search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் மாணவர்கள்"

    • நாச்சிகுளம் அரசு பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
    • பள்ளிக்குத் தேவையானதை முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் செய்து தரப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், நாச்சிகுளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் டாக்டர் கந்தசாமி தலைமையிலும், தலைமை ஆசிரியர்தமிழ்செல்வன், பிடிஏ தலைவர் தாஹிர், மேலாண்மை குழு தலைவர்செந்தில்குமாரி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

    முன்னாள் மாணவர் சங்க செயலாளர்தாஜுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக தலைவர் டாக்டர் கந்தசாமி, துணைத்தலைவர்கள் தனுஷ். பாண்டியன், ஜாகிர் உசேன், செயலாளர்தாஜுதீன், துணை செயலாளர்க ள்குருநாதன், சத்யா, பொருளாளர்ஜான் முகமது, ஆலோசகர்களாக ஜெயசீலன், சோமசுந்தரம், தங்கராஜன், சேக்அலாவுதீன், சாகுல் ஹமீது, இர்பான்அலி, செயற்குழு உறுப்பினர்களாக தமிழ்ச்செல்வன், கணேசன், சுந்தரபாண்டியன், முருகானந்தம், செந்தில்குமாரி, அமீன், அபிராமி,காவியா ,அப்துல் ரகுமான், பாசிலன் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இக்கூட்டத்தில், அலாவுதீன் ,ஆனந்த், ராஜலட்சுமி உட்பட முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பள்ளிக்குத் மிக அவசியமான தேவைகளை முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் செய்து கொடுப்பது என்றும் வரும் ஆகஸ்ட் மாதம் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்து முன்னாள் மாணவர்கள் குடும்ப விழா நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிக்கு உதவி செய்யுங்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Governmentschool #Sengottaiyan

    சென்னை:

    அமைச்சர் செங்கோட்டையன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாணவர்கள் அனைவருக்கும் சிறந்த கல்வியைத் தந்து, அதன் மூலமாக அவர்களின் எதிர்காலத்தை, பிரகாசமான எதிர்காலமாக மாற்றுவதற்காக, ஜெயலலிதா 14 வகையான பொருட்களை விலையில்லாமல் மாணவச்செல்வங்களுக்கு வழங்கி, பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு சீர்த் திருத்தங்களை மேற் கொண்டதால், மற்ற மாநிலங்களும், மத்திய அரசும் நம் மாநிலத்திற்கு நற்சான்று வழங்கிவருகிறது.

    இவ்வேளையில், மேலும் முத்தாய்ப்பாக, தமிழகத்திலும், உலகத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள முன்னாள் மாணவர்களும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி மூலம் பள்ளிகளை தத்தெடுத்தும், இவர்களோடு பொதுமக்களும் கரம் கோர்த்தும் தங்கள் பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு, சேவை செய்திடவாருங்கள் என்று இருகரம் கூப்பி அழைக்கின்றேன்.


    முதல்-அமைச்சரின் தலைமையில் செயல்படும் அரசு, பள்ளிக் கல்வித் துறைக்காக மட்டும் இந்த ஆண்டு ரூ.27,205 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து சாதனைப் படைத்து வருகிறது.

    கல்வி ஒன்றால்தான் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த சேவையை செய்திட முடியும். எனவே, அன்பு உள்ளமும் தர்ம சிந்தனையும் கொண்ட அனைவரும் தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று அன்போடு மீண்டும் அழைக்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Governmentschool #Sengottaiyan

    மனித வாழ்க்கையில் மாணவ பருவம் மறக்க முடியாதது. பணி நிமித்தமாக பல்வேறு இடங்களில் பிரிந்து கிடந்த முன்னாள் மாணவர்கள் 26 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சந்தித்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் அரசர் மேல்நிலைப்பள்ளி என்ற அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1986-ம் ஆண்டு 1992-ம் ஆண்டுவரை 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை செயல்பட்டது. அந்த கால கட்டத்தில் படித்த மாணவர்கள் இன்று பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் காமராஜ் என்பவர் அரசர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த விரும்பினார்.

    இதைத்தொடர்ந்து அவர் தன்னுடன் படித்த மாணவர்களின் உறவினர்களை சந்தித்து முன்னாள் மாணவர்களின் முகவரி மற்றும் செல்போன் எண்ணை சேகரித்தார். மேலும் பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் முன்னாள் மாணவர்களை ஒன்று திரட்டி இன்று அவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்தார்.

    அதன்படி தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் 26 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அன்பு மிகுதியால் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி ஆனந்த கண்ணீர் சிந்தினர். தங்கள் பள்ளி நாட்களை நினைவு கூர்ந்து மகிழ்ந்த அவர்கள் தங்கள் நண்பர்களுடன் செல்பி எடுத்து கொண்டனர்.

    விழாவையொட்டி முன்னாள் மாணவர்கள் கேக் வெட்டி தங்களது சந்திப்பு நிகழ்ச்சியை கொண்டாடினர். முன்னாள் ஆசிரியர்களையும் சந்தித்து ஆசி பெற்றனர்.

    முன்னாள் மாணவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் அரசர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும். பொருளாதாரத்தில் நலி வடைந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு முடிவுகளை எடுத்தனர்.

    தற்போது முன்னாள் மாணவர்கள் சிலர் அரசு அலுவலர்களாகவும், பள்ளி, கல்லூரி ஆசிரியர்களாகவும், ராணுவ வீரர்களாகவும், தொழிலதிபர்களாகவும் உள்ளனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

    26 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள அன்பை பரிமாறி கொண்ட இவர்களின் சந்திப்பு மிகவும் நெகழ்ச்சியானது, மகிழ்ச்சிக்குரியது என்பதில் ஐயமில்லை. #tamilnews
    ×