என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாலிபர்கள் மாயம்"
- வடமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஆண்டார்குப்பம் பகுதியில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
- திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதியில் இருந்து 20 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடலில் மாயமான 4 தொழிலாளர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர்:
சென்னை மணலி அருகே ஆண்டார்குப்பம் பகுதியில் ஐ.ஓ.சி. என்ற மத்திய அரசு நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் உள்ளே இரும்பு தகடால் கூடாரம் அமைக்கும் பணியை தனியார் ஒருவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார்.
இவரிடம் வடமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஆண்டார்குப்பம் பகுதியில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் 25 பேர் திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகரில் கடற்கரையை சுற்றி பார்க்க வந்தனர். அவர்களிடம் 8 தொழிலாளர்கள் மட்டும் கடலில் இறங்கி குளித்தனர். மற்றவர்கள் கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக கடலில் ஆர்ப்பரித்து வந்த ராட்சத அலை, 8 பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதில் 4 பேர் சாதுரியமாக தப்பித்து கரை வந்தனர். ஆனால் முஸ்தகீன் (வயது 22), அவருடைய தம்பி இப்ராஹிம் (20), வஷீம் (26) மற்றும் புர்கான் (28) ஆகிய 4 பேரும் ராட்சத அலையில் சிக்கி கடலில் மாயமானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், அங்கிருந்த மீனவர்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக மீனவர்கள் கடலில் குதித்து மாயமான 4 பேரையும் தேடினர். ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை.
உடனடியாக இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதியில் இருந்து 20 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடலில் மாயமான 4 தொழிலாளர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு வரை தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதனால் மாயமானவர்களின் கதி என்ன ஆனது? என்பது தெரியவில்லை. தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். மேலும் இது குறித்து எண்ணூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டியைச் சேர்ந்த காதர் பாட்ஷா மகன் பாபர் மீரான் (வயது 25). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார்.
பின்னர் மீண்டும் சென்னைக்கு செல்வதாக கூறிச் சென்ற மீரான் மாயமானார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரது நிறுவனத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பணிக்கு வரவில்லை என கூறி விட்டனர். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அவரை தேடி வருகின்றனர்.
இதே போல் நிலக்கோட்டை அருகே உள்ள இ.கோவில்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகன் ராஜபாண்டி (வயது 35). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். சம்பவத்தன்று அருகில் உள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருவதாக கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் விளாம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்