என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மதுரை விபத்து"
கொடைக்கானல் மலையில் கார் கவிழ்ந்த விபத்தில் மதுரை சமயநல்லூர் அருகே உள்ள தேனூரைச் சேர்ந்த வக்கீல் கோகுலின் மனைவி நந்தினி பாரதி, 3 மாத கைக்குழந்தை தனயாழினி, மாமியார் அழகுராணி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
வக்கீல் கோகுலுக்கும், தேனி மாவட்டம் சுப்புலாபுரம் சத்யா நகரைச் சேர்ந்த பால்ராஜ் மகள் நந்தினி பாரதிக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
நந்தினி பாரதி சுப்புலாபுரத்தில் உள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தில் வேளாண்மை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு தான் பெண் குழந்தை பிறந்தது.
தீபாவளிக்காக கோகுல் மனைவி மற்றும் குடும்பத்துடன் மாமனார் வீட்டுக்குச் சென்றார். பின்னர் அவர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய போது தான் கார் கவிழ்ந்து 3 பேரும் பலியாகி விட்டனர்.
இந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் ஹீப்ளி பகுதியை சேர்ந்தவர் நிங்கப்பா. இவரது மகன்கள் அபிஷேக்குமார் (வயது 19), ஆதர்ஷ்(18). இவர்கள் இருவரும் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக தனித்தனி மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டனர்.
நேற்று மதுரை வந்த அவர்கள் நெல்லை செல்வதற்காக மதுரை- திருப்பரங்குன்றம் ரோட்டில் சென்றனர். பசுமலை அருகே உள்ள விபூதி விநாயகர் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி ஆதர்ஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ஆதர்ஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைப்பார்த்த அபிஷேக் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதது பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம் மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், பெயிண்ட் கடை அதிபர். இவரது மகன் சுரேஷ்குமார் (25).
சகோதரர் திருமண பத்திரிகை கொடுப்பதற்காக சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் விருதுநகர் சென்றார். அவருடன் கல்லூரி மாணவரான பிருத்விராஜ் (19) என்பவரும் சென்றார்.
கள்ளிக்குடி 4 வழிச்சாலையில் சென்றபோது மதுரையில் இருந்து சிவகாசி நோக்கிச் சென்ற கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் சுரேஷ் குமார் மற்றும் பிருத்வி ராஜ் தூக்கி வீசப்பட்டனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்க முயன்றனர். ஆனால் பலத்த காயமடைந்த சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
பிருத்விராஜ் காயத்துடன் மீட்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவகாசியைச் சேர்ந்த கார் டிரைவர் முத்துகிருஷ்ணனை கைது செய்தனர்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் நாகப்பன். இவரது மகள் ஜோதி (34). இவர் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வந்தார்.
நேற்று நள்ளிரவு ஜோதி, தனது உறவினர்கள் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சத்தியவாணி (44), அவரது மகள் சூர்யகலா (20) ஆகியோருடன் ஒரே மொபட்டில் வெளியே புறப்பட்டார்.
டி.பி.கே. ரோட்டில் உள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது நெல்லையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த ஆம்னி பஸ் தாறுமாறாக ஓடி முன்னாள் சென்று கொண்டிருந்த ஜோதி ஓட்டிவந்த மொபட் மீது மோதியது. அதே வேகத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீதும் ஆம்னி பஸ் மோதியது. இதில் மொபட், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
விபத்தில் ஜோதி, சத்திய வாணி, சூர்யகலா மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த ஆனந்தன் 28, விக்னேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதில் சம்பவ இடத்திலேயே ஜோதி, சத்தியவாணி, ஆனந்தன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சூர்யகலா, விக்னேஷ் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இன்று காலை சிகிச்சை பலனின்றி சூர்யகலா பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து இந்த விபத்தில் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விக்னேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் பலியான சத்தியவாணி விருதுநகர் நகராட்சி அலுவலகத்திலும், ஆனந்தன் மதுரையில் உள்ள ஜவுளிக்கடையிலும் வேலை பார்த்து வந்தனர்.
விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#MaduraiAccident
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீழப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜபாண்டி (வயது 27).
அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் தினேஷ் (28). இவரும் ராஜபாண்டியும் சென்னை ஆயுதப்படையில் காவலர்களாக உள்ளனர். திருமண விழாவில் பங்கேற்பதற்காக 2 பேரும் விடுமுறையில் ஊருக்கு வந்தனர்.
நேற்று 2 பேரும் மோட்டார்சைக்கிளில் மதுரை சென்று திருமண விழாவில் பங்கேற்றனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பினர்.
செக்கானூரணி அருகே புளியங்குளம் பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது. அதே வேகத்தில் எதிர் திசையில் வந்த காரின் மீதும் மோதியது.
இந்த விபத்தில் ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த தினேஷ், சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ராஜபாண்டியின் தாயார் அங்கம்மாள் (63) அதிர்ச்சி அடைந்தார். சோகத்தில் இருந்த அவர் நள்ளிரவில் இறந்தார். மகன் பலியான அதிர்ச்சியில் தாயும் இறந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. பஸ்சை கன்னியாகுமரியை சேர்ந்த அய்யப்பன் என்பவர் ஓட்டினார். பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
இன்று காலை மதுரை மாவட்டம் மேலுர் 4 வழிச்சாலையில் ஆம்னி பஸ் வந்து கொண்டு இருந்தது. வஞ்சிநகர் என்ற பகுதியில் வந்த போது ஆம்னிபஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டோர வயலுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதனால் பஸ்சில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மேலுர் சுங்கச்சாவடி மீட்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் குழுவினர் விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பெண்கள் உள்பட 20 பேரை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
செல்லும் வழியிலேயே சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சாமிகண்ணு மகன் மதன் (வயது 28) என்பவர் பரிதாபமாக இறந்தார். இவர் ஐ.டி. ஊழியர் ஆவார். மேலும் டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார்.
படுகாயமடைந்த மற்ற 19 பேர் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆபத்தான நிலையில் இருந்த சிலர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)சங்கீதா, தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கொட்டாம்பட்டி அருகே உள்ள வெள்ளாளப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் செல்லம் (வயது 58). கோழி வியாபாரி. இவர் சிலம்புத்தேவன் (50) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோழிகளை ஏற்றிக்கொண்டு சிங்கம்புணரிக்கு இன்று காலை புறப்பட்டார்.
காரியேந்தல்பட்டி என்ற பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்றபோது பின்னால் ஒரு வேன் வந்தது. அந்த வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட செல்லம் பலத்த காயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முயன்றனர்.
ஆனால் அதற்குள் செல்லம் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, ஏட்டு சுரேஷ் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன் டிரைவர் திண்டுக்கல் ரவி வர்மாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் மாரணி பகுதியைச் சேர்ந்தவர் கூத்தபெருமாள் (வயது 40). இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார்.
இன்று அதிகாலை அவனியாபுரம் அருகே உள்ள வலையங்குளத்தில் ஆட்டுக்கிடை அமைப்பதற்காக தனது ஆடுகளை ஓட்டிச்சென்றார். பெருங்குடி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராத விதமாக ஆடுகளின் மீது மோதியது.
இதில் 40 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தன. இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.
மேலும் மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற கூத்த பெருமாள் மீதும் அந்த வாகனம் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.
திருமங்கலம் கலை நகரைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் கணேஷ்குமார் (வயது 32). இவர் மதுரை கோச்சடையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். தினமும் மொபட்டில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
நேற்று இரவு கணேஷ்குமார் வேலையை முடித்துவிட்டு ஹெல்மெட் அணிந்து கொண்டு மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார்.
கப்பலூர் மேம்பாலம் இறக்கத்தில் சென்று கொண்டிருந்த போது மொபட் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதே வேகத்தில் அந்த வழியாக சென்ற லாரி மீது மொபட் மோதியது. இதில் கணேஷ்குமார் கீழே விழுந்தார்.
அப்போது லாரியின் டயர் அவர் தலையில் ஏறி இறங்கியது. இதில் ஹெல்மெட் உடைந்து கணேஷ்குமார் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம் அருகே உள்ள தோப்பூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). இவர் கப்பலூரில் உள்ள சிட்கோவிலில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.
4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த கண்ணன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கண்ணன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பி.எச்.நகரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் ரவீந்திரகுமார் (வயது22).கடந்த வருடம் கல்லூரி படிப்பை முடித்த இவர், நேதாஜி ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று விருதுநகரில் உள்ள நண்பரின் குலதெய்வ கோவிலில் திருவிழா நடந்தது. இதில் பங்கேற்பதற்காக ரவீந்திரகுமார் தனது நண்பர் மாடக்குளத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சஞ்சீவ்ராஜ் (22) என்பவருடன் மோட்டார் சைக்களில் சென்றார்.
இன்று காலை இருவரும் மதுரைக்கு புறப்பட்டனர். திருமங்கலம் 4 வழிச்சாலையில் உள்ள மையிட்டான்பட்டி பகுதியில் சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயம் அடைந்த ரவீந்திரகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய சஞ்சீவ்ராஜை மீட்டு அப்பகுதியினர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை:
மதுரை பெரியார் பஸ் நிலையத்துக்கு இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க மூதாட்டி வந்தார். அவர் அங்கிருந்து ரெயில் நிலையம் செல்வதற்காக எல்லீஸ் நகர் மேம்பாலத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது கோவில் பாப்பாகுடியில் இருந்து பெரியார் பஸ் நிலையத்துக்கு அதிவேகமாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரிய வில்லை.
விபத்து பற்றி அறிந்ததும் கரிமேடு போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த மூதாட்டி யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ளது வன்னி வேளாம்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆடிமாத வழிபாட்டிற்காக காரைக்கேணி அருகே உள்ள உடமரம் முனியாண்டி கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டனர். அதன்படி 50-க்கும் மேற்பட்டோர் வேனில் புறப்பட்டனர்.
கோவிலில் இன்று காலை தரிசனம் முடித்தபின்னர் சிலர் பாரிவேட்டைக்கு வேனில் கிளம்பினர்.
காரைக்கேணி என்ற இடத்தில் வேன் சென்ற போது எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் டி.கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் வன்னி வேளாம்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் மணிக்குமார் (வயது 17) சம்பவ இடத்திலேயே பலியானார்.
அதே ஊரைச் சேர்ந்த சதீஷ்குமார் (25), அருள் பாண்டி (28), டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த மணி (20), முருகன் (38), மணிகண்டன் (18), மாரிகண்ணன் (21) உள்பட 20 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சதீஷ்குமார், அருள்பாண்டி, மணி, முருகன் ஆகிய 4 பேரும் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்