என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொது இடங்கள்"
- சாலையோர ‘பார்’களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- டாஸ்மாக் நிர்வாகம் நினைத்தால் ரோட்டில் மது அருந்துவது நிச்சயம் குறையும்.
சென்னை மாநகரில் பார்களை ஏலம் விடுவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் பார் உரிமையாளர்களுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினையால் பார்கள் மூடப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மாலை நேரங்களில் பார் களில் கூட்டம் அலை மோதும். குளிர்சாதன வசதிக்கொண்ட பார்கள் மற்றும் சாதாரண பார்கள் என இரண்டிலுமே மதுபிரி யர்கள் நிரம்பி இருப்பார்கள். பல மணி நேரங்களை பார் களிலேயே செலவழித்து... சில பாட்டில்களை உள்ளே தள்ளிவிட்டு 'ரிலாக்ஸ்' ஆக உற்சாகத்தோடு பொழுதை போக்கும் மது பிரியர்கள் பார்கள் மூடப்பட்டுள்ள தால் திண்டாடி வருகிறார் கள்.
பார்கள் மூடப்பட்டிருந்த போதிலும் டாஸ்மாக் மதுக் கடைகள் எப்போதும் போல திறக்கப்பட்டு வா... வா... என்று அழைப்பதால் குடி மகன்கள் கையில் பாட்டிலை வாங்கி வைத்துக்கொண்டு எங்கே போய் குடிப்பது? என தவிக்கும் நிலையே காணப் படுகிறது.
இதனால் சென்னையில் பல இடங்களில் சாலையில் நின்று மது குடிப்பது என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.
முகப்பேர் சர்ச் ரோடு, சூளைமேடு நெல்சன்மாணிக் கம் ரோடு, பழைய வண்ணா ரப்பேட்டை மேயர் பசுதேவ் தெரு, அடையாறு கெனால் பேங்க் ரோடு மற்றும் எழும் பூர் பகுதியில் உள்ள டாஸ் மாக் மதுக்கடை என சென்னை மாநகரில் அனைத்து கடைகள் முன்பும் நின்று கொண்டு மதுபிரியர்கள் குடித்து கும்மாளமடித்து வருகிறார் கள். கடைகளில் நின்று டீ குடிப்பது போல தெருக் களை பார்களாகவே நினைத்து ஹாயாக அமர்ந்து குடிமகன்கள் மது அருந்தி வருகிறார்கள்.
டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிவிட்டு சாலையோரமாக அமர்ந்து கொண்டு ரோட்டில் செல் லும் பள்ளி மாணவ-மாண விகள் மற்றும் குழந்தைகள் என யாரைப் பற்றியும் கவலைப்படாமல் 'சைடிஸ்' சகிதமாக உற்சாக பானத்தை உள்ேள தள்ளிவிட்டு ரோட்டில் போகிறவர்களை பார்த்து "இன்னாப்பா... மொறைக்கிற" என்று கேள்வி கேட்பதால் நமக் கெதுக்கு வம்பு என பலர் ஒதுங்கி செல்வதையும் பார்க்க முடிகிறது.
ரோட்டில் நின்று பொது மக்களுக்கு இடையூறாக மது அருந்துபவர்களை போலீ சார் எச்சரித்து விரட்டி விடுவது உண்டு. ஆனால் தற்போது அதுபோன்று எந்தவிதமான இடையூறும் செய்யப்படுவதில்லை.
இதனால் குடிமகன்கள் எந்தவித பயமோ... கூச்சமோ இன்றி பொதுவெளி யில் குடிப்பது அதி கரித்துக் கொண்டே செல்கிறது.இப்படி மதுஅருந்தும் குடி மகன்கள் ஊறுகாய் பாக் கெட், மிக்சர் பாக்கெட், சில்லி சிக்கன் என 'சைடிஸ்' களை உள்ளே தள்ளி விட்டு வெற்று கவர்களை ரோட்டி லேயே வீசிவிட்டு சென்று விடுகிறார்கள்.
அதேபோன்று காலி மது பாட்டில்களையும் ரோட்டி லேயே போட்டுவிட்டு சென்று விடுவதால் 'பார்' களில் குவிய வேண்டிய குப்பைகள் ரோட்டில் சேர்ந்து கொண்டிருக்கிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டு இது போன்ற சாலையோர 'பார்'களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் குடியிருப்பு வாசிகளும், குடும்பத்தோடு வெளியில் செல்பவர்களும் முகம் சுழிப்பதுடன் இந்த பிரச்சினைக்கு டாஸ்மாக் நிர்வாகத்தினர் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான அன்ப ரசனிடம் இந்த பிரச்சி னைக்கு தீர்வு தான் என்ன என்று கேட்டபோது, டாஸ் மாக் நிர்வாகம் நினைத்தால் ரோட்டில் மது அருந்துவது நிச்சயம் குறையும் என்றார்.
இதற்கு முன்பு 2014 மற்றும் 2021-ம் ஆண்டுகளி லும் இதுபோன்ற பிரச் சினை இருந்தது. அப்போது பார்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்பட்டு குடி மகன்கள் பார்களில் போய் குடித்தார்கள். இப்போதும் அதுபோன்று செய்யலாம் என்றார்.
குடிமகன்களின் திண் டாட்டத்துக்கு டாஸ்மாக் நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
- குப்பை மலை போல் குவிந்து கிடக்கிறது.
- ஊராட்சி நிர்வாகத்தினர் மாதக்கணக்கில் குப்பைகளை அகற்றுவதே இல்லை.
அவினாசி :
அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருவலூர்செல்லும் ரோட்டில்அப்பகுதியில் உள்ள வீடுகள், ஹோட்டல்கள், பேக்கரிகள், காய்கறி கடைகள் ஆகியவைகளில் இருந்து குப்பைகள், மற்றும் கழிவுகளை ரோட்டு ஓரங்கள் மற்றும் கோவில் பகுதிகளில் கொட்டிச் சென்று விடுகின்றனர். இதனால் கடுமையான துர்நாற்றமும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:- இப்பகுதியை சேர்ந்த அனைத்து குப்பைகளும் தினசரி இங்கு கொண்டு வந்து கொட்டப்படுவதால் குப்பை மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினர் மாதக்கணக்கில் குப்பைகளை அகற்றுவதே இல்லை. இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்துடன் கூறி யும் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை என்றனர்.
- பொது இடங்களில், போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனபோலீசார் அறிவித்துள்ளனர். .
- தமிழக முழுவதும் நகரப் பகுதி யில் விதிகளை மீறி பொது இடங்களில், போஸ்டர் ஒட்டி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது
கடலூர்:
பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி பொது இடங்களில், போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனபோலீசார் அறிவித்துள்ளனர். இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கூறியிருப்பதாவது:- சென்னை உள்ளிட்ட தமிழக முழுவதும் நகரப் பகுதி யில் விதிகளை மீறி பொது இடங்களில், போஸ்டர் ஒட்டி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
எனவே பண்ருட்டி நகர பகுதியில் விதி களை மீறி யாரும் போஸ்டர், டிஜிட்டல் பேனர் ஆகியவை வைக்க கூடாது. இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர் தேர்வில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மதுரையைச் சேர்ந்த வக்கீல் ரமேஷ், மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில வருடங்களாக தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.
2014 பாராளுமன்ற தேர்தலின்போது அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக செய்திகள் வெளியாகின. அதே போல 2016-ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.
பணம் பட்டுவாடா செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் தவறிவிட்டது. 2016 சட்டசபை தேர்தலின்போது சுமார் 750 கோடி வரை கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதே குற்றச்சாட்டை முன் வைத்து அப்போது நடக்க இருந்த தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதி தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டன. இந்த நிலை வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் தொடரலாம்.
எனது மனுவின் அடிப்படையில் பணம் பட்டுவாடா செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், கணக்கில் வராத பணம் பிடிபட்டால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்றும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் பிரசாரத்தையொட்டி பொது இடங்களில் அரசியல் கட்சிகள், பிளக்ஸ் போர்டுகள் மற்றும் பேனர்கள் வைக்கவும் தடை விதிக்க வேண்டும்.
பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுகளால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட கட்சிகளிடமோ, கட்சி தலைவர்களிடமோ தேர்தல் செலவுகளை வசூலிக்க உத்தரவிட வேண்டும்.
மேற்கண்டவாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
தேர்தல் பிரசாரத்தின்போது நடைபெறும் பொதுக்கூட்டங்களுக்கு பஸ்கள், கார்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் மொத்தமாக பொதுமக்களை அழைத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
இதேபோல் பொது இடங்களில் கட்-அவுட், பேனர்கள் வைக்கவும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் ஓட்டுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டுக்கு ஆளான கட்சியின் வேட்பாளர், தலைவரிடம் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிடப்படுகிறது.
அவர்கள் இதுகுறித்து பதில் அளிக்க விசாரணை 21-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். #HighCourtMaduraiBench #ParliamentElection
விழுப்புரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ அல்லது முக்கிய பிரமுகர்களுக்கோ உரிய முன் அனுமதி இல்லாமல் சிலைகள் நிறுவ உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதையும் மீறி பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமாகவும் எவரேனும் முன் அனுமதி பெறாமல் அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து சிலை அமைப்பது சட்டப்படி குற்றமாகும்.
விழுப்புரம் மாவட்டத்தில் பொதுஅமைதியை குலைக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமாகவும், எவரேனும் உரிய அனுமதி பெறாமல் அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் சட்டத்தை மிறும் வகையில் அரசியல் தலைவர்களுக்கு சிலைவைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சிலையை நிறுவ முற்படுவோர் மட்டுமின்றி, உரிய அனுமதியின்றி சிலையை உருவாக்கும், வடிவமைக்கும் நபர்கள் மீதும் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்