search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடு தீ விபத்து"

    ஒரத்தநாடு அருகே தீ விபத்தில் வீடு முற்றிலும் எரிந்து ரூ.25 ஆயிரம் மதிப்பில் சேதம் ஏற்பட்டது.

    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகே சமயன்குடிகாடு கிராமம் ஆற்றாங்கரை தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மனைவி மல்லிகா (வயது 40).

    இவர் நேற்று அதே பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு இரவு சென்றார். அப்போது அங்கு நடந்த கலை நிகழ்ச்சியை அவர் பார்த்துக்கொண்டிருந்த போது அவரது தெருவை சேர்ந்த சிலர் ஓடிவந்து வீடு தீப்பற்றி எரிவதாக கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகா வீட்டிற்கு விரைந்து சென்றார். அப்போது வீடு தீப்பற்றி எரிவதை கண்ட அவர் ஒரத்தநாடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார்.

    ஆனால் தீ விபத்தில் வீடு முற்றிலும் எரிந்து ரூ.25 ஆயிரம் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கொரடாச்சேரி அருகே 2 வீடுகளில் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    கொரடாச்சேரியை அடுத்த அம்மையப்பன் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 60). இவரது அண்ணன் துரைராஜ் (65). இவர்களின் வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. இந்தநிலையில் சரவணன் வீட்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது.இந்த தீ அருகில் உள்ள துரைராஜ் வீட்டிலும் பரவியது.

    இதுபற்றி திருவாரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருந்தபோதிலும் 2 வீடுகளிலும் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகி விட்டது.

    இதுபற்றிய புகாரின் பேரில் கொரடாச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து தீவிபத்து குறித்து விசாரணை நடத்தினார்.

    தேவகோட்டையில் துப்புரவு பணியாளர்கள் வீட்டில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் குடிசைகள் எரிந்து நாசமானது.

    தேவகோட்டை:

    தேவகோட்டை நகர் சரஸ்வதி வாசக சாலையில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிசை வீட்டில் உள்ளனர்.

    நேற்றிரவு முனியம்மாள் என்பவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அவர் அலறிக் கொண்டு வீட்டில் இருந்து வேகமாக வெளியேறினார்.

    இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அருகில் உள்ள தேவகி என்பவரது வீட்டிற்கும் தீ பரவியது.

    இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் முனியம்மாள் மற்றும் தேவகியின் வீடுகள் எரிந்து நாசமாயின. வீட்டிற்குள் இருந்த பொருட்களும் கருகி சேதமடைந்தன.

    தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இது குறித்து தேவகோட்டை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×