search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்டூர் அணை"

    • மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
    • கோடை விடுமுறையை ஒரு வார காலமே உள்ளதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நீர்வளத்து றையில் பராமரிப்பில் உள்ள இப்பூங்காவில், கோடை விடுமுறையை ஒரு வார காலமே உள்ளதால் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    காவேரி ஆற்றில் வெகு நேரம் நீராடி மகிழ்ந்த அவர்கள் பூங்காவுக்கு சென்று புல் தரையில் அமர்ந்து பொழுதை கழித்த னர். மேலும் இங்கிருந்த பாம்பு, முயல் பண்ணையை கண்டு மகிழ்ந்தனர். சிறிய வர், பெரியவர் என வயது வித்தியாசம் இன்றி ஊஞ்ச லாடியும், சறுக்கல் ஆடியும் மகிழ்ந்தனர். மேட்டூர் அணை மீன்களை வாங்கி சுவைத்து மகிழ்ந்தனர். இதனால் வியாபாரமும் சூடு பிடித்தது. மேலும் பூங்காவில் அமர்ந்து குடும்பத்துடன் உணவும் அருந்தினர்.

    அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால், மேட்டூர் கொளத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. நேற்று ஒரே நாளில் 14,964 பேர் மேட்டூர் அணை பூங்காவுக்கு வந்து சென்றனர். இதன் மூலம் பார்வையாளர்கள் கட்டணமாக ரூ.74 ஆயிரத்து 820 வசூல் ஆனது. வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்தை காண 1062 பேர் வந்து சென்றனர்.

    • கல்லணையில் உள்ள பாலங்கள் அனைத்தும் வண்ணம் பூசும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
    • தோகூர் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள வடிகால் பாலத்தினை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    பூதலூர்:

    காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர். மேட்டூர் அணை திறக்கப்பட்டதும் ஜூன் 16-ந்தேதி கல்லணை தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து கல்லணையில் புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    கல்லணையில் உள்ள பாலங்கள் அனைத்தும் வண்ணம் பூசும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கல்லணை பாலங்களின் மேல் உள்ள மாமன்னன் கரிகாலன் சிலை உள்ளிட்ட சிலைகளுக்கும் வர்ணம் பூசும் பணி தொடங்கி உள்ளது. மேட்டூர் அணை தண்ணீரை எதிர்நோக்கி கல்லணையில் அனைத்து பணிகளும் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    இது தவிர கொள்ளிடம் ஆற்றில் ஷட்டர்கள் ஏற்றி இறக்கும் மின்மோட்டார்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. கொள்ளிடம் மணல் போக்கி பகுதியில் புதிய ஷட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    அதேபோல தோகூர் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள வடிகால் பாலத்தினை அகலப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.

    திருக்காட்டுப்பள்ளியில் உள்ள காவிரி குடமுருட்டி ஆற்றின் தலைப்பில் காவிரி ஆற்றில் நீரொழுங்கி அமைக்கும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்னதாகவே முடிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

    • ஜூன் 1-ந் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி வரையிலான காலம் பாசன ஆண்டாக கணக்கிடப்படுகிறது.
    • கடல் போன்ற பிரம்மாண்டமான நீர் பரப்பில் விடப்படும் மீன் குஞ்சுகள் பெரிய அளவிலான மீன்களாக சில மாதங்களில் வளர்ச்சியடைந்து, ஆண்டு முழுவதும் மீனவர்களுக்கு கிடைத்துவருகிறது.

    தமிழகத்தில் 12 மாவட்டங்களின் பாசனத்துக்கான நீரை வழங்கி, விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக திகழ்வது மேட்டூர் அணை. இந்த அணை மீன் உற்பத்தி மூலமாக, மீனவர்கள் பல ஆயிரம் பேருக்கு வாழ்வளித்து வருகிறது. மேட்டூர் அணை மீன்களுக்கு சுவை அதிகம். கர்நாடகாவுடன் குடகுவில் உற்பத்தியாகும் காவிரி ஒகேனக்கல் வழியாக பல அற்புதமான மூலிகைகளை கடந்து மேட்டூர் அணைக்கு வருகிறது. இந்த மூலிகை நிறைந்த நீரில் வளரும் மீன்கள் என்பதால் மேட்டூர் அணை மீன்களுக்கு இயல்பாகவே ருசி அதிகமாக உள்ளது.

    ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இதனைப் பயன்படுத்தி மேட்டூர் மீன் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாக அணையில் மீன் குஞ்சுகள் விடப்படும். இதை மீன் விதைப்பு என்பார்கள்.

    ஜூன் 1-ந் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி வரையிலான காலம் பாசன ஆண்டாக கணக்கிடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பரப்பு 53 சதுர மைல் கொண்டது. அது மட்டுமல்ல, அணையின் நீர் மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும்போது, அணையில் தேங்கும் நீரானது அடிபாலாறு தொடங்கி காவிரியில் ஒகேனக்கல் வரையிலும் தேங்கி நிற்கும்.

    எனவே, கடல் போன்ற பிரம்மாண்டமான நீர் பரப்பில் விடப்படும் மீன் குஞ்சுகள் பெரிய அளவிலான மீன்களாக சில மாதங்களில் வளர்ச்சியடைந்து, ஆண்டு முழுவதும் மீனவர்களுக்கு கிடைத்துவருகிறது.

    காவிரி ஆறு வனப்பகுதி வழியாக பாய்ந்து வருவதால், இயற்கையாகவே அதில் மீன்களுக்கு தேவையான சத்துகள், உணவுகள் இருக்கும். காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் முன்னர் மேட்டூர் அணையின் கரையோரங்கள், காவிரி கரையோரங்களில் கிராம மக்கள் கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை உட்பட பல்வேறு பயிர்களை பல நூறு ஏக்கருக்கு மேல் நடவு செய்திருப்பர்.

    காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, உடனடியாக, பயிர்களை அறுவடை செய்துவிடுவர். அந்த அறுவடை எச்சங்கள் அணை நீரில் மூழ்கிவிடும்போது, அவை மீன்களுக்கு மிகச்சிறந்த உணவாக அமைந்து விடுகிறது.

    எனவே, மேட்டூர் அணையில் மீன்கள் செழித்து வளருவதுடன், சுவையானவையாகவும் இருக்கின்றன. குறிப்பாக, தமிழகத்திலேயே சுவை மிகுந்த மீன்கள் கிடைப்பது மேட்டூர் அணையில்தான். எனவே, மேட்டூர் அணையில் பிடிக்கப்படும் மீன்களை தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வர்.

    மீன்பிடி தொழில் அணையில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு மட்டுமல்லாது, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டம் வரை காவிரி கரையோர மீனவர்களுக்கு வாழ்வாதாரத்தைக் கொடுத்து வருகிறது.

    இந்த சுவையான மீன்கள் மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் முயற்சியால் சமீபத்தில் தமிழக சட்டசபைக்கும் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எல்.ஏ.க்கள் மேட்டூர் அணை மீன் உணவை சுவைத்து சாப்பிட்டனர். தற்போது இந்த மீன்கள் கேரளாவுக்கும் செல்கின்றன.

    மேட்டூரில் செயல்பட்டு வரும் அரசு மீன் குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணையில், கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை உள்ளிட்ட மீன்களின் வளத்தை பெருக்கும் வகையில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை ஆண்டுதோறும் ஜூலை தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் வரை சீரான இடைவெளியில் மேட்டூர் அணையில் விடப் படுகின்றன.

    அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்தின் மீன் வளத்துறைக்கும், அண்டை மாநிலத்துக்கும் மீன் குஞ்சுகள் வழங்கப்படுகின்றன. தற்போது, மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை உள்ளிட்ட மீன்கள் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இன முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கம் செய்யும். அப்போது, மீன் குஞ்சுகளை கண்டறிந்து சேகரித்து வழங்குவதில் சிக்கல் உள்ளது. இதனால் தூண்டுதல் முறையில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தாய், தந்தை மீன்களை வளர்த்து ஊசி மூலம் ஹார்மோன் செலுத்தப்படுகிறது.

    பின்னர், 4-வது நாளில் நுண் மீன் குஞ்சுகள் சேகரிக்கப்பட்டு, 1 மாதத்துக்கு விரலிகளாக வளர்க்கப்படுகின்றன. 15 முதல் 17 நாட்களில் இள மீன் குஞ்சுகளாகவும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    கேராளவில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய தேவையான வசதிகள், இடங்கள் இல்லாததால் மேட்டூர் அரசு மின் குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணையில் ஆண்டு தோறும் குறிப்பிட்ட இடைவெளியில் வாங்கிச் செல்கின்றனர். அதன்படி, 15 லட்சம் கட்லா, ரோகு, மிர்கால் நுண்மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    வேலூர் மாவட்டத்துக்கு 6 லட்சம் நுண் குஞ்சுகள், 1.52 லட்சம் இள மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்பட்டன என்றனர். 

    • மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 2,787 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 1,850 கன அடியாக சரிந்தது.
    • மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை காட்டிலும், திறப்பு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியிலும் மிதமான அளவு தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 2,787 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 1,850 கன அடியாக சரிந்தது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை காட்டிலும், திறப்பு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 103.78 அடியாக உயர்ந்த அணையின் நீர்மட்டம், இன்றும் அதே அளவில் நீடிக்கிறது.

    • மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 2463 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 2787 கன அடியாக அதிகரித்தது.
    • தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் பட்சத்தில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியிலும் மிதமான அளவு தண்ணீர் வருகிறது.

    இந்த தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 2463 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 2787 கன அடியாக அதிகரித்தது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை காட்டிலும், திறப்பு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 103.72 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று103.78 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் பட்சத்தில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    • டெல்டா பாசனப் பகுதியில் கடந்த ஆண்டு 58 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 103.72 அடியாக உள்ளது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்குகிறது.

    இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். டெல்டா பகுதி விவசாயிகள் இந்த நீரை நம்பியே குறுவை சாகுபடி செய்வர்.

    கடந்த ஆண்டு மழையால் மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் ஜூன் 12-ந் தேதிக்கு முன்பாகவே அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மே மாதம் 24-ந் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணையில் இருந்து பாசனத்திற்காக நீரை திறந்துவிட்டார்.

    இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து உரிய நாளான ஜூன் 12-ந் தேதி டெல்டாவின் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறக்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் தொடர்ந்து 3-வது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது.

    அணையின் 90 ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக 1934ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த நாளான ஜூன்12-ல் இதுவரை 18ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூன் 12-க்கு முன்பாக 11 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் 19-வது முறையாக குறித்த நாளான ஜூன் 12-ம் தேதி, நடப்பாண்டும் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    டெல்டா பாசனப் பகுதியில் கடந்த ஆண்டு 58 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது இது 65,500 ஏக்கர் நிலப்பரப்பாக அதிகரித்துள்ளது

    குறித்த நேரத்தில் தண்ணீர் திறப்பதன் மூலம் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 200 ஏக்கர் நிலமும், கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்து 800 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். ஜூன் 12-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை குறுவை, சம்பா, காளடி பயிர்களுக்கு 220 நாட்களுக்கு 372 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் இந்த நீரின் தேவை சற்று குறையும்.

    மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 103.72 அடியாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி அணையில் 69.72 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 2463 கன அடியாக உள்ளது.

    குடிநீருக்காக விநாடிக்கு 1508 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு இந்த தேதியில் இருந்த தண்ணீரை விட, தற்போது 6 டிஎம்சி வரை குறைவாகவே உள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

    • மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 4,176 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 2,463 கனஅடியாக சரிந்தது.
    • அணையிலிருந்து காவிரியில் வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர், குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படுகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கலில் நேற்று முன்தினம் 4 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 3 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. ஆனாலும் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 4,176 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 2,463 கனஅடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரியில் வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர், குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படுகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 103.68 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 103.72 அடியாக உயர்ந்தது.

    • அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையிலிருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    • இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 4 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

    இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உட்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    நேற்று காலை வினாடிக்கு 2,162 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 4,176 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 1500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையிலிருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 103.53 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 103.68 அடியாக உயர்ந்தது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.

    • அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கியுள்ளது.
    • நேற்று 103.51 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 103.53 அடியாக உயர்ந்தது.

    மேட்டூர்:

    தமிழக மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.

    நேற்று 762 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து விநாடிக்கு 2,162 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் 1500 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கியுள்ளது.

    நேற்று 103.51 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 103.53 அடியாக உயர்ந்தது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

    நீர்மட்டம் தற்போது 100 அடிக்கு மேல் இருப்பதால் வழக்கம் போல இந்த ஆண்டும் மேட்டூர் அணை வருகிற 12-ம் தேதி சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
    • நேற்று 103.65 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 103.58 அடியானது.

    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று 1075 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 762 கன அடியானது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு 1500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 103.65 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 103.58 அடியானது.

    இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும் குறையும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரியாக வாய்ப்பு உள்ளது.

    • அணையின் 90ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக 1934ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
    • குறித்த நாளான ஜூன் 12-ல் இதுவரை 18ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர் அணை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்குகிறது.

    இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். டெல்டா பகுதி விவசாயிகள் இந்த நீரை நம்பியே குறுவை சாகுபடி செய்வர்.

    கடந்த ஆண்டு மழையால் மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் ஜூன் 12-ந்தேதிக்கு முன்பாகவே அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மே மாதம் 24-ந்தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணையில் இருந்து பாசனத்திற்காக நீரை திறந்துவிட்டார்.

    மேட்டூர் அணை வரலாற்றிலேயே, கோடை காலத்தில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிகழ்வு முதல் முறையாக நிகழ்ந்தது.

    இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து உரிய நாளான ஜூன் 12-ந்தேதி டெல்டாவின் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது.

    குறித்த நேரத்தில் தண்ணீர் திறப்பதன் மூலம் நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 4 லட்சத்து 91ஆயிரத்து 200 ஏக்கர் நிலமும், கடலூர் மாவட்டத்தில் 30ஆயிரத்து 800 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். ஜூன் 12-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை குறுவை, சம்பா, காளடி பயிர்களுக்கு 220 நாட்களுக்கு 372டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் இந்த நீரின் தேவை சற்று குறையும்.

    மேட்டூர் அணையின் உச்ச நீர் மட்டம் 120 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 103.65 அடியாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 69.654 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 1075 கன அடியாக உள்ளது.

    குடிநீருக்காக விநாடிக்கு 1508 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடங்கியுள்ளதால் ஜூன் 12-ம் தேதியே குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

    அணையின் 90ஆண்டு கால வரலாற்றில் முதன்முதலாக 1934ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. குறித்த நாளான ஜூன்12-ல் இதுவரை 18ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூன்12-க்கு முன்பாக 11ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் 19-வது முறையாக குறித்த நாளான ஜூன் 12-ம் தேதி, நடப்பாண்டும் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    டெல்டா பாசனப் பகுதியில் கடந்த ஆண்டு 58 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. தற்போது இது 65,500 ஏக்கர் நிலப்பரப்பாக அதிகரித்துள்ளது. அதேபோல் 4.36 லட்சம் டன் உரம் கையிருப்பில் உள்ளது என்று வேளாண் அதிகாரிகள் கூறினர்.

    மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு இந்த தேதியில் இருந்த தண்ணீரை விட, தற்போது 6 டிஎம்சி வரை குறைவாகவே உள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

    • மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 762 கனஅடி தண்ணீர் வந்தது.
    • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், அதன் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

    தற்போது இந்த பகுதிகளில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 762 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து சற்று அதிகரித்து விநாடிக்கு 1237 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பை விட வரத்து குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 103.74 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 8 மணி அளவில் 103.70 அடியாக சரிந்தது

    ×