என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மளிகை கடையில் கொள்ளை"
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் 26-வது வட்டம் பாய்லர் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). இவர் நெய்வேலி சூப்பர் பஜார் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையில் வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு கணேசன் வெளியூருக்கு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த மளிகை பொருட்கள் உள்பட பல பொருட்களை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
மறுநாள் காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கணேசன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர். பின்னர் இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அவர் வெளியூரில் இருந்து நெய்வேலிக்கு வந்தார். கடைக்கு சென்று கணேசன் பார்த்த போது கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கொள்ளைபோய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொள்ளை போன மளிகை பொருட்களின் மதிப்பு ரூ.5 ஆயிரம் ஆகும்.
பின்னர் இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் கணேசன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
திருச்செந்தூர் மெயின் ரோட்டில் இரும்பு ஆர்ச் அருகே ஒரு மளிகை கடை உள்ளது. இந்த கடையை திருச்செந்தூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடித்து கடையை வழக்கம்போல பூட்டி சென்றனர்.
இன்று அதிகாலை ராதாகிருஷ்ணனின் மகன் சீதாராமன் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பக்க சுவரில் ஜன்னல் அருகே சுவரில் பெரிய துளை போடப்பட்டிருந்ததை பார்த்தார். சந்தேகம் அடைந்த சீதாராமன் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் மேஜையில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கபணம் ஆகியவை கொள்ளைபோயிருந்தன.
அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் கடையின் சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்து நகை -பணத்தை அள்ளிச்சென்றது தெரியவந்தது. இதுபற்றி திருச்செந்தூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.
24 மணி நேரமும் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த திருட்டு சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை நடந்த மளிகை கடையின் அருகே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதில் திருட்டு கும்பல் குறித்த காட்சிகள் பதிவாகியிருக்கிறதா என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்