search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேராசிரியர் கைது"

    கோவையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒரு புகார் அளித்தார்.

    நான் கோவையில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த 2020-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. எனக்கு எனது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நான் அவரை 6 மாதத்தில் பிரிந்து எனது பெற்றோர் வீட்டில் இருந்தபடி கல்லூரிக்கு சென்று வந்தேன். கருத்துவேறுபாடு காரணமாக எனது கணவரை பிரிந்ததால் என்னால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக 2-ம் ஆண்டுக்கான திறன் மதிப்பீட்டு அறிக்கையை என்னால் சமர்ப்பிக்க முடியவில்லை.

    இதனையடுத்து எங்களது துறை தலைவர் பேராசிரியர் விளாங்குறிச்சி மதி நகரை சேர்ந்த ரகுநாதன் (வயது 42) என்பவர் அவரது அறைக்கு வருமாறு அழைத்தார். நான் அறைக்கு சென்ற போது எதற்காக அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என கேட்டார். அதற்கு நான் என்னுடைய குடும்ப சூழ்நிலையை எடுத்து கூறினேன். அதற்கு ஆறுதலாக பேசிய அவர் திடீரென என்மேல் கையை வைத்து தகாத முறையில் நடந்து கொண்டார். அதிர்ச்சியடைந்த நான் கையை தட்டி விட்டு வெளியே வந்து விட்டேன்.

    பின்னர் அவர் எனக்கு உதவி செய்வது போல அறிக்கையை நான் சமர்ப்பிப்பதற்காக நோட்ஸ் கொடுப்பது போல காரில் எனது ஊருக்கு வந்தார். அங்குள்ள சந்தை அருகே நான் நின்று கொண்டு இருந்தேன்.

    அப்போது அவர் இங்கு கூட்டம் அதிகமாக உள்ளது காரை நிறுத்த முடியாது எனவே காருக்குள் ஏறு என கூறினார். நான் ஏற மறுத்ததால் கையை பிடித்து இழுந்து காருக்குள் ஏற்றினார். பின்னர் காரில் வைத்து ஆறுதலாக வார்த்தைகள் பேசி என்னிடம் தவறாக நடக்க முயன்றார். மேலும் அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும், அவரது மனைவியை விவாகரத்து செய்து விடுவதாகவும் கூறினார். நான் மறுத்து சத்தம் போட்டு விடுவதாக கூறினேன்.

    இதனையடுத்து அவர் நடந்த சம்பவங்களை வெளியே சென்னால் கொலை செய்வதாக மிரட்டி விட்டு சூலூரில் என்னை இறக்கி விட்டு சென்றார்.அதன் பின்னர் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மூடப்பட்டதால் நான் நடந்த சம்பவங்களை வெளியே செல்ல முடியாமல் இருந்தேன். மீண்டும் நான் கல்லூரி சென்றதும் இது குறித்து எனது தோழிகளிடம் கூறினேன். அவர்களுக்கும் துறை பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர். எனவே பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    என அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

    மாணவி அளித்த புகாரின் பேரில் பேராசிரியர் ரகுநாதன் மீது கடத்தல், மானபங்கம்படுத்துதல், கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தர்மபுரி அருகே பிளஸ் 2 மாணவியை கடத்தி சென்ற உதவி பேராசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    தர்மபுரி:

    தர்மபுரியை அடுத்த குப்பூர் பகுதியில் உள்ள எஸ்.கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    சம்பவத்தன்று அவர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலையில் நீண்ட நேரமாகியும் மாணவி வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

    இதுகுறித்து மாணவி யின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கா ததால் மாணவி மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்தவரும் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் கோபாலகிருஷ்ணன் என்பவர் மாணவியை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாணவியை கடத்தி சென்ற உதவி பேராசிரியர் கோபால கிருஷ்ணனை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை போக்சோ சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்குபதிந்து போலீசார் கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து மாணவியை மீட்டு தொப்பூர் அருகே உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.

    கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவைச் சேர்ந்தவர் கவுசல்யா (வயது 26). இவருக்கும், ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரைச் சேர்ந்த காஞ்சித்தலைவன் (33) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது 40 பவுன் நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. காஞ்சித்தலைவன் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் காஞ்சித்தலைவன், அவரது தாயார் முனியம்மாள், சகோதரி தமிழ்செல்வி ஆகியோர் கவுசல்யாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

    இது குறித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் கவுசல்யா புகார் செய்தார். அதன் பின்னர் தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    போலீசார் சமரசம் செய்த பின்னரும் காஞ்சித் தலைவன் தனது வீட்டுக்கு மனைவியை அழைத்து வரவில்லை.

    இந்த நிலையில் காஞ்சித்தலைவன் தனது மனைவியின் வீட்டுக்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இது குறித்து ராஜபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரனிடம் கவுசல்யா புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா விசாரணை நடத்தி பேராசிரியரை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

    செய்யாறு அருகே மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள சாமந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் மணிகண்டன் (வயது 29). இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (28) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 வயதில் பெண் குழுந்தை உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் மகாலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

    சம்பவத்தன்று மணிகண்டன் மகாலட்சுமியிடம் மீண்டும் நகை, பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் மகாலட்சுமியை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

    இதுகுறித்து மகாலட்சுமி செய்யாறு அனைத்து மகளீர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மணிகண்டன், அவரது தந்தை சந்திரசேகர், நாராயணசாமி ஆகியோரை கைது செய்தனர்.

    ×