என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாலிபர் படுகொலை"
சிங்காநல்லூர்:
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகன் சுப்பன் (28). துப்புரவு தொழிலாளி. இவர் சிங்காநல்லூர் வெள்ளலூர் ரோட்டில் உள்ள தனது அண்ணன் வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.
சுப்பன் நேற்று மாலை வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
அவரை அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினார்கள். ஆனால் எந்த பலனும் இல்லை.
இன்று அதிகாலை 5 மணியளவில் சிங்காநல்லூர் பஸ் நிலையம் பகுதியில் சுப்பன் ரத்த வெள்ளத்தில்பிணமாக கிடந்தார். அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது பஸ் நிலையத்தை சுற்றி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. சுப்பன் பிணத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சுப்பனை கொலை செய்தது நீலிகோணம் பாளையம் வரதராஜபுரம் செட்டியார் தோட்டத்தை சேர்ந்த நடராஜன் மகன் கதிர்வேல் என்கிற சக்திவேல் (27) என்பது தெரியவந்தது.
அவரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் போலீஸ்காரர் சுகுமார் அடங்கிய போலீசார் விரைந்து சென்று கைது செய்தனர்.
நானும், சுப்பனும் நண்பர்கள்.நேற்று இரவு இருவரும் மது குடிக்க சென்றோம்.அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் கல்லை எடுத்து சுப்பன் தலையில் தாக்கினேன். இதில் அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
பின்னர் நான் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். என்னை போலீசார் கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து தான் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். இந்த பஸ் நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து போட்டு விட்டு வந்த 2 வாலிபர்கள் 4 பேர் கும்பலால் நடுரோட்டில் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டப்பட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த 2 வாலிபர்களும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சிங்காநல்லூர் பஸ் நிலையம் பகுதியில் வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் கோவையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர்:
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பஞ்சயம் கோட்டை பகுதியில் கல் குவாரி உள்ளது. இங்கு நெல்லை மாவட்டம் சுந்தரேசபுரம் வடக்கு தெருவை சேர்ந்த இசக்கிபாண்டியன் (வயது 65) என்பவர் கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே குவாரியில் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பெருமாள்மலை அடி வாரத்தை சேர்ந்த செல்வராஜ் (32) என்பவரும் கல் உடைக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இதற்கிடையே 2 பேரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்தனர். அப்போது இசக்கிபாண்டியனின் செல்போனை செல்வராஜ் திருடியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
தற்போது கரூர் மாவட்டம் பஞ்சயம் கோட்டை கல்குவாரியில் பணியாற்றி வந்த போது, செல்வராஜ் தனது செல்போனை திருடியது தொடர்பாக இசக்கிப்பாண்டியன் சக தொழிலாளர்களிடம் கூறி வந்துள்ளார். இதனால் அவமானமடைந்த செல்வராஜ், இசக்கி பாண்டியனிடம் என்னை பற்றி அவதூறு பரப்புவதை நிறுத்துமாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்றிரவு மது அருந்தி விட்டு வந்த செல்வராஜ், இசக்கிபாண்டியன் தங்கியிருந்த குடிசைக்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ், அருகில் கிடந்த பெரிய பாறாங்கல்லை எடுத்து இசக்கிபாண்டியனின் தலையில் போட்டார். இதில் தலை நசுங்கி இசக்கிப்பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வேலாயுதம்பா ளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இசக்கிப்பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கொலையாளி செல்வராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் கடந்த மாதம் அம்ருதா என்பவரை காதலித்து திருமணம் செய்த ஸ்வரன் என்ற வாலிபர் ஆணவ கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் காதல் விவகாரத்தில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கரீம்நகர் மாவட்டம் தடிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (23). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவியும் காதலித்தனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காதல் விவகாரத்தை அறிந்த மாணவி குடும்பத்தினர் குமாரை மிரட்டினர். மேலும் அவர் மீதும் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் குமாரை மிரட்டி இனிமேல் மாணவியை பார்க்க கூடாது என்று எச்சரித்து அனுப்பினர். அதன் பிறகு குமார் காதலியை பார்க்காமல் இருந்தார்.
நிஜாமாபாத்தில் உள்ள கல்லூரியில் சேர்ந்த காதலியை 6 மாதங்களுக்கு பிறகு குமார் பார்த்தார். இருவரும் நீண்ட நேரம் பேசி கொண்டு இருந்தனர். பின்னர் அங்குள்ள குமார் உறவினர் வீட்டில் இரவு தங்கினர்.
மறுநாள் காலை மாணவி தனது வீட்டுக்கு சென்றார். அப்போது இரவு எங்கு இருந்தாய் என்று பெற்றோர் கேட்டபோது காதலன் குமாருடன் தங்கியதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை சித்ரவதை செய்துள்ளனர்.
பின்னர் குமாருக்கு போன் செய்து, இரவு உன்னுடன் தங்கியதால் தங்களது மகளை அழைத்து செல்லுமாறு கூறினர். இதுகுறித்து குமார் தனது பெற்றோரிடம் தெரிவித்து விட்டு சென்றார்.
ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் போலீசில் புகார் செய்தனர். ஆனால் புகாரை வாங்க போலீசார் மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் தாடிக்கல் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் குமார் பிணமாக கிடந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.
காதலியை அழைத்து செல்லுமாறு வரவழைத்து அவரை கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது. குமார் மாயம் ஆனது குறித்த புகார் அளித்ததும் போலீசார் உடனே நடவடிக்கை எடுத்து இருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர். #Honourkilling
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டம், துஜ்ஜார் பகுதியை சேர்ந்த வியாபாரி தவ்சீப் அஹ்மத் கானி(30). கடந்த புதன்கிழமை இவர் கடையில் இருந்தபோது பயங்கரவாதிகள் இவரை கடத்திச் சென்றனர். தவ்சீப் அஹ்மத் கானியை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள சேக் ஹர்வான் பகுதியில் ஒரு பழத்தோட்டத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் தவ்சீப் அஹ்மத் கானியின் பிரேதத்தை போலீசார் இன்று கண்டெடுத்துள்ளனர்.
அவரை கடத்திச் சென்ற விதம், கொல்லப்பட்ட முறையை பார்க்கும்போது இது லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் வெறிச்செயலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர். #JKManabducted #Manabductedbymilitants #abductedmanfounddead
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பெலாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையன் (வயது 35). முருகையன் தினமும் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டின் அருகே கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ள திண்ணையில் படுப்பது வழக்கம்.
பெலாந்துறை அருகே உள்ள கே.கே.நகரை சேர்ந்த தென்னை மரம் ஏறும் தொழிலாளி முருகன் (40) என்பவரும் முருகையன் படுத்து இருந்த இடம் அருகே தூங்கி வந்தார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவு 10 மணிக்கு முருகையன் அந்த இடத்தில் படுக்க வந்தார். அப்போது முருகனும் அங்கு வந்தார். உடனே முருகையன், வெளியூரை சேர்ந்த நீ இங்கு வந்து ஏன் படுக்கிறாய்? என்று முருகனிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் முருகன் படுக்கும் இடத்தில் முருகையன் தண்ணீரை ஊற்றி விட்டு படுத்து தூங்கி கொண்டிருந்தார். இதனால் அருகில் உள்ள இடத்தில் முருகன் படுக்க இயலாமல் தவித்தார். உடனே அங்கிருந்து சென்று விட்டார்.
இன்று அதிகாலை கொடிக்கம்பம் அருகே முருகையன் ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்தியன், பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கொடிக்கம்பம் அருகே பிணமாக கிடந்த முருகையனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று இரவு கொடிக்கம்பம் அருகே படுத்து தூங்குவது தொடர்பாக முருகையனுக்கும், முருகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் முருகையன் கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பாக முருகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட முருகையனுக்கு அனிதா (30) என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
வாலிபர் கழுத்து அறுத்து கொடூர முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி சுரங்கப் பாதையில் கடந்த ஏப்ரல் 25-ந்தேதி காலில் வெட்டுக்காயத்துடன் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியாமல் இருந்தது.
இதுகுறித்து ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கடந்த 2 மாதமாக இந்த கொலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாயமானவர்கள் பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்தனர். அப்போது உடல் மீட்கப்பட்ட அதே நாளில் திருவாரூர் அருகே தென்பாடியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் விஜயராகவன் (வயது 31) மாயமாகி இருந்தார்.
இதையடுத்து அவரது பெற்றோரை அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது கொலையுண்ட வாலிபர் விஜயராகவன் என்பது தெரிந்தது. அவரது உடலை பெற்றோர் அடையாளம் காட்டி உறுதி செய்தனர்.
விசாரணையில் மலேசியாவில் ஏற்பட்ட கள்ளக்காதல் பிரச்சனையில் விஜய ராகவனை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
விஜயராகவன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவுக்கு கூலி வேலைக்காக சென்று இருக்கிறார். அப்போது அங்குள்ள திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது அந்த பெண்ணின் கணவருக்கு தெரிந்ததும் பிரச்சனை ஆரம்பமானது.
இதையடுத்து விஜயராகவன் சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டார். எனினும் அந்த பெண் அடிக்கடி தமிழகம் வந்து விஜயராகவனுடன் சேர்ந்து ஜாலியாக சுற்றி உள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி அந்த பெண் மீண்டும் தமிழகம் வந்துள்ளார். அவருடன் விஜய ராகவன் சேர்ந்து சுற்றி இருக்கிறார். கடைசியாக திருச்சி வரை அவர்கள் சென்றுள்ளனர். அதன் பின்னர் விஜயராகவன் மாயமாகி உள்ளார்.
எனவே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கள்ளக்காதலியே கூலிப்படையை ஏவி விஜயராகவனை தீர்த்து கட்டியிருக்கலாம். அல்லது கள்ளக்காதலை அறிந்த அந்த பெண்ணின் கணவர் கூலிப்படையை ஏவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, கொலையுண்ட விஜயராகவனின் சட்டை பையில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை எடுக்கப்பட்ட மின்சார ரெயில் டிக்கெட் இருந்தது. எனவே கொலையை திட்டமிட்டு மர்மகும்பல் அரங்கேற்றி உள்ளனர்.
இதில் தொடர்புடைய மலேசிய பெண்ணிடம் விசாரணை நடத்தினால்தான் முழுவிபரம் தெரியவரும். அவரை பிடிக்க இன்டர் போல் போலீசை நாடி உள்ளோம் என்றார். #Tamilnews
ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி அருகே சுரங்கப்பாதை உள்ளது. இதன் அருகே நேற்று காலை வாலிபர் ஒருவர் வெட்டுக்காயத்துடன் பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலையுண்ட வாலிபருக்கு சுமார் 25 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
அவர் நீலநிற ஜீன்ஸ், பச்சை நிற டிசர்ட் அணிந்து இருந்தார். அவரது பையில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை செல்லும் மின்சார ரெயிலுக்கான டிக்கெட் இருந்தது. அவரது காலில் பலத்த வெட்டுக்காயம் காணப்பட்டது.
மின்சார ரெயிலில் அந்த வாலிபர் பயணம் செய்த போது மர்ம கும்பலுடன் தகராறு ஏற்பட்டு இருக்கலாம் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடிய போது மர்ம கும்பல் அவரை வெட்டி சாய்த்து கொன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். காலில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டதால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அங்கேயே அவர் இறந்து இருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையுண்ட வரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்