search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்களுக்கு எச்சரிக்கை"

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் வருகிற 26-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

    27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 °-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°- 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று முதல் 28-ந்தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • இன்று முதல் 5 நாட்கள் லேசான மழை பெய்யக் கூடும்.
    • இரவில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும்.

    சென்னை:

    தென்னிந்திய பகுதி களின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று முதல் 5 நாட்கள் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

    தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் இன்று வீசக் கூடும். நாளை (13-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை சூறாவளிக் காற்றுடன் கடல் சீற்றமும் ஏற்படும். அதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இதற்கிடையில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

    சென்னை அருகே உருவாகியுள்ள பேத்தாய் புயலால் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #PethaiCyclone #IMD
    சென்னை:

    தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று காலை புயலாக மாறியது.

    இந்த புயலுக்கு நாடுகள் வரிசைப்படி தாய்லாந்து ‘பேத்தாய்’ என பெயர் சூட்டி உள்ளது.

    மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கில் 730 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் 930 கி.மீ. தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 470 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டு உள்ளது.

    இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் (16-ந்தேதி) தீவிர புயலாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு, திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகரும்.

    நாளை மறுநாள் (17-ந்தேதி) மாலை ஆந்திராவின் கடலோர பகுதியான ஓங்கோலுக்கும் காக்கிநாடாவுக்கும் இடையே கரையை கடக்கிறது.


    இதன் காரணமாக சென்னை மற்றும் வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்று பரவலாகவும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும். நாளை பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    புயல் ஆந்திரா நோக்கி நகர்வதால் சென்னைக்கு புயல் ஆபத்து நீங்கியது என்றாலும் நாளை தீவிர புயலாக மாறுவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா போன்று ‘பேத்தாய்’ புயலும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் கரையை கடந்த போது 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அதுபோல் பேத்தாய் புயலும் ஆந்திராவில் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று மாலை வடதமிழகம், புதுவை கடலோர ஆந்திராவில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். 16-ந்தேதி 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 100 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும். நாளை வட தமிழகத்தில் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசும், 17-ந்தேதி 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சம் 100 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    புயல் கரையை கடந்த பின்பு தீவிரம் குறைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி 18-ந்தேதி ஒடிசா கடற்கரை நோக்கி செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வட தமிழகத்துக்கு 18-ந்தேதி மழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

    சென்னையில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவில் கடல் காற்று பலமாக வீசத் தொடங்கியது. லேசாக மழை தூறியது. இன்றும் அதே நிலை நீடித்தது. எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. காற்று மட்டுமே பலமாக வீசி வருகிறது. #PethaiCyclone #IMD
    தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுவதால் வருகிற 15, 16-ந்தேதிகளில் சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர பகுதியில் மிக பலத்த மழை பெய்யும். #Rain #IMD
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்துள்ளது.

    இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக (புயலாக) மாறி நாளை சென்னை மற்றும் வடதமிழகம் நோக்கி நகரத் தொடங்கும்.

    அடுத்த 48 மணி நேத்தில் இது வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும்.

    இதன் காரணமாக வருகிற 15-ந்தேதியும், 16-ந்தேதியும் 2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர பகுதியிலும், தெற்கு ஆந்திராவிலும் பலத்த மழையும், ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யும். குறைந்த நேரத்தில் அதிக அளவில் மழை கொட்டும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை முதல் தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வரையும் அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்திலும் கடல் காற்று வீசும்.

    தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடலில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வரையும், அதிகபட்சமாக 80 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பும்.

    எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.



    இன்றைய நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்தமானது நாளை புயலாகவும், பின்னர் தீவிர புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது.

    15-ந்தேதி காலை சென்னையை நெருங்கும், 16-ந்தேதி ஆந்திரா நோக்கி நகரும். 17-ந்தேதி அதிகாலை நெல்லூருக்கும், விசாகபட்டினத்துக்கும் இடையே மசூலிப்பட்டனம் அருகே கரையை கடந்து வலுவிழந்து காற்றழுத்த மண்டலமாக மாறும் என்று தனியார் வானிலை இணைய தளங்கள் தெரிவித்துள்ளன.

    அதன்பிறகு தென்கிழக்கு வங்கக்கடலில் வருகிற 19-ந்தேதி புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தமிழக கடற்கரை பகுதியில் நிலவும் என்றும், இதன் மூலம் தமிழகத்துக்கு பரவலாக மழை கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. என்றாலும் காற்றின் போக்கால் வானிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. #Rain #IMD
    தொடர் கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சட்டக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #HeavyRain #AnnaUniversity #MadrasUniversity
    சென்னை:

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அவ்வப்போது பரவலாக மழை பெய்து வந்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைந்திருப்பதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது. 

    இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள்பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. வருகிற 23-ந்தேதி வரை மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 



    தொடர் மழை காரணமாக இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக  துணைவேந்தர் துரைசாமி அறிவித்துள்ளார்.

    நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகளில் இன்றும், நாளையும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் அரசு சட்டக் கல்லூரி மற்றும் சீர்மிகு சட்டக் கல்லூரியில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #HeavyRain #AnnaUniversity #MadrasUniversity 

    தென்மேற்கு வங்க கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலைகொண்டு இருப்பதால் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #NorthEastMonsoon #HeavyRain
    சென்னை:

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அவ்வப்போது பரவலாக மழை பெய்து வந்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைந்திருப்பதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது. 

    இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள்பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. வருகிற 23-ந்தேதி வரை மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    சென்னையில் விடிய விடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், நாமக்கல் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



    அதேபோல், வேலூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுப்பு அளிக்கப்படுவதாக பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

    கஜா புயல் பாதிப்பால், சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகை கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    அதேபோல், திருவாரூரில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #NorthEastMonsoon #ChennaiRain #HeavyRain #Schools #Holiday

    கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. #rain #fishermen

    கடலூர்:

    வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறுவதால் கடலூர், விழுப்புரம் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் 2 நாட்கள் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது. கடலூர், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, விருத்தாசலம் போன்ற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. காட்டுமன்னார் கோவிலில் அதிக மழை பெய்தது.

    ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கள்ளிப்பாடி, காவனூர், தேத்தாம்பட்டு, புதுக்குப்பம், மதகளிர் மாணிக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வாக்காரமாரி பகுதியில் குன்னத்து ஏரி முற்றிலும் நிரம்பியது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இன்று காலையிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. கடலூர் நகரிலும் மழை தூறிக்கொண்டே இருந்தது.

    கடலூர் தேவனாம்பட்டிணம், தாழங்குடா உள்ளிட்ட கடலோர கிராமங்களில் நேற்று மாலை கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகள் ஆக்ரோ‌ஷத்துடன் பொங்கி எழுந்தன. சுமார் 5 அடி உயரத்துக்கு அலைகள் சீறி பாய்ந்தன.

    இதையடுத்து மீனவர்கள் கரையோரம் நிறுத்திவைத்திருந்த தங்களது பைபர் படகு மற்றும் கட்டுமரம், மீன்பிடி வலைகள் ஆகியவற்றை மேடான இடத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். கடல் கொந்தளிப்பு மற்றும் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று மாலை பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது. நள்ளிரவுவரை மழை தூறிக்கொண்டே இருந்தது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.


    காலை 9 மணி அளவில் மரக்காணம், அனுமந்தை, கூனிமேடு, கீழ்புத்துப்பட்டு, பிரம்மதேசம் போன்ற இடங்களில் பலத்த மழை பெய்தது. 1 மணி நேரம் பெய்த மழையால் ரோட்டில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.

    விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இன்றும் கடல் பகுதியில் சீற்றமும், கொந்தளிப்பும் அதிக அளவு காணப்பட்டது. இதனால் வசன்குப்பம், கைப்பானிக்குப்பம், எக்கியார்குப்பம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று 2-வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.  #rain #fishermen

    கஜா புயல் காரணமாக மழை சார்ந்த பல்வேறு விபத்துகளில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். #GajaCyclone #Gajastorm #GajaCycloneAlert
    தஞ்சாவூர்:

    கஜா புயல் நாகப்பட்டிணம் மாவட்டம் அதிராம்பட்டிணத்தை 111 கி.மீ வேகத்தில் தாக்கி, தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் தனது ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது. புயல் காரணமாக உள்மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. 

    நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கஜா புயல் தாக்கியதில் பல இடங்களில் மரங்கள் வேரோடு முறிந்துவிழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை சார்ந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மின்வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் ஆனந்தன் (40) என்பவர் உயிரிழந்தார்.

    விருத்தாச்சலம் அருகே தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் அய்யம்மாள் (45) என்பர் உயிரிந்தார். அய்யம்மாளின் கணவர் ராமச்சந்திரன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சிவகொல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷ், சதீஷ், அய்யாதுரை, தினேஷ் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர்.



    அதிராம்பட்டிணத்தில் வீடு இடிந்து 3 வயது பெண் குழந்தையும், திருவண்ணாமலை நகராட்சி செய்யாறு அருகே பிரியாமணி என்ற சிறுமியும், சிவகங்கையில் வீடு இடிந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

    கஜா புயல் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டிணம், கடலூர் மாவட்டங்களில் புயல் தாக்கிய பகுதிகளை சேர்ந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #GajaCyclone #Gajastorm #GajaCycloneAlert

    தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் பதம்பார்த்த நிலையில், தொடர் மழை காரணமாக 18 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Gajastorm #GajaCycloneAlert
    கஜா புயல் நாகப்பட்டிணம் மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் 111 கி.மீ வேகத்தில் தமிழகத்தை தாக்கி, கரையை கடந்து வரும் நிலையில் உள்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை  மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    நாகப்பட்டிணம், கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனி, தஞ்சாவூர், திருப்பூர், சிவகங்கை, அரியலூர், விழுப்புரம், கரூர், சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



    விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். #GajaCyclone #Gajastorm #GajaCycloneAlert 

    கஜா புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறினார். #Gaja #Storm #ChennaiRain
    சென்னை:

    அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இன்று காலை அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரம் அடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கஜா புயல் வருகின்ற 15-ந்தேதி (வியாழக்கிழமை) முற்பகல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிமை மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவிக்கையில் ‘‘தற்போதைய நிலையில் சென்னையில் 930 கிலோ மீட்டர் தொலைவில் கஜா புயல் உள்ளது. வருகிற 15-ந்தேதி முற்பகல் கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும். அப்போது காற்று 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

    சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் 14-ந்தேதி இரவில் இருந்தே மழை பெய்ய ஆரம்பிக்கும். சில இடங்களில கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தற்போது 13 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இது பின்னர் மாறுபடலாம்’’ என்று கூறி உள்ளார்.

    இந்நிலையில் கஜா புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என்று சத்யகோபால் கூறினார்.



    ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்களுக்கு கடலோர பாதுகாப்புப்படை மூலம் அறிவுறுத்துவோம் என்றும், கடலோர மாவட்ட மக்களுக்கு உரிய நேரத்தில் தகவல் அளித்துக்கொண்டே இருப்போம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்தார். #Gaja #Storm #ChennaiRain

    அரபிக்கடலில் உருவான லூபன் புயல் நாளை பிற்பகல் ஏமன் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Luban #ArabianSea
    புதுடெல்லி:

    கேரளா அருகே அரபிக்கடலில் கடந்த வாரம் உருவான ‘லூபன்’ புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் ஓமன் நாட்டு கடற்கரை நோக்கி நகர்ந்தது.

    லூபன் புயல் மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்வதால் ஓமன் கடற்கரையை அடைய தாமதம் ஏற்படும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

    இன்று காலை மேற்கு மத்திய அரபிக்கடலில் ஓமன் நாட்டின் சலாபா நகருக்கு கிழக்கு தென் கிழக்கே 410 கி.மீ. தொலைவிலும், ஓமன் நாட்டின் சோகோட்ரா தீவில் இருந்து கிழக்கு வடகிழக்கே 410 கி.மீ. தொலைவிலும், ஏமன் நாட்டின் அல் கைதாக் நகருக்கு கிழக்கு தென் கிழக்கே 550 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    கோப்புப்படம்

    அதிதீவிர லூபன் புயல் நாளை பிற்பகல் ஏமன் நாட்டில் கரையை கடக்கும். அப்போது மணிக்கு 100 கி.மீ. முதல் 125 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும்.  பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.  #Luban #ArabianSea
    வருகிற 7-ம் தேதி அதீத கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #TNRain #TNRedAlert
    புதுடெல்லி :

    தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் (5-ந்தேதி) குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

    தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், அதன் பிறகு மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் வரும் 7-ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுமார் 25 செ.மீ அளவு மழை பெய்யும் என பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனர் சத்திய கோபால் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படியும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    குறைந்த நேரத்தில் மிக அதிகளவு கனமழை பெய்வதையே ரெட் அலர்ட் என அழைக்கப்படுகிறது. வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என்பதால் மக்கள் அபாயகரமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட போது மிக கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது#TNRain #TNRedAlert
    ×