search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போராட்டம் வாபஸ்"

    ஆசியா பீவி விடுதலைக்கு எதிராக போராட்டம் நடத்திய டிஎல்பி கட்சியினருடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. #AsiaBibi #TLPCallsOffProtest
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை (வயது 47) உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தீவிர மதபற்றாளர்கள் பலர், அசியாவுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    ஆசியா பீவியும் அவரது குடும்பத்தினரும் தற்போது பாகிஸ்தானில் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேறு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வரும் இஸ்லாமிய கட்சியான தெஹ்ரீ-இ-லப்பாயிக் பாகிஸ்தான் (டிஎல்பி) கட்சி நிர்வாகிகளுடன் நேற்று இரவு அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வெளியாகும் வரை ஆசியா பீவியை நாட்டை விட்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என தெஹ்ரீ-இ-லப்பாயிக் பாகிஸ்தான் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். சீராய்வு மனுவுக்கு அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.



    இந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டதையடுத்து, 5 அம்சங்கள் கொண்ட உடன்படிக்கையில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.  பேச்சுவார்த்தையின் முடிவில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தர்ணா போராட்டத்தை திரும்ப பெறுவதாக டிஎல்பி கட்சி அறிவித்தது. போராட்டம் நடத்தி வரும் தொண்டர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசெல்லும்படி கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.

    மறு சீராய்வு மனு விசாரணை முடியும்வரை, நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் (இசிஎல்) ஆசியா பீவி பெயரை அரசு சேர்ப்பதற்கான நடவடிக்கையை அரசு உடனே எடுக்கும். #AsiaBibi #TLPCallsOffProtest
    பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தை தூர்வாரி தூண்டில் வளைவுகள் அமைக்கக் கோரி போராட்டம் நடத்திய மீனவர்கள் தங்கள் போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர். #Pazhaverkadu #FishermenProtest
    பொன்னேரி:

    பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார வேண்டும், அங்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் நேற்று படகில் கருப்புக் கொடி காட்டியபடி முகத்துவாரத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் முகத்துவார பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டத்தைக் கைவிட மறுத்தனர். அமைச்சர் மற்றும் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர்.

    இரண்டாவது நாளாக இன்றும் பழவேற்காடு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் குடும்பத்துடன் பழவேற்காடு பஜாரில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பழவேற்காடு, ஆரம்பாக்கம், கோட்டை குப்பம், வைரங்குப்பம், கரிமணல், பசியாவரம் உள்ளிட்ட 100 கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இதையடுத்து மீனவர்களிடம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி பேச்சுவார்த்தை நடத்தினார். முகத்துவாரத்தை தூர்வார அரசிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். இதையடுத்து மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    மீனவர்கள் போராட்டத்தினால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. கடைகள் அடைக்கப்பட்டன. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். #Pazhaverkadu #FishermenProtest
    திண்டுக்கல்லில் கவர்னருக்கு எதிராக தி.மு.க.வினரின் கருப்புக் கொடி போராட்டம் திடீரென வாபஸ் பெறப்பட்டது. #DMK #TNGovernor #BanwarilalPurohit
    திண்டுக்கல்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 2 நாள் பயணமாக நேற்று திண்டுக்கல் வந்தார். காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்று விட்டு மாலையில் பழனி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    இன்று அரசின் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே கவர்னர் வருகைக்கு எதிராக தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்த தயார் நிலையில் இருந்தனர். இதற்காக நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு கவர்னருக்கு எதிராக போராட்டம் செய்பவர்களை கைது செய்யவும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    ஆனால் கவர்னரின் வருகை மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பார்வையிடுவதற்காக மட்டுமே என்றும் கள ஆய்வு நடத்த வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் தி.மு.க.வினர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதனால் போலீசார் நிம்மதியடைந்து மண்டபத்தை விட்டு வெளியேறினர். மேலும் போராட்டம் நடத்த இருந்த இடத்தில் வைக்கப்பட்டு இருந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்டன. #DMK #TNGovernor #BanwarilalPurohit
    ×