search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people died in the accident"

    • பூலாவரி மேம்பாலம் அருகே சென்ற போது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் அவர்கள் மீது மோதியது.
    • இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தரேஸ்வரன், ராவணன் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

    சேலம்:

    சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி உடையார்காடு பகுதியை சேர்ந்தவர் ராவணன்.இவரது மகன் சுந்தரேஸ்வரன் (வயது 25). இவர்கள் இருவரும் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பூலாவரி மேம்பாலம் அருகே சென்ற போது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் அவர்கள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சுந்தரேஸ்வரன், ராவணன் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர். பலத்த காயம் அடைந்த சுந்தரேஸ்வரன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். ராவணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல் அரிசிபாளையம் ரத்தினசாமி புரத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் (65). இவர் சத்திரத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் சுப்பிரமணியன் காயம் அடைந்தார். அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • நாட்டறம்பள்ளி அருகே நடந்தது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை முத்தானும் பகுதியை சேர்ந்தவர்கள் ஷாருக்கான் (வயது 28). இவரது சகோதரர் அக்கீம் ( 30). ஆட்டு வியாபாரி. அதே பகுதியைச் சேர்ந்த பாபு மற்றும் அவரது மகன் அப்துல் சலாம் (9) இவர் புதுப்பேட்டை பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர்கள் இன்று அதிகாலை 5 மணி அளவில் புதுப்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு மாவட்டம் குந்தாரப்பள்ளியில் நடைபெறும் வரும் ஆட்டுச் சந்தைக்கு செல்ல மினி லாரி ஒன்றில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர்.

    அதில் மினி லாரியை சஞ்சீவ் ( 29) என்பவர் ஓட்டி சென்றார்.

    சென்னையில் இருந்து கொரியர் லாரி ஒன்று கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது பையணப்பள்ளி கூட்ரோடு நெடுஞ்சாலை யில் அருகே வரும்போது எதிர்பாராத விதமாக 2 லாரிகளும் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் மினி லாரி தலை குப்புற கவிழ்ந்தது. அதில் இருந்த ஷாருக்கான் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அப்துல் சலாமை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அப்துல் சலாம் தந்தை கண் முன்னே பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம் அடைந்த பாபு, அக்கீம், சஞ்சீவ் ஆகியோரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம் பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஷாருக்கான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×