என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மில் தொழிலாளி பலி"
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள கொசவபட்டியை சேர்ந்தவர் தனராஜ் (வயது55). வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். நேற்று வேலைக்கு சென்ற தனராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த ஊழியர்கள் அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எவ்வாறு இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகில் உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் காமாட்சி(85). திருப்பூரில் வேலை பார்த்து வந்தார்.
ஓட்டு போடுவதற்காக சொந்த ஊருக்கு வந்த அவர் இன்று காலை மீண்டும் ஊருக்கு செல்வதற்காக பழனிரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் காமாட்சி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ரெட்டியார் சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம்(வயது 24). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை.
சண்முகம் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
திருநகர் காலனி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக சண்முகம் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சண்முகம் மோட்டார் சைக்கிள் நொறுங்கியது. பலத்த காயம் அடைந்த சண்முகம் உயிருக்கு போராடினார்.
இது குறித்து கருங்கல் பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சண்முகம் நள்ளிரவு 1.30 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்