானங்கள் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டன. பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தன.

    உபியில் ஏற்பட்ட புழுதி புயலுக்கு 18 பேரும், மேற்கு வங்கத்தில் 4 குழந்தைகள் உள்பட 12 பேரும், ஆந்திராவில் மின்னல் தாக்கி 9 பேரும், டெல்லியில் 2 பேரும் என மொத்தம் 41 பேர் பலியாகினர்.



    இந்நிலையில், உ.பி., மேற்குவங்கம், ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தாக்கிய புழுதி புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மோடி டுவிட்டரில் கூறுகையில், நாட்டின் சில மாநிலங்களில் புழுதி புயல் தாக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், இதில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். #Duststorm #PMModi
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 26 மாவட்டங்களை மணிக்கு 70 கிமீ வேகத்தில் நாளை புழுதி புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #UPDustStorm

    லக்னோ:

    கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் புழுதி புயல் வீசி வருகிறது. இந்த புழுதி புயலினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதோடு,  பலர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 26 மாவட்டங்களை மணிக்கு 70 கிமீ வேகத்தில் நாளை புழுதி புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷ்ரவஸ்தி, பல்ராம்பூர், வாரனாசி, கோரக்பூர், பைசாபாத், அம்பேத்கர் நகர், அலகாபாத், மிர்சாபூர் உள்ளிட்ட மாவட்டங்களை புழுதி புயல் தாக்கும் என கூறப்பட்டுள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்தன் வாரம் வீசிய புழுதி புயல் காரணமாக 134 பேர் உயிரிழந்ததோடு, 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மே 9-ம் தேதி வீசிய புயலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #UPDustStorm
    ×