என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வாலிபருக்கு ஜெயில்
நீங்கள் தேடியது "வாலிபருக்கு ஜெயில்"
விருத்தாசலம் அருகே நண்பனின் காதலியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா பெரியகோட்டிமூளை பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(வயது 26). இவரது நண்பர் விஜயேந்திரன். இவருக்கு 16 வயதில் காதலி ஒருவர் உள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி வாலிபர் சத்தியமூர்த்தி தனது நண்பனின் காதலியிடம் விஜயேந்திரன் கோவையில் விஷம் குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரை பார்க்க வரும்படி அழைத்தார்.
அதற்கு அந்த இளம்பெண் மறுத்து விட்டார். உடனே சத்தியமூர்த்தி வராவிட்டால் போலீஸ் வழக்கு பதிவாகிவிடும் என மிரட்டினார். இதனைத்தொடர்ந்து அந்த இளம்பெண் சத்தியமூர்த்தியுடன் கோவைக்கு சென்றார். அங்கு சென்றதும் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவரை திருப்பூருக்கு அழைத்து சென்று அங்கு வைத்து ஒரு வாரம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையே இளம்பெண்ணின் பெற்றோர் தன் மகளை காணவில்லை என சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் ஸ்ரீமுஷ்ணம் பஸ்நிலையத்தில் சத்தியமூர்த்தி அந்த இளம்பெண்ணுடன் பஸ்சில் வந்து இறங்கினார். உடனே அங்கு நின்ற போலீசார் சத்தியமூர்த்தியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கடலூர் மகிளா நீதீமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை வழக்கு விசாரணை தொடங்கியது. சத்தியமூர்த்தியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நண்பனின் காதலியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சத்தியமூர்த்திக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார்.
இந்தவழக்கில் அரசு சார்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

திருந்தி வாழப்போவதாக உறுதிமொழி கொடுத்து விட்டு மதுபாட்டில் பதுக்கி விற்ற வாலிபருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் தாங்கல் பி.பி. தர்கா பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (38). இவர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீபத்தில் அவர் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவளிப்ரியாவை சந்தித்து தான் திருந்தி வாழ்வதாகவும், தன்னை மன்னிக்கும்படி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
இதையடுத்து ராஜன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். வெளியே வந்த அவர் சிறிது காலம் திருந்தி வாழ்ந்தார். இந்த நிலையில் ராஜன் மீண்டும் மது பாட்டில் பதுக்கி விற்பனை செய்ய தொடங்கினார்.
இதை அறிந்த திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன், ராஜனை கைது செய்து வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவளிபிரியா முன்பு ஆஜர்படுத்தினார். அப்போது பிரமாண பத்திரத்தை மீறிய சட்டப்படி ராஜனுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து துணை கமிஷனர் ரவளி பிரியா தனக்கு உள்ள அதிகாரத்தின்படி உத்தரவிட்டார்.
காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இருக்கும் இந்த அதிகாரத்தை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. முதல் முறையாக வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவளிபிரியா பயன்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

×

X