என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெடிகுண்டு வீச்சு"
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது70). இவரது மூத்த மகள் கவுரி. இவரது கணவர் ராஜி. இவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூ வியாபராம் செய்து வருகிறார்.
இவர்களது மகன் சுரேஷ். இவர் உழவர்கரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி தலைவராக உள்ளார். சீனிவாசன் வீடு 3 மாடியில் அமைந்துள்ளது.
வீட்டின் கீழ் தளத்தில் 4 அறைகள் உள்ளது. வீட்டின் முன்புறம் சுரேஷ் பாரதிய ஜனதா அலுவலகம் நடத்தி வருகிறார். அதே தளத்தில் சீனிவாசன், அவரது மனைவி ஜோதி (60), 2-வது மகள் சாந்தி (42), இளைய மகள் எழிலரசி (38), சீனிவாசன் பேத்திகள் தீபிகா (15), ஸ்ரீ (14) ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
இன்று காலை 6.30 மணியளவில் சீனிவாசன் வீட்டில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. வீடும் உருக்குலைந்தது. வீட்டின் சுவரும் இடிந்து விழுந்தது. பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்து கிடந்தது.
வீட்டில் இருந்த ஜோதி, எழிலரசி, சிறுமி ஸ்ரீ ஆகியோர் தீக்காயத்துடன் சத்தம் போட்டனர். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
கோட்ட தீயணைப்பு அலுவலர் இளங்கோ, நிலைய அலுவலர் மனோகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் முத்தியால்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வீடு முற்றிலும் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் தீயணைப்பு வீரர்களால் உடனடியாக வீட்டிற்குள் செல்ல முடியவில்லை.
வீட்டின் மேல் தளத்தில் ஜோதி சிக்கி கொண்டார். அவரை மாடி வழியாக இறங்கி ஸ்டிரக்சர் மூலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். எழிலரசி மற்றும் சிறுமி ஸ்ரீயையும் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜோதி, எழிலரசி ஆகியோர் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வீட்டில் இருந்த சாந்தி, தீபிகா ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். வீட்டின் பின்பக்க அறையில் இருந்ததால் சீனிவாசன் காயமின்றி தப்பினார்.
சீனிவாசன் வீட்டில் வைக்கப்பட்டடிருந்த பிரிட்ஜ் எரிந்து உருக்குலைந்து காணப்பட்டது. ஆனால் சிலிண்டர் அப்படியே இருந்தது. மேலும் சுரேஷ் நடத்தி வந்த பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் ஷட்டர் பெயர்ந்து அப்பகுதியில் உள்ள சந்தில் விழுந்து கிடந்தது.
சீனிவாசன் வீட்டின் அருகில் இருந்த வீடுகளிலும், எதிரில் உள்ள வீடுகளிலும் கீறல் விழுந்துள்ளது. மேல் மாடியில் உள்ள வீட்டின் ஜன்னல், கதவுகள் இறுகி விட்டது. இந்த விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில்தான் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதால் யாராவது கட்சி அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டை வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தீயணைப்புதுறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, சீனிவாசன் வீட்டில் உள்ள சிலிண்டர் அப்படியே உள்ளது. பிரிட்ஜ் மட்டும்தான் தீபிடித்து எரிந்துள்ளது.
மேலும் மின்கசிவு ஏற்பட்டதற்கான எந்த தடயங்களும் இல்லை. எனவே கட்சி அலுவலகத்தில் யாராவது நாட்டு வெடிகுண்டை வீசி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
தடயவியல் நிபுணர்கள் ஆய்வுக்கு பின்னரே இது தொடர்பான முழுவிவரம் தெரியவரும் என்றார்.
புதுவை அருகே ஏம்பலத்தை அடுத்த மணக்குப்பம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபரி (வயது31). காங்கிரஸ் பிரமுகரான இவர் சமீபத்தில் நடந்த மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.
சபரிக்கு திருமணமாகி ஹேமாவதி என்ற மனைவியும் ஒரு மகளும் பிறந்து 3 நாட்களே ஆன கைக்குழந்தையும் உள்ளன. ஹேமாவதி கைக்குழந்தையுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு சபரி தனது தாய் ராஜேஸ்வரி, தம்பி சுரேந்தர் மற்றும் மகளுடன் தூங்கி கொண்டு இருந்தார். இன்று அதிகாலை 4 மணியளவில் யாரோ மர்ம நபர்கள் சபரி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் தூங்கிக்கொண்டு இருந்த ராஜேஸ்வரி மீது வெடிகுண்டு சிதறல்கள் விழுந்து படுகாயம் அடைந்தார்.
உடனே ராஜேஸ்வரி மற்றும் சபரி அவரது தம்பி சுரேந்தர் வீட்டில் இருந்து வெளியே அலறியடித்து ஓடிவந்தனர். மேலும் வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மங்கலம் மற்றும் வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அரசியல் விரோதம் காரணமாக சபரி வீட்டில் வெடிகுண்டு வீசி இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை அருகே திருக்கனூர் - விழுப்புரம் மெயின் ரோட்டில் தமிழக எல்லையையொட்டி தனியார் மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையில் திருக்கனூர் மற்றும் அருகில் உள்ள தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் தினந்தோறும் ஏராளமானோர் மது அருந்துவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் மதுக்கடையை கேஷியர் பூட்டிவிட்டு சென்றார். அவர் கடையை பூட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் 2 நாட்டு வெடிகுண்டுகளை மதுக்கடை மீது வீசினர். உடனே அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
அந்த வெடிகுண்டு கடையின் ஷெட்டரில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது மதுக்கடையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கடையின் ஷெட்டர் மட்டுமே சேதமானது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் மதுக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது வெடிகுண்டு வீசியவர்களின் அடையாளங்கள் பதிவாகி இருந்தன. இதன் மூலம் வெடிகுண்டு வீசிய நபர்கள் யார் - எந்த ஊர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமூல் தர மறுத்ததால் ஆத்திரத்தில் ரவுடிகள் மதுக்கடை மீது வெடிகுண்டு வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மதுக்கடை மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தால் திருக்கனூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெடிகுண்டு வீசப்பட்ட மதுக்கடையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் தமிழக பகுதியான ராதாபுரத்தை சேர்ந்த டிரைவர் பலராமன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அண்ணா நகரை சேர்ந்தவர் மாது (வயது 55). விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் தனியார் கல் குவாரியில் பணியாற்றி வருகிறார். அந்த பகுதியில் உள்ள அரசு கல் குவாரி அருகே வீடு கட்டி வசித்து வருகிறார். வீட்டின் சமையல் அறை, சிமெண்டு அட்டைகளால் வேயப்பட்டு இருந்தது.
நேற்று இரவு 8 மணிக்கு மாது வீட்டில் இருந்தார். அப்போது பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதில் சிமெண்டு அட்டைகள் பெயர்ந்து விழுந்தன. இதில் வீட்டில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்தன. வெடிகுண்டு துகள் பட்டு காயமடைந்த மாது பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து மாது கூறியதாவது:-
என்னை கொல்ல சதி நடக்கிறது. இதற்காக எனது வீட்டில் வெடிகுண்டுகளை வீசி உள்ளனர். வெடி பட்டதில் சிமெண்டு அட்டைகள் சிதறி என்மேல் பட்டு எனக்கும் காயம் ஏற்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஏரியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இன்று காலை தடயவியல் நிபுணர்கள் நேரில் சென்று வெடித்த வெடி மருந்து எந்த வகையை சேர்ந்தது என்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். உண்மையிலேயே வெடித்தது வெடிகுண்டா? அல்லது பாறைகளில் வெடி வைத்து தகர்க்க பயன்படும் வெடி மருந்தா? என்றும் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
மாதுவும், கல் குவாரியில் வேலை பார்ப்பதால் அவர் தனது வீட்டில் வெடி மருந்துகளை பதுக்கி வைத்து அது வெடித்ததா? என்ற கோணத்திலும் ஏரியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தடயவியல் நிபுணர்கள் கொடுத்த அறிக்கைக்கு பிறகு தான் உண்மை நிலவரம் தெரியவரும்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை கிராமத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக் (வயது 37), விக்கி என்ற விக்னேஷ். இவர்கள் மீது கொலை, மிரட்டல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த மே மாதம் வாலாந்தரவையை சேர்ந்த விஜய், பூமி ஆகிய 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திக் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
கைதானவர்கள் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ததை தொடர்ந்து குண்டர் சட்டதில் கைதானது ரத்து செய்யப்பட்டது. நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
அதன்படி கார்த்திக் தினமும் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.
நேற்று மாலை கார்த்திக் தனது கூட்டாளி விக்கியுடன் கேணிக்கரை போலீஸ் நிலையத்துக்கு சென்று விட்டு நடந்து வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் 2 பேரை ஓட, ஓட விரட்டி வெட்டியும், வெடிகுண்டு வீசியும் படுகொலை செய்தது.
அங்கிருந்து தப்பிய கொலையாளிகள் சிறிது நேரத்திலேயே நயினார் கோவில் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் வாலாந்தரவையை சேர்ந்த ரூபன் (25), முரளி (27), பாஸ்கரன் (40), அர்ச்சுணன்(25), முருகேசன்(37) என தெரிய வந்தது. இவர்கள் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட விஜய், பூமியின் உறவினர்கள் ஆவார்கள்.
சரணடைந்த 5 பேரிடமும் தனிப்படை போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர். அப்போது பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.
கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்களது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
எனவே அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருக்க அரசு ஆஸ்பத்திரியில் 300-க் கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வஜ்ரா வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.
வாலாந்தரவையில் பதட்டமான சூழ்நிலை உள்ளதால் அரசு பஸ் இயக்கப்பட வில்லை. கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போலீசார் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #bombing #Murder
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சேர்ந்த காளிகுமார், இந்து மக்கள் கட்சியின் துணை அமைப்பான அனுமன் சேனாவின் மாநில செயலாளராக உள்ளார். இவர், காரில் தனது நண்பருடன், காரில் சென்றபோது சோழவரம் சுங்கச்சாவடி அருகே ஒரு கும்பல் காரை வழிமறித்து பெட்ரோல் குண்டு வீசியதாகவும், அதில் கார் தீப்பற்றி எரிவதாகவும் தகவல் கிடைத்தது. போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர்.
தன் காரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதாகவும், தன்னையும் கொல்ல முயன்றதாகவும் காளிகுமார் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சிபி சக்கரவர்த்தி கூறுகையில், ‘விளம்பரத்திற்காக தன் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக காளி குமார் நாடகமாடியிருக்கிறார். இதுதொடர்பாக காளிகுமார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்றார். #BombThrownDrama
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்