என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஷுப்மான் கில்"
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்றிரவு அரங்கேறிய 47-லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், மும்பை இந்தியன்சும் மல்லுகட்டின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின்னும், சுப்மான் கில்லும் களம் புகுந்தனர். பரிந்தர் ஸ்ரன் வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரி, ஒரு சிக்சர் ஓட விட்ட சுப்மான் கில், அதே உத்வேகத்துடன் விடாமல் மட்டையை சுழட்டினார். கிறிஸ் லின்னும் சரவெடியாய் வெடிக்க, ஸ்கோர் மளமளவென எகிறியது. இவர்கள் ஜோடியாக 96 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கிறிஸ் லின் 54 ரன்களில் (29 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர் ) கேட்ச் ஆனார். இதன் பின்னர், முந்தைய நாள் கேப்டனின் முடிவுகளை சரமாரியாக விமர்சித்த ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல், திடீரென 2-வது விக்கெட்டுக்கு இறக்கப்பட்டார். ஒரு சில ஓவர்கள் நிதானத்துக்கு பிறகு ரஸ்செல் தனது கைவரிசையை காட்டினார். மறுமுனையில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மான் கில் 76 ரன்களில் (45 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர் ) வெளியேறினார்.
அடுத்து கேப்டன் தினேஷ் கார்த்திக் வந்தார். மறுமுனையில் ரஸ்செல் ரன்வேட்டை நடத்தினார். அவரை கட்டுப்படுத்த வழிதெரியாமல் மும்பை கேப்டன் ரோகித் சர்மா விழிபிதுங்கிப் போனார். அவருக்கு எப்படி பந்து வீசுவது என்று தெரியாமல் பவுலர்கள் திண்டாடினர். ஆப்-சைடுக்கு வெளியே பந்து வீசினாலும் அதையும் நொறுக்கித் தள்ளினார். ஹர்திக் பாண்ட்யாவின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விளாசிய அவர், பும்ரா, மலிங்காவின் பந்து வீச்சையும் விட்டுவைக்கவில்லை. அவரது அசுரத்தனமான பேட்டிங்கால் கொல்கத்தா அணி மலைப்பான ஸ்கோரை எட்டிப்பிடித்தது.
20 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் ஒரு அணியின் அதிகபட்சமான ஸ்கோர் இதுதான். அது மட்டுமின்றி மும்பைக்கு எதிராக கொல்கத்தாவின் அதிகபட்சமாகவும் இது பதிவானது. இந்த தொடரில் தனது 4-வது அரைசதத்தை கடந்த ஆந்த்ரே ரஸ்செல் 80 ரன்களுடனும் (40 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 15 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
அடுத்து 233 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. குயின்டான் டி காக் (0), கேப்டன் ரோகித் சர்மா (12 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. விக்கெட் சரிவுக்கு மத்தியில் ஹர்திக் பாண்ட்யா மட்டும் நிலைத்து நின்று வாணவேடிக்கை காட்டினார். அவர் 17 பந்துகளில் 7 சிக்சருடன் அரைசதத்தை கடந்து மிரள வைத்தார். இந்த சீசனில் ஒரு வீரரின் அதிவேக அரைசதம் இது தான்.
ஹர்திக் பாண்ட்யா மிரட்டினாலும் ரன்தேவை அதிகமாக இருந்ததால் கொல்கத்தா அணியின் கையே ஓங்கி இருந்தது. பாண்ட்யா 91 ரன்களில் (34 பந்து, 6 பவுண்டரி, 9 சிக்சர்) கேட்ச் ஆனார். 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட்டுக்கு 198 ரன்களே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது.
தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோற்று இருந்த கொல்கத்தா அணி ஒரு வழியாக தோல்விப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. மேலும் கொல்கத்தா அணி 4 ஆண்டுகளுக்கு பிறகு (அதாவது தொடர்ந்து 8 தோல்விக்கு பிறகு) மும்பையை சாய்த்து இருக்கிறது.
கொல்கத்தா தரப்பில் ரஸ்செல், நரின், குர்னே தலா 2 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பியூஸ் சாவ்லாவுக்கு ஐ.பி.எல்.-ல் இது 150-வது விக்கெட்டாக அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 3-வது பவுலர் ஆவார். #IPL2019 #KKRvsMI
நேப்பியரில் நடந்த முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்ற 2-வது போட்டியில் 90 ரன் வித்தியாசத்திலும், 3-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நாளை (31-ந்தேதி) நடக்கிறது. முதல் 3 போட்டியில் வெற்றி பெற்றது போலவே இந்த ஆட்டத்திலும் இந்திய வீரர்களின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு எஞ்சிய 2 ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாளைய ஆட்டத்துக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருப்பார். விராட் கோலி இடத்தில் புதுமுக வீரர் ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த போட்டியில் காயம் காரணமாக டோனி ஆடவில்லை. அவர் முழு உடல் தகுதி பெற்றால் மட்டுமே நாளைய போட்டியில் ஆடுவார். இதனால் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெறுவது குறித்து உறுதியாக தெரியவில்லை.
இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டதால் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். முகமது சிராஜ், ஜடேஜா ஆகியோர் விளையாட தயார் நிலையில் உள்ளனர்.
இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. பேட்டிங்கில் தவான், ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோரும், பந்துவீச்சில் முகமது ஷமி, சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
நியூசிலாந்து சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் 4-வது மற்றும் 5-வது ஒருநாள் போட்டிக்கான அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரேஸ்வெல், சோதி நீக்கப்பட்டு நீஷம், ஆஸ்ட்லே சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து ஆறுதல் வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வத்தில் நியூசிலாந்து உள்ளது. கேப்டன் வில்லியம்சன், முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் மட்டுமே அந்த அணியில் சிறப்பாக பேட்டிங் செய்கிறார்கள். இதனால் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இரு அணிகளும் நாளை மோதுவது 105-வது போட்டியாகும். இதுவரை நடந்த 104 போட்டியில் இந்தியா 54-ல், நியூசிலாந்து 44-ல் வெற்றி பெற்றுள்ளன. 1 ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. 5 போட்டிகளில் முடிவு இல்லை.
நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதனால் 4-வது போட்டியில் இளம் வீரரான ஷுப்மான் கில் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இளம் வீரர்கள் இந்திய அணிக்கு வருவது குறித்து விராட் கோலி பதில் அளித்தார்.
அப்போது ஷுப்மான் கில்லுக்கு புகழாரம் சூட்டினார். ஷுப்மான் கில் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘சில இளம் வீரர்கள் மிகவும் அபாரமான திறமையை பெற்றுள்ளனர். பிரித்வி ஷா கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அணியில் இடம்பிடித்து விட்டார். ஷுப்மான் கில் மிகவும் அற்புதமான திறமையை பெற்றுள்ளார். வலைப்பயிற்சியின்போது அவரது ஆட்டத்தைப் பார்த்து நான் மெய் சிலிர்த்துப் போனேன். நான் 19 வயதில் இருக்கும்போது ஷுப்மான கில் செய்ததில் 10 சதவீதம் கூட செய்ததில்லை.
அவர்கள் இந்திய அணிக்கு வருவது கிரிக்கெட்டிற்கு சிறப்பானது. சிறப்பான தகுதியுடன் இந்திய அணிக்கு வரும்போது, அவர்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாலும், வளர்ச்சி வாய்ப்பு வழங்கப்படுவதாலும் நாங்கள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறோம்’’ என்றார்.
இது தொடர்பாக தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது:-
சாம்பியன் கிரிக்கெட் வீரராக உருவாகி வரும் ரிசப் பந்த் ஆஸ்திரேலியாவில் மூன்று 20 ஓவர் ஆட்டம், 4 டெஸ்டில் தொடர்ந்து ஆடினார். தற்போது அவருக்கு 2 வாரங்கள் ஒய்வு தேவை. இதனால்தான் ஒருநாள் தொடரில் அவரை சேர்க்கவில்லை. எதிர்கால நட்சத்திர வீரராக உள்ள ரிசப் பந்த் தொடர்பாக தேர்வுக்குழு கவனத்துடன் செயல்படுகிறது. 2019 உலகக்கோப்பை அணியின் செயல் திட்டத்தில் அவர் இடம் பெற்றுள்ளார்.
கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை ரிசப் பந்த் கடைபிடித்து வருகிறார். இங்கிலாந்தில் அவர் கேட்ச்களை பிடித்து தனது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தார்.
இளம் வீரர் ஷுப்மான் கில் சர்வதேச போட்டிக்கு தயாரானது மகிழ்ச்சி அளிக்கிறது. விகாரி, அகர்வால், பிரித்வி ஷா, கலீல் அகமது ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அப்படி செய்யாவிட்டால் ஆஸ்திரேலியா டெஸ்டில் அவர் ஆடி இருக்க முடியாது. 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் முகமது ஷமிக்கு அவரது உடல் தகுதி சாதகமான அம்சமாகும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ரஞ்சி டிராபியில் 19 வயது இளம் வீரரான ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் 268, 148, 69, 91 என அசத்தியுள்ளார்.
புஜாராவை போல் 500 ரன்களுக்கு மேல் குவிக்கலாம், ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பந்துகளை சந்திப்பது எளிதான காரியம் அல்ல. அது இளைஞர்களுக்கான அளவுகோல் என்று ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார்.
புஜாரா குறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘டெஸ்ட் போட்டியில் ஒன்றிரண்டு பேட்ஸ்மேன்களால் மட்டுமே நாள் முழுவதும் நிலைத்து நின்று பேட்டிங் செய்ய இயலும். ஒரே தொடரில் புஜாரா 1200-க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்துள்ளார். இது உண்மையிலேயே தனிச்சிறப்பு வாய்ந்தது. பேட்ஸ்மேன்களால் 500 ரன்கள் எடுப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், அதிக அளவிலான பந்துகளை சந்தித்தது இளம் வீரர்களுக்கான அளவுகோல்.
களத்தில் நின்று பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் புஜாராவிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஆஸ்திரேலியாவில் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு எதிராக கடுமையான ஆடுகளத்தில் ரன்கள் குவிப்பது சிறப்பானது. அவரது பேட்டிங் விரும்பு பார்ப்பேன். தற்போதைய காலத்தில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் குவித்து வருகின்றனர்’’ என்றார்.
பின்னர் பஞ்சாப் முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் பஞ்சாப் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மான் கில் 36 ரன்னுடனும், அன்மோல்ப்ரீத் சிங் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மான் கில் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் அன்மோல்ப்ரீத் சிங் சதம் அடித்து இன்றைய ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இருவரின் ஆட்டத்தால் பஞ்சாப் 2-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்துள்ளது. அன்மோல்ப்ரீத் சிங் 124 ரன்னுடனும், சவுத்ரி 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
கோனி (5), பால்டெஜ் சிங் (3) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் தமிழ்நாடு அணி 215 ரன்னில் சுருண்டது. பின்னர் பஞ்சாப் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இளம் வீரரான ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 328 பந்தில் 29 பவுண்டரி, 4 சிக்சருடன் 268 ரன்கள் குவித்தார். இவரது ஆட்டத்தால் பஞ்சாப் அணி 479 ரன்கள் குவித்தது. தமிழ் நாடு அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 107 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
264 ரன்கள் பின்தங்கிய தமிழ் நாடு அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் தமிழ்நாடு 3 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்திருந்தது. பாபா இந்திரஜித் 37 ரன்னுடனும், சாய் கிஷோர் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. பாபா இந்திரஜித் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சாய் கிஷோர் 9 ரன்னில் வெளியேறினார்.
விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 175 பந்துகள் சந்தித்து 74 ரன்கள் சேர்த்தார். விஜய் சங்கர் 80 பந்தில் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருக்க கடைசி நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. ஆட்டம் முடியும்போது தமிழ் நாடு 121 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 383 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் ஆட்டம் வெற்றித்தோல்வியின்று டிராவில் முடிந்தது.
டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. ரூதர்போர்டு (70), செய்பெர்ட் (59), நீஷம் (79 அவுட்இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து ‘ஏ’ 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்தது.
309 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி 2-வது பேட்டிங் செய்தது. மயாங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அகர்வால் 24 ரன்களிலும், ஷுப்மான் கில் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 54 பந்தில் 54 ரன்களும், மணிஷ் பாண்டே 36 பந்தில் 42 ரன்களும் சேர்த்தனர். விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 43 பந்தில் 47 ரன்கள் அடிக்க, ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் 80 பந்தில் 87 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா ‘ஏ’ அணி 49 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது ஒருநாள் போட்டி டிசம்பர் 9-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 11-ந்தேதியும் நடக்கிறது.
மிடில் ஆர்டர் வரிசையில் சிறப்பாக விளையாடும் ஷுப்மான் கில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் தொடரில் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடினார்.
அதன்பின் உள்ளூர் தொடர்களில் பங்கேற்று அசத்தி வருகிறது. தற்போது தியோதர் டிராபி நடைபெற்று வருகிறது. நேற்று இந்தியா ‘ஏ’ - இந்தியா ‘சி’ அணிகள் மோதின. இந்தியா ‘சி’ அணிக்காக விளையாடி வரும் ஷுப்மான் கில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
இதனால் இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இந்திய அணியில் விளையாடுவது குறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘நான் இந்திய அணிக்காக விளையாட தயாராக இருக்கிறேன்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அடுத்த தொடரில் எனக்கு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். ரன் குவிப்பால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்’’ என்றார்.
அதன்பின் வந்த நிதிஷ் ராணா 68 ரன்களும், தினேஷ் கார்த்திக் 32 ரன்களும், கேதர் ஜாதவ் 41 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் குவித்தது.
பின்னர் 294 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘சி’ அணியின் ரகானே, அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரகானே 14 ரன்னிலும், முகுந்த் 37 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 2 ரன்னிலும் வெளியேறினார்கள்.
இதனால் இந்தியா ‘சி’ அணி 85 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இஷான் கிஷான் 60 பந்தில் 69 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது. 5-வது விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ஷுப்மான் கில் சதம் அடித்தார்.
ஷுப்மான் கில் சதத்தாலும், சூர்யகுமார் அதிரடி ஆட்டத்தாலும் இந்தியா ‘பி’ 47 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷுப்மான் கில் 111 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 106 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா ‘சி’ இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 27-ந்தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா ‘பி’ - இந்தியா ‘சி’ பலப்பரீட்சை நடத்துகின்றன.
தொடக்க வீரர்களாக மனன் வோரா, ஷுப்மான் கில் ஆகியோர் களம் இறங்கினார்கள். மனன் வோரா 29 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்து மந்தீப் சிங் 39 ரன்களும், யுவராஜ் சிங் 48 ரன்களும், குர்கீரத் சிங் 31 ரன்களும் அடித்தனர். ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 131 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 115 ரன்கள் அடித்தார். இவரது சதத்தால் பஞ்சாப் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் குவித்தது.
பின்னர் 291 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இமாச்சல பிரதேச அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரசாந்த் சோப்ரா 95 ரன்களும், அடுத்து வந்த விக்கெட் கீப்பர் அங்கஷ் பெய்ன்ஸ் 56 ரன்களும் அடித்தனர்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் வெளியேற இமாச்சல பிரதேசம் 48.3 ஓவரில் 255 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் பஞ்சாப் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சித்தார்த் கவுல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்